Tuesday, February 22, 2011

கட்சிகளின் கவனத்திற்கு.....

இந்த தேர்தல் ஆண்டில், நமது அடுத்த 5 ஆண்டு விதியை நிர்ணயிப்பதில், இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகம் இருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் அவர்களிடம், வாக்காளர்களாகிய நாம் எதிர்பார்ப்பது பற்றிய எனது சிந்தனைகள்.


வேட்பாளர்கள் தேர்வு :

முதலில் சமூக விரோதிகளுக்கும்,  ஊழல் செய்தவர்களுக்கும்  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படவேண்டும்.

தொகுதிகள் பற்றி அதிகம் தெரிந்த, தொகுதி மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ள, கறை படியாத கரங்களுடன் கூடிய வேட்பாளர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதியிலும் இருக்கும் குறைபாடுகள், மக்களின் தேவைகள், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஒரு பட்டியல் தயாரித்து, கட்சியிடம் வழங்கி, அது மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலை சந்திக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வேட்பாளர்கள், படித்தவர்களாகவோ, வசதி குறைவானவர்களாகவோ இருந்தாலும் கட்சிகள், மக்கள் நலன் கருதி இவர்களுக்கு வாய்ப்பு அளித்து ஜெயிக்கவைக்கவேண்டும்.

தொகுதி மக்களும், தொகுதியும் செழிப்பாக இருந்தால் அடுத்த தேர்தலில் குறைந்த செலவு செய்தாலே ஜெயிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.


மந்திரிகள் தேர்வு :

ஒவ்வொரு துறையைப் பற்றி முழுதும் தெரிந்த, ஒரு சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட நபர்கள் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு இடையூறு இல்லாத சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே மாநிலம் சிறந்த வளர்ச்சிபெறும்.

மந்திரி ஆக விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தத் துறைகளில் செய்ய விரும்பும் பணிகள் பற்றிய பட்டியல் தயார் செய்து கட்சிகளிடம் அளித்து அதன் அடிப்படையில் மந்திரிகள் தேர்வு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு மந்திரிக்கும் துணையாக ஆர்வமும் துடிப்பும் உள்ள ஒரு இளைஞர் படை ஏற்படுத்தப் பட்டு துறையின் பணிகள் ஆய்வு செய்யப்படவேண்டும்.  ஒவ்வொரு பகுதியின் பள்ளி கல்லூரிகளின் மாணவர்களின் பங்களிப்பும் ஆர்வமுள்ள தனியாரின் பங்களிப்பும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் முன்னேற்றத்துக்கு முழு மனதுடன் பாடுபட உறுதி கொண்டு செயல் படவேண்டும்.



பிரார்த்தனை நல்லாவே இருக்கு... மஹாலிங்கம் இத கொஞ்சம் அவசரமாக் கவனிங்க...  நாங்கள்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்...  ஒரு விடியலை எங்களுக்குக் காட்டுங்க...

சதுரகிரியாரே போற்றி.... ஓம் நம சிவாய....

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

யோசிக்க வேண்டிய விஷயம்....

Sankar Gurusamy said...

Dear Mano, This is the bare truth in our current system of Jananayagam. We are dependant on the Political parties. We are at their mercy. So This is request to them to behave the way we expect.

Thanks for your visit and comments.

shanmugavel said...

Really possible?mmmmm

Sankar Gurusamy said...

Shanmugavel, If the current political parties have some Will definitely this is possible. This is also an easy solution to our perennial problems. But Question remains about their intentions and Real Will and Wish to serve us.

Let Lord Save us all...

பாலா said...

அன்புள்ள சங்கர் ,

உங்களுடைய கணிப்பு சரிதான். இப்படி நடந்தால் நம்நாடு வல்லரசு தான்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Sankar Gurusamy said...

Bala, Thanks for your visit and comments...