Tuesday, February 14, 2012

நம் சுய ஆத்ம தரிசனம்...

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம்.

உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.

இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில‌ குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :

* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது

இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.

நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!

21 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..கருத்துக்களைப் பகிருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கட்டுரை. இராஜேஸ்வரி அக்கா சொன்னது போல் நிதானமாக அணுகினால் கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாது,

Sankar Gurusamy said...

திரு சே குமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்..

rishvan said...

Nice and true lines... thanks to share... www.rishvan.com

Sankar Gurusamy said...

திரு சுரேஷ், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்..

பாலா said...

அருமை சார். நம் சுயத்தை உணர்த்தும் அந்த தருணங்கள்தான் மிகப்பெரிய ஆசான்கள்.

Sankar Gurusamy said...

திரு பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் கருத்துக்களை பகிருங்கள்..

கூடல் பாலா said...

\\\இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.\\ ஆம்

Sankar Gurusamy said...

திரு கூடல் பாலா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள். தங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

'பசி'பரமசிவம் said...

தாங்கள் பின்தொடரும் வலைப் பதிவுகளில் என்னுடைய ‘கடவுள் பொய்! அணுக்கள் மெய்!! [kadavulinkadavul.blogspot.in] என்னும் என் வலைப்பதிவையும் சேர்த்திருக்கிறீர்கள்.
நன்றி நண்பரே.

இ.வெள்ளத்துரை said...

அசாதரணமான சூழல்களை விளக்கும் கருத்துக்கள் மிகவும் சூப்பர்.....ரெம்போ அனுபவப் பூர்வமா எழுதி உள்ளீர்கள்....வாழ்த்துக்கள்....நன்றி...

rishvan said...

உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

Sankar Gurusamy said...

திரு சுரேஷ், எனது வலைப்பதிவிற்கு இந்த விருதை வழங்கி பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

Sankar Gurusamy said...

திரு இ வெள்ளைதுரை, தங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள். தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

Sankar Gurusamy said...

திரு பரமசிவம், தங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது. நான் எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்பவன் என்பதால் தங்கள் வலைத்தளத்தையும் தொடர்கிறேன். தங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள். தங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்..

'பசி'பரமசிவம் said...

நல்ல மனம் கொண்டவர்கள் நல்ல நோக்கத்துடன் கருத்துகள் வெளியிடுவதை...செயல்படுவதை மதிப்பவன் நான்.

தங்களை மிகவும் மதிக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

சுய ஆத்ம தரிசனத்தைப் பற்றி அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...

திரு பரமசிவம்,
திரு கிளியனூர் இஸ்மத்,

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. கருத்துக்களை பகிருங்கள்.

S.Muruganandam said...

//ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.//

நிதர்சனமான உண்மை

Sankar Gurusamy said...

திரு கைலாஷி ஐயா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்..