Monday, February 13, 2012

வாழ்க்கைத் தேடுதல்...

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்

தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை.

தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...

இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.

ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள்.

இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை  என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம்.

இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!

7 comments:

shanmugavel said...

ஆமாம்,மனிதன் எதையாவது தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.தன்னை அறிந்தால் தேடுதல் முடிவடைந்து விடும் என்றே கருதுகிறேன்.பகிர்வுக்கு நன்றி

rajamelaiyur said...

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..
//

நானும் அதையே வேண்டுகேன்றேன்

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திரு "என் ராஜபாட்டை"- ராஜா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி..

Learn said...

அழகாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Sankar Gurusamy said...

தமிழ்த்தோட்டம், தங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி..

தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் கருத்துக்களை பகிருங்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நம்மை அறிந்தால்
நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம்

மிகப் பயனுள்ள அற்புதப்பகிர்வுகள்.. நன்றி ஐயா..

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள் தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்.