Friday, March 2, 2012

பயமாக இருக்கிறது....

நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான்.

சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.

இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.

இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது.

பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..

சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

23 comments:

Unknown said...

அன்பரே!
தங்கள் கவலை ஞாயமானது!
ஊற்றே நஞ்சாகிவிடடால் கேணி
பயன்படாது இன்றைய சமுதாயம்
சீர் கெட்டுக் கிடக்கிறது!

புலவர் சா இராமாநுசம்

shanmugavel said...

இதெல்லாம் சினிமா,சீரியல் கொண்டுவரும் பிரச்சினைகள்தான்.பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் மேலான வருகைக்கும் தொடர்ந்த கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வருக, தங்கள் கருத்துரைகளைத் தருக..

Sankar Gurusamy said...

புலவர் சா ராமானுஜம் அவர்களுக்கு, தங்கள் மேலான வருகைக்கும் பின்னூட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துரைகளைப் பகிருங்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் க்ருத்துக்களைப் பகிருங்கள்..

kaialavuman said...

சமீப காலத் திரைப்படங்களில் சிறு வயதிலேயே நாயகனும் நாயகியும் காதல் செய்ய ஆரம்பித்து விடுவதாகக் காட்டுவதும் ஆரம்பித்து்ள்ளது (உதா, பருத்தி வீரன், வெயில், பூ, பதினாறு) அதற்கு ஒரு டூயட் பாடலும் போட்டு அதை ஞாயப்படுத்தி விடுகிறார்கள். அந்தத் திரைப்படங்களை நாம் குடும்பத்துடன் தொலைக்காட்சியிலும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் தாக்கமாகக் கூட இருக்கலாம்.

Sankar Gurusamy said...

திரு வேங்கட ஸ்ரீனிவாசன், தாங்கள் கூறுவதும் சரிதான்.. தங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துரைகளைப் பகிருங்கள்.

Muthukumar Arumugam said...

உலக மயமாக்கல் என்னும் பூதம் கிளம்பிய ஆண்டு சுமார் 20 வருடங்களுக்கு முன்னால். அது இன்று வளர்ந்து வேரூன்றி விருட்சமாகி இந்த உலக நாடுகளை ஒரே கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வர முயல்கிறது. இதற்கு ஒரே தீர்வு, டிவி, இன்டெர்னெட், சினிமா, நுகர்வு கலாச்சாரம் போன்ற விஷ தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயல்வது தான். மீண்டும் நாம் கற்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். நமக்கு டெக்னாலஜி வேண்டாம் என நாம் சற்று உரக்க கூறி அதை அமுல் படுத்த வேண்டும்.

Muthukumar Arumugam said...

டெக்னாலஜியை நாம் உதறித் தள்ள முற்பட வேண்டும். நுகர்வு கலாச்சாரத்திற்கு விடை கொடுக்க வேண்டும். டிவி, சீரியல், சினிமா, இன்டெர்னெட் போன்றவற்றை ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். நம் முன்னோர் வாழ்ந்த நல்வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.

சிவானந்தம் said...

இந்த செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நானும் இதை கவனித்திருக்கிறேன். இப்போதைய சிறுவர் சிறுமிகளிடம் பாய் /கேர்ள் பிரண்ட் வைத்துக் கொள்வது ஒரு பிரஸ்டீஜ். ஒரு பெண் போன் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. `டேய் வீட்டுல தெரிஞ்சி அம்மா திட்ராங்கடா. பரீட்சை வேற வருது. நாம்ப பரிட்சையில பாஸ் பண்ணனும். அதனால அதுக்கப்புறம் பேசுவோம்` என்று அக்கறையாக தன் காதலனுக்கு அட்வைஸ் பண்ணியது. இது ஏழாவது படிக்கும் பெண். இதை சிறுமி என்றா சொல்ல முடியும்?

இவர்கள் ஜெயிக்கும் காதலை மட்டுமே சினிமாவில் பார்கிறார்கள். நிஜத்தில் சீரழியும் சிறுமிகளை பேப்பரில் படிப்பதில்லை. தினம் பேப்பர் படிக்கும் பழக்கத்தையோ அல்லது ஏமாந்த பெண்களின் செய்திகளையோ இவர்களுக்கு படித்து காட்டும் முறை வந்தால் ஓரளவாவது இவர்கள் தப்பிப்பார்கள்.

Sankar Gurusamy said...

திரு முத்துக்குமார் ஆறுமுகம், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு மாற்றம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படும் சமூக மாற்றமே பயத்தை வரவழைக்கிறது. இதற்கு முன்பும் இப்படி இருந்திருக்கலாம். நாம் அனுபவிக்காததால் அதுபற்றி கூற இயலவில்லை.

மாற்றங்களை வரவேற்பதுதான் நாம் செய்யக்கூடிய ஒரே காரியம். ஏனெனில் யார் வரவேற்றாலும் எதிர்த்தாலும் இந்த மாற்றங்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்துதான் தீரும்.

நாம் இந்த நுகர்வுக் கலாச்சாரம் சார்ந்த பொருட்களை பகிஷ்கரித்தாலும், நம் சூழல் அப்படி இல்லாததால் அதன் தாக்கம் நம் குடும்பங்களிலும் இளைய தலைமுறையினரிடமும் எதிரொலிக்கவே செய்யும்.

எனவே இயற்கை கொண்டு வரும் இந்த மாற்றத்தை ஏற்க என் மனதை தயார் செய்து வருகிறேன்.

தங்கள் மேலான வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்.

Sankar Gurusamy said...

திரு சிவானந்தம், தாங்கள் கூறுவதும் உண்மைதான். முழுமையான தகவல்கள் கொடுத்தாலும் இளைய சமூகத்திடம் சேர்வதில்லை. அவர்கள் ரொம்ப செலக்டிவ்வாக அவர்களுக்கு சவுகரியமானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எது அவர்களுக்கு சேரவேண்டுமோ அது சேர்வதில்லை. இதுதான் நிஜம்.

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள். தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

தான் பயன்படுத்துகிற வார்த்தைக்ளின் பொருள்
அறியாமலேயே வார்த்தையை பயன்படுத்தும்
இன்றைய சிறுவர்களின் நிலை பரிதாபத்துக்
குறியதாகத்தான் உள்ளது
சிந்திக்கத்தூண்டிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...

திரு ரமணி ஐயா, தங்கள் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

MARI The Great said...

நமது ஒவ்வொரு செயலுக்கும் அதற்க்கு இணையான பின் விளைவுகள் உண்டு

இதைத்தவிர வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை எனக்கு..

Sankar Gurusamy said...

திரு வரலாற்று சுவடுகள், தங்கள் மேலான வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துரைகளைப் பகிருங்கள்.

கே. பி. ஜனா... said...
This comment has been removed by the author.
Sankar Gurusamy said...

திரு கே பி ஜனா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துளைப் பகிருங்கள்.

கே. பி. ஜனா... said...

//எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான். //
நல்ல வரிகள்... எல்லாரும் நலம் பெற பிரார்த்திப்போம்.

ப.கந்தசாமி said...

காலம் மாறிக்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்கு உலகத்தைப் பற்றி அவ்வப்போது சொல்லிக்கொடுங்கள். உலகின் அவலங்களை நேரில் கூட்டிக்கொண்டு போய்க் காண்பியுங்கள். நம்மால் செய்யக்கூடியது அவ்வளவுதான்.

Sankar Gurusamy said...

திரு பழனி கந்தசாமி ஐயா, தங்கள் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துரைகளைப் பகிருங்கள்.

Vidhaigal said...

சினிமாவில் எவ்வளவோ நல்ல கருத்துக்கலும் சொல்ல படுகிறது.. ஆனால் அனைவரும் தீய கருத்துகளையே எடுத்துக்கொள்கிறோம்.. முதலில் அதை பிரித்தறிய கற்று கொடுக்க வேண்டும்...