இது தேர்தல் ஆண்டு. தேர்தலுக்காக எந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிதம் என்ற ஆய்வு ஊடகங்களில் நடைபெறுகிறது. ஆனால் மக்களுக்குப் பயனளிக்கக்கூடியதா இது? இந்த நேரத்தில் பொறுப்பான ஊடகங்களின் பணி என்னவாக இருக்கவேண்டும்?
ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய தேவைகளின், குறைகளின் பட்டியல் உடனடியாகத் தயாரிக்கப்படவேண்டும்.
எத்தனை அரசுப்பள்ளிகளில் கட்டிட, ஆசிரியர் பற்றாக் குறைகள் உள்ளன? அவை எவை? எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை? தனியார் கல்விக் கூடங்களின் கட்டண விகிதங்கள் சரியானவைதானா? எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவேண்டும்?
எவ்வளவு சாலைகள அமைக்கப்படவேண்டும்? அவற்றிற்கான விவரங்கள். அனைத்து கிராமங்களுக்கும் சரியான சாலை வசதி செய்யப்பட்டுள்ளதா?
எவ்வளவு பாலங்கள் தேவை? அவற்றிற்கான விளக்கங்கள்.
தொகுதியின் பொருளாதார ஆதாரம் என்ன? பெரும்பான்மையோரின் வாழ்வாதரமாக இருக்கக் கூடிய தொழில் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்சாலைகள் என்ன? அவற்றிற்குத் என்ன தேவை? அல்லது அவற்றால் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
விவசாய, குடிநீர் நீராதாரங்களின் இப்போதய நிலை என்ன? அவற்றை செம்மைப் படுத்த செய்ய வேண்டியது என்ன?
குடிநீர் , கழிவு நீரகற்று வசதி இல்லாத அல்லது சரியாக இல்லாத இடங்கள் எத்தனை? அவற்றை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
இன்னும் எத்தனை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை? இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் உடனடித் தேவை என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மேலும் பல இருக்கக் கூடிய குறைகள் பட்டியலிடப்படட்டும்.
இந்தப் பட்டியல் ஒவ்வொரு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மற்றும் ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வழங்கப்படவேண்டும்.
இவற்றிற்கான நிதி ஆதாரங்கள் திரட்டுதல் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
அவர்கள் இந்தக் குறைகளைக் களைய என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்ற திட்ட வரைவு கேட்கப்பட வேண்டும்.
இதற்கு கட்சியின் பங்கும் ஆட்சியின் அவசியமும் விவாதிக்கப்படவேண்டும்.
இந்தப் பட்டியலின் மீது விவாதங்களும் பட்டிமன்றங்களும் தொகுதிக்குள் நடத்தப்படவேண்டும்.
சென்ற தேர்தலின் போது இதுபோல எடுக்கப்பட்ட பட்டியலுடன் இப்போதய பட்டியல் ஒப்பீடு செய்யப்பட்டு சென்ற முறை இருந்த மக்கள் பிரதிநிதியின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
ஒவ்வொரு நாளும் சில தொகுதி வேட்பாளர்களுடன் இந்த பட்டியலுடன் நேர்முக விவாதங்கள் நடத்தி அவர்களை நல்லவைகளை செய்யத் தூண்டவேண்டும்.
கனவு காண நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? இப்போதய ஊடகங்களுக்கு, சினிமாவையும், அரசியல்வாதிகளின் சாதனைகளைப் பேசவுமே நேரம் சரியாக இருக்கிறது... இவைகளையும் செய்வார்களா???
ஆண்டவா... மஹாலிங்கம், இவங்களுக்கு நல்ல புத்தியக் குடுத்து மக்களுக்காக செயல்பட வையுங்க...
சதுரகிரியாரே போற்றி... அரோகரா....
ஒவ்வொரு நாளும் சில தொகுதி வேட்பாளர்களுடன் இந்த பட்டியலுடன் நேர்முக விவாதங்கள் நடத்தி அவர்களை நல்லவைகளை செய்யத் தூண்டவேண்டும்.
கனவு காண நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? இப்போதய ஊடகங்களுக்கு, சினிமாவையும், அரசியல்வாதிகளின் சாதனைகளைப் பேசவுமே நேரம் சரியாக இருக்கிறது... இவைகளையும் செய்வார்களா???
ஆண்டவா... மஹாலிங்கம், இவங்களுக்கு நல்ல புத்தியக் குடுத்து மக்களுக்காக செயல்பட வையுங்க...
சதுரகிரியாரே போற்றி... அரோகரா....
2 comments:
உங்களின் எண்ணம் சிறப்பக உள்ளது ///
நிச்சயம் ஊடகங்கள் கொஞ்சம் கவனிக்கணும்
Dear Mr.Arasan, Thanks for your visit and comments.
Post a Comment