தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவனை போதும் என்று சொல்ல வைக்கக் கூடிய தானமும் இதுதான். ஒரு அளவுக்கு மேல் ஒரு சாதாரண மனிதனால் சாப்பிட முடியாது.
மேலும் அன்னதானம்தான் மனிதனுக்குள் ஆன்மாவாக இருக்கும் கடவுளுக்கு படைக்கப்படும் படையல். உண்மையான மானுட சேவை. இதில் இருக்கும் ஆன்மீக சூட்சுமம் அளவிட முடியாதது. அன்னதானம் செய்வதாலும், அதில் கலந்துகொள்வதாலும், அதில் நமது பங்களிப்பை செலுத்துவதாலும் பலவித ஆன்மீக நன்மைகள் சூட்சுமமாக ஏற்படும்.
பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் இப்போது அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. எல்லாமே சிறப்புக்குறியதுதான் என்றாலும் நான் கண்டு வியந்த ஒரு சில அன்னதானங்களைப் பற்றிய பதிவு இது.
1) 2009ம் ஆண்டு எனது சீக்கிய நண்பர் ஒருவர் என்னை மஹாராஷ்ட்ராவில் உள்ள நாண்டெட் என்ற சீக்கியர்களின் புனித தலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருக்கும் குருத்துவாரக்களில் (சீக்கியர்களின் கோவில்) நடைபெறும் அன்னதானம் ஈடு இணையற்றது. வீட்டு சாப்பாட்டின் சுவையுடன் சுத்தமும் சுகாதாரமுமான சூழலில் மிகவும் அற்புதம். அங்கு சேவை செய்பவர்களின் கனிவான கவனிப்பும் அற்புதம். 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து அவர்கள் செய்யும் அன்னதானத்தில் நானும் கலந்துகொண்டு சாப்பிட்டு, சேவையில் ஈடு படுத்திக் கொண்டு மகிழ்ந்தேன்.
2) 2003ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வைத்து நடத்தி வரும் அன்னதானத்திற்கு அழைத்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல் பட்டு வரும் அன்னதானம் அது. நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களால் முடிந்தவற்றை வைத்து, தாங்களே சமையல் செய்து அன்னதானம் அளித்தது அதிசயமாக இருந்தது. பிச்சைக்காரர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் அதிகம் கலந்து கொண்ட அந்த அன்னதானம் நண்பர்களின் கனிவான கவனிப்பாலும் அற்பணிப்பு உணர்வாலும் என் நினைவில் நின்று விட்டது.
3) சதுரகிரிக்கு நான் செல்லும்போதெல்லாம் அங்கு உள்ள கஞ்சி மடத்தில் நடைபெறும் அன்னதானத்தில்தான் சாப்பிடுவேன். அங்கு இருப்பவர்கள் வருபவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் உணவு வழங்கும் அவர்களின் சேவை உணர்வு பாராட்டுக்கு உரியது.
இவை தவிரவும் பல இடங்களில் நான் அன்ன தானத்தில் கலந்துகொண்டிருந்தாலும், இவை மூன்றும் அன்னதானத்துக்கு உதாரணமாக என்னால் கருதப்படுபவை. எனவே பகிர்ந்துள்ளேன்.
கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் அன்னதானம் நிறைய நடைபெற்று ஒரு பசி இல்லாத உலகம் உருவாக அருள் செய்யுங்க...
சதுரகிரி நாதனே சரணம்....சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....
9 comments:
அன்புள்ள ஐயா,
திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார், வடலூரில் 1867 ம் ஆண்டு தமது திருக்கரத்தால் துவக்கி வைத்த அற்றார்அழிபசி தீர்க்கம் அன்னதானத் தொண்டு இன்று வரை தொடர்ந்து நடந்து வருகின்றது.
இனியும் தொடர்ந்து நடந்து வரும்.
தினசரி மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறுகின்றது.
வடலூருக்கும் ஒருமுறை வருகை தந்து வள்ளற்பெருமானாரின் அருளைப் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றேன்.
திரு அருட்சிவஞானசித்தர், நிச்சயம் ஒரு முறை செல்ல வேண்டும் என எண்ணி இருக்கிறேன்.. அவனருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும். அவர் திருவுளம் என்று இருக்கிறதோ அன்று நிச்சயம் வருவேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அன்னதானம் இந்துக்களுடன் எல்லா நிகழ்வுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது.இல்லாத கோயில்கள் இல்லை.உங்கள் அனுபவமும் நன்று.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அன்னதானப் பிரபுவே சரணம்.
திரு கைலாஷி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
it is better to teach him to make bread rather than giving him one...
பசித்தவனுக்கு உணவை கொடுப்பதை விட உணவு கிடைப்பதற்கு கற்று கொடு
திரு சூர்யஜீவா, நிச்சயம், பசித்தவனுக்கு முதலில் உணவு தரவேண்டும். அவன் சுயமாக சம்பாதிக்க கற்றுக் கொள்ளும் வரை. தங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன்..
நம் தேசத்தில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகளை இந்த அன்ன தானம் மூலம் குறைக்க முடியும் என நான் நம்புகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
thirumathi bs sridhar
எனது பதிவை தங்கள் வலைச்சரத்தில் இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி..
Post a Comment