இன்று Times of India வெப் சைட்டில் இருந்த ஒரு செய்தி : ஆஸ்திரேலியாவில் ஒரு ரேடியோ விருந்தினர் இந்தியாவைப்பற்றியும் கங்கையைப் பற்றியும் அவதூறாகப் பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்கும் ஒரு செய்திதான் அது. அதன் சுட்டி கீழே :
Australian radio host calls India 'shit hole', Ganga a 'junkyard'
உண்மையில் ஒரு வெளிநாட்டவர் செய்ததை ஒரு தேசப்பற்று (????) உணர்வுடன் நானும் கண்டிக்கும் அதேவேளையில் இது பற்றி ஒரு நேர்மையான கேள்வியை வைக்கவும் வேண்டி இருக்கிறது...
இது பொய்யா? உண்மையா? நம் தேசம் உண்மையில் திருடர்களின் சொர்க்கம். என்ன ஒன்று சாதா திருடர்களுக்குத்தான் போலீஸ் தண்டனை கிடைக்கும். பெரிய திருடர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு எல்லாமே கிடைக்கும். என்ன ஒன்று??? அவர்களையும் இந்த திருட்டில் பங்கு கொள்ள வைக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கு பல உதாரணங்கள் .
1) பங்கு மார்கெட்டில் தில்லு முல்லு செய்யும் புத்திசாலி தரகர்கள் - ஹர்சத் மேத்தா போன்றோர்
2) போலி பத்திரம் தயாரித்து அதை உண்மையானதுபோல MBA பட்டதாரிகளைக் கொண்டு பெரிய கம்பெனிகளுக்கு மார்க்கெட்டிங்க் செய்தவர்கள் - தெல்கி
3) அரசியல் தொழிலில் ஊழல் செய்பவர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் - ஹசன் அலி
4) ஊழல் அரசியல் தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் - உதாரணம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்
5) அரசியல் தொழில் செய்பவர்களுடைய ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கும் பெரிய அதிகாரிகள்.
6) திடீரென்று பணக்காரர்களாகும் கணக்குக் காட்ட தேவை இல்லாத கட்சிக்காரர்கள்
7) விஷம் போல உயரும் விலைவாசிக்குக் காரணமாக இருக்கும் பதுக்கல்காரர்கள்
8) கங்கையை மாசு படுத்தும் குவாரி முதலாளிகள் - (இவர்கள் பற்றி முழுமையாக தெரிந்தும் இவர்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சுவாமி நிகமானந்த் பரிதாபத்துக்குறியவர்)
9) கங்கையில் கலக்கும் பல மாசுக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளின் முதலாளிகள்.
உண்மையில் என்னால் முழுமையாக பட்டியல் இட முடியவில்லை.
இவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?? பிடி படுபதே சாதனையாக இருக்கும்போது, தண்டனை தருவது என்பது குதிரைக் கொம்புதான்.
இப்படிப்பட்ட சூழலில் திருடர்களின் சொர்க்க பூமியாக திகழும் பாரதத்தில் கங்கையும் உண்மையில் சாக்கடையாக மாறத்தொடங்கிவிட்டது.
இப்போது நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்அவர் சொன்னது உண்மையா அல்லது பொய்யா??? எனக்கு சத்தம்போட்டு சொல்ல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது...
கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் என் தேசத்தைக் காப்பாத்தணும்..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...
6 comments:
தங்கள் கருத்துக்கள் நியாயமானதுதான்.ஆனால் இந்தியா என்றாலே இதுதான் என்பதைப்போன்ற இமேஜை வெளிநாடுகளில் திட்டமிட்டு பரப்புவது தவ்று.இந்தியாவில் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன.பகிர்வுக்கு நன்றி
என்ன பாஸ் ரொம்ப நாள் ஆளை காணோம் தொடர்ந்து பதிவு போடுங்க பாஸ்
திரு ஷண்முகவேல், இது திட்டமிட்டு செய்ததா என தெரியவில்லை... ஒரு சாதாரண வெளிநாட்டு பயணி நம் தேசத்தில் பார்த்ததை யதார்த்தமாக பகிர்ந்தது போலவே தோன்றுகிறது...
இருந்தாலும் தாங்கள் கூறுவது போல நம் தேசத்தில் பல நல்ல விசயங்களும் இருக்கின்றனதான்... இதுதான் நம் நாட்டுப் பற்றுக்குக் காரணம். இந்த விஷ ஜந்துக்கள் அந்த நல்ல விசயங்களையும் என்றைக்கு கெடுக்குமோ தெரியவில்லை...
பகிர்வுக்கு நன்று...
திரு மும்பை செல்வம், அலுவலக வேலைகளில் சற்று பிசியாக இருந்ததால் நிறைய எழுத முடியவில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் இதற்க்கு தீர்வு விரைவிலேயே வரும் என்ற நம்பிக்கை இன்னும் என் போன்றோர் மனதில் இருக்கிறது, கண்டிப்பா வரும்.......
திரு ஸ்பார்க் கார்த்தி, நம்பிக்கையே நம் வாழ்க்கை... நம்புவோம் நல்லதே நடக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Post a Comment