ஒருவழியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைந்து விட்டது. இந்த நேரத்தில் நமக்கு தேவையான நல்லாட்சி எது என்பதை பதிவு செய்வது நம் கடமை.
1) அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழல் இருக்க வேண்டும்.
2) அரசாங்கத்தின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் சேரவேண்டும்.
3) லஞ்ச ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் அமைய வேண்டும்.
4) அரசு பணி ஏற்று செய்பவர்கள் நேர்மையாகவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டும் நடக்க வேண்டும். (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு வேலைகளை ஏற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள்)
5) நீதி பரிபாலனம் சரியான நேரத்தில் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.
6) அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வருமானத்துக்கான வாழ்வாதாரங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்.
7) தரமான கல்வி, மருத்துவம், சட்டஉதவி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
8) நியாயமான, மக்கள் வருமானத்திற்கு ஏற்றதான விலைவாசி நிலை இருக்க வேண்டும்.
9) மக்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகள் - சாலைவசதி, பொது போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரமான குடியிருப்புகள், சுற்றுச்சூழல் - சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
10) விவசாயம் செழிக்க வேண்டும்.
என் மனசுக்கு தேவைன்னு பட்டதையெல்லாம் எழுதி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான்.
நமது ஆட்சியாளர்கள் இவைகள் ஏற்பட பாடுபட்டாலே நம் நாடு சிறப்பான நிலையை அடையும்.
கடவுளே! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்.. நீங்கதான் இவையெல்லாம் நிறைவேற அருள் செய்யணும்.
சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!