ஆண்டவன் திருவிளையாடல் - 2 - முருகன்
மேற்கண்ட பதிவுகளின் தொடர்ச்சி....
அன்றுமுதல் தினமும் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். சில பக்திமான்களான நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வாரம், காலையும் மாலையும் தொடர்ந்து கடவுள் தரிசனம். மனமுருக வேண்டுதல் என்று போனது.
அப்போது எனது நண்பர்களில் ஒருவர் பக்கத்து ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் மிக விசேடமானது என்று கூறி எடுத்து கொடுத்தார். உடனே அந்த கோவிலுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.
மறு வாரமே எனக்கு சென்னையில் இருந்து ஒரு தனியார் கம்பெனியில் நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. சென்று விட்டு வந்தேன்.. முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில் நேர்முகத்தேர்வு சரியாக செய்ய வில்லை.
இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தை போட்டு என் தினசரி கடமைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது கோவிலுக்கு வந்த ஒரு மூதாட்டி என்னை பார்த்து ஆறுதல் கூறி இந்த வேலை கண்டிப்பாக கிடைக்கும் என ஆசீர்வாதம் செய்தார். அந்த மாரியம்மனே நேரில் ஆசீர்வத்ததுபோல உணர்ந்தேன்.
இந்த காலக்கட்டத்தில் சென்னையில் வேலையில் இருந்த எனது கல்லூரி நண்பர்கள் சிலர் மிகவும் உதவி செய்தனர். உண்ண உணவு, இருக்க இடம் கொடுத்து ஆறுதல் சொல்லி தேற்றவும் செய்தனர்.
கடைசியில் அதே நிறுவனத்தில் இருந்து வேலையில் சேர சொல்லி அழைப்பு வந்ததும் அந்த மாரியம்மன் கோவிலில் சென்று மனமுருக நன்றி தெரிவித்தேன். சம்பளம் சொற்பமானாலும் ஒரு நிரந்தர வருமானம் குடும்பத்துக்கு வரப்போவது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
(கடைசியில் இதே நிறுவனத்தில் 12 வருடங்கள் தொடர்ந்து வேலை செய்து எனது பல குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடிந்தது.)
இதற்கு அருள் செய்த அந்த மாரியம்மனுக்கு எனது நன்றியையும் காணிக்கையும் செலுத்தி தொடர்ந்து வணங்கி வந்தேன்.
வேலையில் சேர்ந்துவிட்டேனே தவிர என்னால் அதில் சோபிக்க முடியவில்லை. என்னை விட வயதிலும் தகுதியிலும் இளைவர்களுக்கு முன்னுரிமை அளித்தல். திறமைகளை மட்டம் தட்டுதல் என பல சோதனைகளை சந்தித்து வந்தேன்.
இந்த களேபரத்தில் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஆஸ்துமா தொந்தரவு மிக தீவிரமாகி படாத பாடு பட வைத்து விட்டது. அப்படி ஒருமுறை உடல்நிலை மிக மோசமடைந்த பொழுது அந்த மாரியம்மன் அருளால் தப்பினேன். அது பற்றி..
\
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..
தொடரும்.....