ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் கடவுள் அவர் திருவிளையாடல நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவர் என் வாழ்க்கைல நடத்திய திருவிளையாடல இங்க பகிர்ந்துக்கிரேன்.
-----------------------------------------------------------------------------------------------
எனக்கு முதலில் அறிமுகமான கடவுள் கணபதி. என் பள்ளிப் பருவத்தில் அறிமுகமானார்.
அப்போதெல்லாம் ஒரு விளையாட்டுத்தனமாத்தான் கடவுளை கும்புடுவேன். கும்புடுவேன்னு சொல்றதவிட, கிண்டல்பண்ணிக்கிட்டு கும்பிடுர மாதிரி பாவலாபண்ணுவேன்.
என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளயார் கோவில்தான் அவர் இருப்பிடம். அவரைப் பார்க்க சும்மா வேடிக்கையாக இருக்கும். இதுக்காகவே இவர் என் இஷ்ட தெய்வம் ஆனார்.
ஓருமுறை என்னிடம் வகுப்பு ஆசிரியர் குடுத்த ஒரு முக்கியமான பேப்பர் காணாமல் போக இவரிடம் வேண்டிய பிறகு
மறுநாளே ஒரு நண்பன்மூலம் கிடைத்தது. அதன்பின் பக்தி ரொம்பவும்
கரைபுரண்டது. முதல்முறையா மனம் ஒன்றி சாமி கும்பிட்டேன்.
பிறகு அடுத்த வேண்டுதல். ஆனா இப்போ முழுசாப் பலிக்கலை. ஆனாலும் ஒரு நமபிக்கை. தொடர்ந்து அவரை கவனித்து வந்தேன். ஆனா அவருக்கு இருக்கற ஆயிரம் வேலைல என்ன சரியா கவனிக்க முடியலபோல.
பின்னால் இந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே
வந்தது.காலேஜுக்கு போனதும், சுத்தமா போயிருச்சு. திரும்பவும் பழய மாதிரி ஆயிட்டேன்.
காலேஜ் படிச்சது திருப்பரங்குன்றத்துல. ஒருமுறை முருகன் கோயிலுக்கு நண்பர்களோடு போயிருனந்தப்ப எனக்கும் கடவுளுக்கும் ஒரு சவால் ஆகிப் போச்சு.
"நாமளே எத்தனைதடவை இந்த கடவுளை வந்து பார்க்குறது. ஒருதடவையாவது இந்த கடவுள் நம்மள வந்து பார்க்கமாட்டாரா? இனி சாமிய நான் போயி பார்க்கனும்னா, முதல்ல அவர் என்ன வந்து பாக்கட்டும். அப்புறமா அவர நான் போயி பாக்கிறேன். "
அப்போ நினைக்கல. இந்த கடவுள் எப்பவுமே நம்ம பாத்துக்கிட்டு, நாம பேசுரத கேட்டுட்டு இருப்பார்னு. அவர் வந்தா எனக்கு எப்பிடி கண்டுபிடிக்கிறதுன்னுகூட தெரியாது. சும்மா ஒரு திமிர். ஒரு உதார். அவ்வளவே.
ஆனா இது என் வாழ்க்கைல எப்பிடி திரும்பிவரும்னு சத்தியமா அப்போ நான் நினைக்கவே இல்லை. ஆனா வந்தது. எல்லாம் விதி.
-அடுத்த பதிவுல தொடர்வேன்.
8 comments:
ஆண்டவன் திருவிளையாடல் - 1 - கணபதி
வணக்கம்
மேல் கோடிட்ட பதிவின் தொடர்ச்சியை உங்கள் வலைப்பூவில் என்னால் எங்கும் காண முடியவில்லை
"ஆனா வந்தது. எல்லாம் விதி" என்று கூறியுள்ளீர்கள்.அன்புகூர்ந்து நிகழ்வை பற்றி பதிவு செய்யவும்
நன்றி
அன்புள்ள திரு அபியாஷ், இது பற்றி மேலும் நான் இன்னும் எழுதவில்லை. நிச்சயம் எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இந்த நிகழ்வை பதிந்தால் நன்றாக இருக்கும் நண்பரே
சிவன் அருள், நிச்சயம் நேரம் கிடைக்கும்போது பதிகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும் தோழரே..
உங்கள் இளமைகால பக்தி குறித்த ஆக்கம் அருமை..
ஒவ்வொருவரிடத்திலும் ஆணவம் இருக்கிறதே ?
அது குறைய குறையத் தான் பக்தி தோன்றும்..
நாமாக நினைத்தாலும் இறைவனை வழிபட முடியாது..
அவனருளாலே அவன் தாள் வணங்கி..
என்பதற்கு இணங்க முருகன் தங்களை நெருங்கி வருகிறார்..
வெரிகுட் .. இதோ அடுத்த பதிவிற்கு செல்கிறேன்.
நன்றி.
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைத்துதான் கடவுள் ஆட்கொள்கிறார். இதில் யாரும் விதிவிலக்கில்லை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
thangal anubavangal palarukku kandippage uthavum
திரு அருள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment