நமது தேசிய, மாநில தலைவர்களும், கட்சிகளும் போட்டிபோட்டுக்கிட்டு நம்ம நாட்டக் கொள்ள அடிக்கரதப்பாத்து, இந்தியா என்னிக்காவது முன்னேறுமான்னு எனக்கு சந்தேகம் ஏற்படுது.. அப்பிடி முன்னேறணும்னா அதுக்கு என்ன செய்யணும்... எதெல்லாம் நடக்கணும்னு இந்த சாமானியனின் கனவு...
இதெல்லாம் நடக்கணும் :
பஞ்சாயத்து லெவெல்ல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நல்ல தன்னலமில்லாத , உண்மையான சேவை மனப்பான்மை உள்ள சிறு / பெருந்தலைவர்கள் உருவாகணும்.
பொதுமக்கள் தேர்தலப்போ, இந்த மாதிரித் தலைவர்கள கண்டுபிடிச்சு கட்சிபாகுபாடு இல்லாம தேர்ந்தெடுக்கணும்..
இவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் ஒரு கார்பரேட் கம்பெனியில குடுக்கிற நல்ல சம்பளம் தரப்படவேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கீழ்க்கண்ட தண்டனைகள் சில சாம்பிள்கள் :
1) தவறு செய்யும் தலைவர்கள்/அதிகாரிகள் மற்றும் அவர்களின் சொந்த பந்தங்களின் பதவி , பாஸ்போர்ட் மற்றும் சொத்துக்கள் உடனே பறிக்கப்படவேண்டும்.
2) அவர்களின் மக்கள் பிரதிநிதித்துவமும் பறிக்கப்பட வேண்டும்.
3) அவர்களோ அல்லது அவர்களின் நேரடி உறவினர்களோ / சந்ததியினரோ மீண்டும் தேர்தல்களில் போட்டியிட / அரசுபதவிகளுக்குவர நிரந்தரத்தடைவிதிக்க வேண்டும்.
4) அவர்களுக்கு சட்டப்படி கடுமையான ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
அரசாங்க வேலைகளை எடுத்து நடத்தும் மற்றும் அரசுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் காண்ட்ராக்டர்கள் பொறுப்புடன் வேலைகளை செய்யவேண்டும். தவறுபவர்களுக்கு கடும் தண்டணை விதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கான தண்டனையே இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதேமுறையில் தண்டிக்கப்படவேண்டும்.
தேவைஇல்லாத சட்டங்கள், சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். மற்றும் தேவையான சட்டங்கள், சலுகைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டு, அதிகமான வாக்குகள் (ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது சதவீதம்) வாங்கும் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும்.
விவசாயம் தேசியத்தொழிலாக அங்கீகரிக்கப்படவேண்டும். இதற்கு கீழ்கண்டவைகளை செய்யவேண்டும் :
1) விவசாயநிலங்கள் / நீர் ஆதாரங்களும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அவற்றை வேறு உபயோகங்களுக்கு மாற்றுவது தடை செய்யப்பட வேண்டும். அப்படி மாற்று உபயோகத்துக்கு விற்பவர்களிடம் இருந்து, இப்போது இருக்கக்கூடிய உரிமையாளர்களிடம் மார்க்கெட் விலையில் நிலங்களை அரசே வாங்கிக்கொள்ளலாம்.
2) விவசாயிகளுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளும் செய்துதரவேண்டும். வீடு, வசதி, உணவுப்பொருள்கள், பென்சன், வாரிசுகளுக்குப் படிப்பு அனைத்தும் இலவசமாகத் தரப்பட வேண்டும். அவர்களுக்கு இவைகளை செய்வதற்கு மற்ற விவசாயப்பொருள் நுகர்வோரிடம் தனி வரி வசூலித்துக்கொள்ளலாம்.
3) புதிதாக விவசாயம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கு களப்பயிற்சியும் வேலையும் தர அரசு தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
4) ஒவ்வொரு கம்பெனியும் ஒரு குறிப்பிட்ட அளவு விவசாயிகளை பணியில் அமர்த்தி, சம்பளம் கொடுத்து விவசாயம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கம் இதை சட்டப்பூர்வமாக்கி கடுமையாக அமல் படுத்த வேண்டும்.
5) விவசாயிகளின் விளைபொருள்களின் வியாபாரத்துக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். விளைபொருள்களைப் பாதுகாக்க சரியான ஏற்பாடுகளை அந்தந்த ஏரியாக்களிலேயெ செய்து தர வேண்டும்.
6) விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அரசு முழுமையான ஊக்குவிப்பும் உதவிகளும் வழங்கவேண்டும்.
தேசத்தின் நீர் ஆதாரங்களான நதிகள், ஏரிகள், கால்வாய்கள் தேசியமயமாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.
நம் ஆன்மீகப்பாரம்பரியம் சரியான பாதைக்கு செலுத்தப்பட்டு, ஒரு ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.
மக்களின் பசிப்பிணி ஒழிக்கப்பட்டு ஆன்மீகவழி காண்பிக்கப்பட வேண்டும்.
மதமாற்ற முறைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
ஆன்மீகத்தின் பெயரால் தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
என்ன பண்றது, என்னால இதுகளப்பத்திக் கனவுதான் காணமுடியுது...
அந்த சதுரகிரி சுந்தரமஹாலிங்கம் தான் இதுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணனும்..
அரோஹரா....
6 comments:
kovinthaa !!!! kovinthaa !!!
இதைவச்சி ஒரு நல்ல படம் வேணும்னா எடுக்கலாம்.
Anonymous, Let us not loose hope... :-). Thanks for your comments.
திரு இனியவன், முதல்ல நமக்கு என்ன தேவைன்னு எழுதிவைப்போம். நடக்குரதும், நடக்காததும் அவன் செயல்... :-)
வருகைக்கும் கமென்ட்க்கும் நன்றி...
Sankarji, I could read your mind thro your social angerness and remedy suggestions conveyed by you.You may be aware, for anything to be done, these three basic things are required. To desire to do, to know what to do, and to do. We desire and know to do, but the doing is the problem in India. The field is filled with gunda politicians, dacoits, biased police, biased govt servents and of course with curruption at its height.The doership role induced by good will gesture is being discouraged every time in our country, and that is how we had seen Gandhiji himself shot dead.Politicians being law makers, they will never change the laws which may punish their very looting actions. Then what to do? I do like this. To do the things whatever I can, for the family and society, within the boundary of constitutionally written laws and politically unwritten laws. I do not do the things which may affect any of the living organism around me, including me. I found it suits the current social set-up. It may get good or worse in future, and our succeeders can be the enjoyers or sufferers. At least my account of guilty feelings can be closed down to zero balance, before I face my first and final encounter with Yamaraj. Your finishing with Aroharaa is a good touch to this article.
மூர்த்தி, வருகைக்கும், கமெண்ட்க்கும் நன்றி...
நம்ம லிமிட்டுல இருக்கரத நாம எல்லாரும் செய்யறொம். இங்க எழுதி இருக்கரது எல்லாம் நம்மளால நேரடியா செய்ய முடியாதது.
நமது இன்றைய சிந்தனைகளே நாளய செயல்கள். எனவே உயர்வா உள்ளி (?) இருக்கேன்.. கடவுள் விட்ட வழி... :-)
Post a Comment