Tuesday, December 14, 2010

முடியல !! - நாட்டு நடப்பு !!! - ஒரு சாமானியனின் புலம்பல் !!!!

இப்பொல்லாம் பத்திரிக்கைகளை பிரிச்சா வெறுப்பா இருந்தது... ஏன்னா முதல் பக்கத்துல ஊழல் இத்யாதி விஷயங்க அதிகமா இருக்கு...அப்புறம் இது பயமா மாறிடுச்சு... ஏன்னா இந்த ஊழல்களின் பிரம்மாண்ட மதிப்புகள்... (நாம வாங்குற சம்பளத்த நினச்சா கேவலமா இருக்கு... இதுக்கு வரிவேற...இந்த ஊழல்களைப் பாக்குற எவனுக்கும் வரிகட்ட மனசு வராது.. )

வேற வழி இல்லாம இதை எல்லாம் பாத்துக்கிட்டு இருக்கோம்... இதுல நம்ம கைல இருக்கறது, வோட்டுப்போடுறப்ப சரியான ஆளுகளா தேர்ந்தெடுத்துத் தொலைக்குறதுதான்.

ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு. ரொம்ப அபூர்வமாதான் நல்லவங்க அரசியலுக்கு வராங்க. இப்பிடிப்பட்ட ஆட்கள அரசியல் கட்சிகள் தேர்தல்ல நிறுத்துறதும் ரொம்ப அபூர்வம். இப்பல்லாம் பெரும் பணக்காரர்கள், அரசியல் பினாமிக்கள், சமூக விரோதிகள், பெருமுதலாளிகளின் சேவகர்கள் இவர்கள் மட்டுமே தேர்தல்ல நிக்கிறாங்க. ஏன்னா இவங்களால மட்டும் தான் கோடிகளக் கொட்டி தேர்தல் செலவு செய்ய முடியுது. செலவு செய்யமுடியாதவங்க சுயேச்சையாத்தான் நிக்கணும்.

ஆனாலும் ஒருசில நல்லவங்க இப்பிடி சுயேச்சையா நிக்கறாங்க. ஆனா அவங்களாலயும் இப்பிடிப்பட்ட ஓட்டப்பந்தயம் மாதிரியான தேர்தல்கள்ல ஜெயிக்கிரது முடியாத காரியமா ஆயிருச்சு.

இப்போ வோட்டுப் போடுற ஜனங்களுக்கும், கட்சிகள் நல்லது பண்ணும்னு நம்பிக்கை கொறஞ்சிபொச்சு. இதுனாலதான் யாரு அதிகமா இலவசம் / கவர் தருறாங்களோ அவங்களுக்கு ஓட்ட விக்க ஆரம்பிச்சுட்டாங்க. "நம்மளால லச்சம் / கோடி அடிக்கமுடியாட்டியும் கொறஞ்சது இந்த இலவசம் / கவர் லெவெலுக்கு நாமளும் எடுத்துக்கலாம்" னு நினைக்குறாங்க.

எல்லாருக்கும் நல்லா தெறிஞ்சிருக்கு. "இது அவங்க குடுத்த வரிப்பணம்." "போனமுறை ஆட்சியில இருந்தப்போ அடிச்ச பணம்". "இப்பிடி வாங்கினாத்தான் உண்டு" "திரும்பவும் யார் ஜெயிச்சாலும் நமக்கு எந்த பிரயோசனமும் இல்ல"

உண்மைல ஒரு சிறந்த தலைவன உருவாக்குறதுக்கான களம்  / பட்டறை இப்பொ இல்ல. இப்பொ இருக்கிர சூழல்ல ஒரு அரசியல் தலைவர் நேர்மையா இருந்தாத்தான் அதிசயம். அவருக்குக்கூட நம்ம சமூகம் ஒரு நல்ல பேர் குடுத்து இருக்காங்க - "பொழக்கத் தெரியாதவர்"

நம்ம ஜனநாயகம் இப்பிடி சீறழிஞ்சு போனது ஏன்?

1) பேராசை. ஆடம்பர மோகம்.  இது தலைவர்கள் கிட்ட முதல்ல வந்தது. அவுங்களப் பாத்து படிப்படியா தொண்டர்கள்கிட்ட பரவுச்சு. அப்பிடியே இப்போ ஜனங்ககிட்ட ஊறிக்கிட்டு இருக்கு.

2) ஒரே இடத்துல அதிகமா பவர் குவிஞ்சு இருக்கறது. அந்த இடத்துல நல்லவங்க இருந்தவரை நமக்கு ஒண்ணும் தெரியல. அந்த தலைவர்கள பேராசையும் ஆடம்பர மோகமும் ஆக்கிரமிச்சபிறகு, இந்த நிலம ஆயிருக்கு.

3)  தராதரம் பாக்காம சொந்த பந்தங்களுக்கு / பந்து மித்திரர்களுக்கு பவர் இருக்குற பதவிகள குடுக்கறது.

4) பணத்தால என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்னு இருக்கற சூழல். மற்றும் பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்ற மனோபாவம்.

5) தேர்தல் / அரசியல் -ங்றது அதிக பண முதலீடு தேவைப்படுற ஒரு தொழிலா ஆகிப் போனது.

6) பாவம் புண்ணியம் போன்ற வார்த்தை எல்லாம் கெட்டவார்த்தையா ஆனது.

7) பணமும் புகழுமே வாழ்க்கை லட்சியமா ஆனது. அதுக்காக எதுவும் செய்யலாங்கற மனோபாவம் வந்தது. இதுனால தனி மனித ஒழுக்கமெல்லாம் அர்த்தம் இல்லாமப் போனது.

8) ஜனங்க மேல நம்பிக்கை இல்லாமப் போனது. இதுக்காகத்தான் வி ஏ ஓ, தாசில்தார்னு பல அதிகாரிக நாம சொல்ற விஷயங்கள்லாம் சரி ன்னு சொல்றதுக்கு இருக்காங்க.


இன்னும் நிறய பட்டியல் போடலாம். ஆனா எதுக்கும் தீர்வுன்னு ஒண்ணும் உருப்படியா நினைக்க முடியல்ல.

இருந்தாலும் இந்த நிலமைல நாம என்ன செய்யலாம் ???

1) நம்ம அளவுக்கு சரியா இருக்கலாம். தனிமனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தரலாம். தரணும்.

2) நாம கொஞ்சம் ஏமாந்தாலும், அடுத்தவன / அரசாங்கத்த ஏமாத்தாம இருக்கலாம். நேர்மையா இருக்கலாம்.

3) கண்டிப்பா எல்லா தேர்தல்லயும் நல்லவங்கள கண்டுபிடிச்சு(?)  கண்டிப்பா வோட்டுப்போடலாம். இந்த ஊழல் செய்ற ஆளுங்கள புறக்கணிக்கலாம். இல்லன்னா 49ஓ போடலாம்.

4) பாவ புண்ணியங்களப்பத்தி நாமளாவது யோசிக்கலாம். பக்தி மார்க்கத்த அதிகமா கடப்பிடிக்கலாம். (அங்கயும் இந்த மாதிரி ஆட்கள் அதிகமாயிட்டுவர்ராங்க :-(     )

5) நம்ம பிரார்த்தனைக்கு நல்ல சக்தி இருக்குன்னு சொல்றாங்க. அதுனால கடவுளே! இந்த நாட்டயும் எங்களயும் இந்தமாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்துன்னு தீவிரமா பிரார்த்தனை பண்ணலாம்.

6) சோத்துல போடுற உப்போட அளவ நல்லா கொரச்சுக்கலாம். இதுனால சொரண கொஞ்சம் கொரயும். இந்த மாதிரியான் விஷயங்களப் பார்க்கரதுனால / கேக்குரதுனால வர்ர டென்சன் கொஞ்சம் கொரயும்.


கடவுளே! எங்களக் காப்பாத்து... 

0 comments: