ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும் போதும் மற்ற சில பொருட்களின் விலையும் அதிகரித்து வந்திருக்கிறது.
பெட்ரோல் விலையை நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு தற்காலிகமாக குறைத்தாலும் இவ்வாறுஉயர்ந்த மற்ற எந்த விலைவாசியும் குறையவில்லை. பெட்ரோல் விலை மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தப்படும் போது மற்ற பொருள்களும் மீண்டும் விலை ஏற்றப்படும்.
இப்போது தமிழகத்தில் பால், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டு மின் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது.
இதில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் இன்னும் அதிகம். முக்கியமாக மின் கட்டணம்.
நான் ஓசூரில் இருக்கும் போது (2009) மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 300-00 மட்டுமே கட்டி இருக்கிறேன். ஆனால் இங்கு கல்கத்தாவில் (2011) 3 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 1600-00 கட்ட வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் நான் ஓசூரில் உபயோகித்த ஹீட்டரை இப்போது இங்கு உபயோகப் படுத்துவதில்லை. இந்த மின் கட்டணம் விரைவில் இங்கு உயர்த்தப்பட உள்ளது.
மேலும் பேருந்து கட்டணங்கள், தமிழகத்தில் ரூ 2-00 குறைந்த பட்ச கட்டணம், ஆனால் இங்கு கல்கத்தாவில் ரூ 4-00 குறைந்த பட்ச கட்டணம். ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான பேருந்துகளில் பயணம் செய்தால் முதுகு வலி நிச்சயம். அவ்வளவு மோசமாக இருக்கும். உண்மையில், இதோடு ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வரும்போது நான் ஒரு சுகமான பேருந்துப் பயணத்தையே கண்டிருக்கிறேன். இந்த பேருந்துக் கட்டணம் இங்கு பல ஆண்டுகளாக நடைமுறையில் உளளது. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தபடலாம்.
பால் விலை இங்கு அரை லிட்டர் ரூ 11-50 (அரசு விலை). ஆனால் தனியார் பால் (அமுல்) அரை லிட்டர் ரூ15-00.
தானிய வகைகளும் காய்கறிகளின் விலையும் மிகவும் அதிகம். எனது மாத பட்ஜெட்டில் எனது வாடகைக்கு இணையாக இவற்றுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
நடுத்தர வர்க்கமான நாமே இவ்வளவு செலவு செய்ய யோசிக்கும்போது தினம் ரூ32 ம் அதற்கும் கீழும் சம்பாதிக்கும் ஏழைகளை நினைக்க இன்னும் வருத்தமாக இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை நம் ஜனத்தொகையில் சுமார் 40% என்று அரசாங்கமே சொல்கிறது.
அரசாங்கம் விலைவாசிகளை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் தெரிகிறது. கொள்ளை சம்பவங்களும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. மக்கள் வருமானத்திற்கு மீறிய செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண முயல வேண்டும்.
ஆனால் இதை செய்யாமல் இவர்கள் ஏதோ நம்பர் கேம் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.
இது பற்றிய எனது முந்தைய ஒரு பதிவு :
விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)
நாட்டு ஜனங்களை அந்த மஹாலிங்கம்தான் ரட்சிக்கணும்.
சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..
6 comments:
Dada good post. What to do?
திரு மயில்ராவணன், நிரந்தரத் தீர்வு பற்றி எனது பழைய பதிவில் சொல்லி இருக்கிறேன். இப்போதைக்கு பல்லக் கடிச்சிட்டு இருக்கரதுதான் ஒரே வழி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஒட்டு மொத்த மக்களையும் அதிக சிரமப்படுத்தும் விஷயம் இது.ஏதாவது தீர்வு வந்தால்தான் நல்லது.பகிர்வுக்கு நன்றி
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
விலைவாசியை கட்டுப்படுத்த முடியாதுதான். ஆட்சியாளர்கள் தங்கள் செல்வத்தை பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் பொழுது, என்னை போன்ற அப்பாவி பொதுமக்களின் எண்ணங்களை அவர்கள் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். அவர்களால் என்ன செய்ய முடியும்? என்னிடம் வாக்கு வாங்குவதற்காக நாய் போல் பின்னாடியே ஓடிவர தெரியும். எனக்கு போனா போகுதென்று வாக்கை செலுத்துவேன் அவ்வளவுதான். அவர்களின் அல்லி ராஜ்ஜியம் தொடரும். என்னை போன்றோர்கள் வறுமையிலும், பட்டனியிலும் உழல வேண்டியதுதான். இதைப்பற்றி ஏன் ஆட்சியாளர்கள் கவலைப் படனும். அவர்களை அமர்த்திய நாம்தான் கவலைபடனும். விலைவாசியும் குறையாது. இவர்களும் ஒழிய போவது இல்லை. அன்புடன் பாலமுருகன். தொடர்புக்கு www.saffroninfo.blogspot.com
திரு பாலமுருகன், வருத்தமாகத்தான் இருக்கிறது..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment