Monday, August 29, 2011

திரு அன்னா ஹசாரே போராட்டத்தால் விளைந்த நன்மைகள்...

ஒரு வழியாக திரு அன்னா ஹசாரே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். இந்த போராட்டத்தினால் ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் வரப்போகின்றது. இந்த விசயத்தைத் தவிர இதனால் மேலும் சில நன்மைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது... அது பற்றி....


1) முதலில் ஜனநாயகத்தை விட்டு, ஓட்டுகூட போடாமல் விலகி இருந்த இளைய சமுதாயத்தினரின் ஒரு பகுதியினரை வீதிக்கு வரவழைத்தது...

2) ஜனநாயகத்தில் இனி இளைய சமூகமும் ஓரளவுக்கு பங்குபெறும் என்ற நம்பிக்கையை என்போன்ற சில சமூக கவலை இருப்போரிடம் ஏற்படுத்தியது.

3) நம் குரலுக்கும் நம் ஜனநாயகத்தில் இனி மதிப்பிருக்கும் என்ற ஒரு கருத்தை இளைய தலைமுறைக்கு கொடுத்தது...

4) போராட்டம் என்றால் ஏதோ பெரிய தியாகம் என்ற மனப்பான்மையை மாற்றி, ஓய்வு நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் போனாலே நம் எதிர்ப்பை காட்டும் போராட்டமாக்கலாம் என் ஒரு புது வழியைக் காட்டியது.

5) ஒரு கார்பரேட் ஈவண்ட் போன்ற போராட்டங்களும் நடத்த முடியும் என காட்டியது..

6) பொது மக்களின் குரலையும் பாராளுமன்றம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியது(?????)

7)  பாராளுமன்றத்துக்கு ஊழலை ஒழிக்கும் உத்தேசமே இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது..

8) எனவே நம் போராட்டம் இன்னும் பெரிதாக  இன்னும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.



அந்த மஹாலிங்கம்தான் இந்த போராட்டங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் வர அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....

13 comments:

Mugilan said...

இந்த பதிவு குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

Sankar Gurusamy said...

திரு முகிலன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அருள் said...

அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்.

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_28.html

Sankar Gurusamy said...

திரு அருள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Testing said...

Good. There could be many more views also. who knows. Thanks for your views.

Sankar Gurusamy said...

Shankarabagam, Thanks for your views and comments...

shanmugavel said...

விளைவுகளை சிறப்பாக சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.அத்தனையும் உண்மை.பகிர்வுக்கு நன்றி.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Anonymous said...

சுமனனின் அடிவருடியாக மாறிட்டீங்களே சாமி.. :)))

Anonymous said...

சுமனனுக்கு Comment போட்டா அந்தாள் Publish பண்ராருல்ல.. எல்லாம் பயந்தவங்களா இருககங்களே.. :)))

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், தாங்கள் தங்கள் பெயருடனே இங்கு வரலாம்.. தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.. எதிர் கருத்துக்கள் எப்போதும் இங்கே வரவேற்கப்படுகின்றன...

திரு சுமனன் ஒரு வித்தியாசமான வலைத்தளத்தை நடத்தி வருகிறார். அதற்கு ஆதரவு தருவது என் தார்மீக கடமை என்பதால் தருகிறேன். சினிமா, கதை, கவிதை, மொக்கை, பொழுதுபோக்கு, போன்ற தளங்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட தளங்களுக்கு ஆதரவு மிகவும் குறைவே.. மேலும் நல்ல கருத்துக்கள் சொல்லும் தளங்களை தேடி ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

அப்படிப்பட்ட தளங்கள் ஏதாவது இன்னும் இருந்தால் தெரியப்படுத்தவும்.. நிச்சயம் அவர்களையும் ஊக்குவிக்க தயாராகவே இருக்கிறேன்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Bala said...

very good article

Sankar Gurusamy said...

பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..