இன்று ஆசிரியர் தினம்...எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சான்றோர் வாக்குக் கிணங்க, வாழும் இறைவனாம் நம் ஆசிரியப் பெருமக்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
இந்த இனிய தருணத்தில் என் நெஞ்சில் இடம் பிடித்த என் ஆசிரியர்கள் சிலரைப்பற்றி...
எனக்கு பாடம் படிப்பித்த எல்லா ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் ஆனாலும் அவர்களில் மிக முக்கியமான சிலரைப்பற்றி நான் பகிர்ந்துகொள்கிறேன்...
1) என் தமிழாசிரியர் - திரு அந்தோணிமுத்து, புனித ஸ்தனிஸ்லாஸ் உயர்நிலைப்பள்ளி சாத்தூர்..
என் மனதில் தமிழார்வம் கொஞ்சம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர்..எங்கள் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த போது (1982-1987) எனக்கு தமிழ் படிப்பித்த ஆசான். இன்னும் நான் தமிழில் ஓரளவுக்கு எழுதுவதற்கு உசிலம்பட்டியை பூர்வீகமாகக்கொண்ட இவர் ஒரு மூல காரணம்...
2) என் +2 கணித ஆசிரியர் திரு வெங்கட் ராமன்
இவர் எனது +2 டியூசன் ஆசிரியர்... சாத்தூரில் இவர் நடத்திய +2 கணித டியூசன் மிக பிரபலம் அப்போது... நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து பொறியியல் சேர காரணமாக இருந்த பேராசான்...
3) என் +2 தமிழாசிரியர் திரு மா பாலகிருஷ்ணன் , SHN எட்வர்ட் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்..
எனக்கு +2வில் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசான்.. இவரை நான் சில சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தியும் இருக்கிறேன்... அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எனக்கு நல்ல புத்தி புகட்டியவர். நான் பல முறை இவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இவரிடம் என் மனமாற மன்னிப்பு கேட்கிறேன்... மன்னியுங்கள் சார்...
4) என் கல்லூரி புராஜக்ட் கைட் பேராசிரியர் முருகானந்தம் , தியாகராசர் பொறியியற் கல்லூரி , மதுரை..
இவரைப் போன்ற இனிய மனிதரைக் காண்பது மிகவும் அரிது.. இன்னும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவர் என் கல்லூரி புராஜக்ட் நல்ல முறையில் வர மிகவும் பாடுபட்டவர்...
5) என் கல்லூரி பேராசிரியர் முரளீதரன்
கல்லூரியில் மாணவர்களுடன் மிகவும் தோழமையுடன் பழகும் ஒரு அபூர்வ மனிதர்.. என் நினைவில் இன்னும் வாழும் இவரும் என்னால் மறக்க முடியாத ஒருவரே...
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்...
கடவுளே மஹாலிங்கம்... நம் ஆசிரியப் பெருமக்கள் நல்ல மன நிம்மதியோடு மேலும் சிறப்பாக பணி செய்து ஒரு சிறப்பான சமூக அமைய நீங்கதான் அருள் செய்யணும்..
சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்...
7 comments:
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
தங்கள் ஆசிரியப் பெருமக்களை நினைவுகூர்ந்தவிதம் அருமை.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
எழுத்தறிவித்த இறைவர்களை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறிர்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
திரு கைலாஷி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அன்பின் நண்பா
இன்றுதான் தங்கள் வலைப்பக்கத்தைக் காணநேர்ந்தது.
மகிழ்ச்சி
ஆசிரியர்களை தினம் கொண்டாடுவோம்
என்னும் இடுகையைக் காண தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html
முனைவர் இரா குணசீலன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment