இன்று 29 செப்டம்பர் 2011 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றுதான் வாச்சாத்தி கொடுமை குறித்த வழக்கில் 19 வருடங்கள் கழித்து நமது மாவட்ட நீதி மன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் சுட்டி கீழே..
1992 Vachati mass rape case: 215 forest personnel held guilty, nine for rape
ஒரு வழியாக 1992ல் செய்த அநீதிக்கு 2011லாவது தீர்ப்பு வந்ததே.
இருந்தாலும் இதில் சில விசயங்கள் நெருடவே செய்கிறது.. மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் குறித்து அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் அலட்சியமும் அவர்களை எதுவும் செய்யலாம் யாரும் அதை கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவமும்.
இது காலம் காலமாக ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றாலும் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சட்டப்படி இதில் இவ்வளவு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.
இவ்வளவு ஆண்டுகள் சளைக்கால் போராடிய அமைப்புகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இதிலிருந்து அரசாங்கம் சில பாடங்கள் படித்து எளிய மக்களை மதிக்க பழகுமா?? அல்லது மீண்டும் இதுபோல சில நிகழ்வுகள் நீதி மன்றங்களால் குட்டப்பட வேண்டுமா??? அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்...
காலம் தாழ்த்தியாவது கிடைத்த இந்த நீதிக்காக கடவுளுக்கு நன்றி... இனியாவது அரசாங்கத்துக்கு நல்ல புத்தி குடுக்கணும்னு வேண்டிக்கிறேன்..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஓம் நம சிவாய...
2 comments:
காலம் தாழ்த்தியாவது நீதி கிடைத்து விட்டது.ஐம்பதுக்கும் மேல் மரணமடைந்து விட்டார்கள்.இதற்காக நடந்த போராட்டங்களை மறக்க முடியாது.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல், தாங்கள் அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் இது பற்றி கூடுதல் விபரங்களுடன் ஒரு பதிவு தரலாமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Post a Comment