இன்று 07 செப்டம்பர் 2011 காலையில் சுமார் 10-15க்கு தில்லியில் அதுவும் உயர் நீதி மன்றத்துக்கு அருகில் பயங்கர குண்டு வெடித்ததாக செய்தி வந்துள்ளது. தீவிரவாதிகளின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டு நம்மை பயமுறுத்த வந்துள்ளது... இந்த கோழைத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், தீவிரவாதிகளை கனிவுடன் அணுகும் அரசின் அணுகுமுறைகளையும் கண்டிக்கவேண்டி இருக்கிறது.
தீவிரவாதிகளுக்கு கடும் தண்டனைகளை, காலதாமதமில்லாமல் வழங்க வழி இல்லாத நம் நீதி பரிபாலனை முறையும் விசாரணை முறைகளும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.
ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் நம் மந்திரிகள் சொல்லும் சால்ஜாப்பும், ஆறுதல் வார்த்தைகளும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. கையாலாகாதவர்களுக்கு ஆட்சி செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும்... தீவிரவாதம் இல்லா ஒரு உலகம் உருவாக அருள் செய்யணும்..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...
3 comments:
அரசியல்வாதிகள் அப்போதைக்கு பேசுவார்கள்.மறந்து விடுவார்கள்.பிறகு மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும் வாயை திறப்பார்கள்.ஹசாரே போல வெளியிலிருந்துதான் முயற்சி செய்ய வேண்டும் போல் தெரிகிறது.
எனக்கு தெரிந்து நம் அரசாங்க அமைப்பு இப்போது ஒரு பழுதான எந்திரம் போல இருக்கிறது.. இதே நிலையில் யார் ஓட்டினாலும் ரிசல்ட் ஆக்சிடண்ட் தான்... பேதமே இல்லை.. முதல்ல நம் அரசு எந்திரத்த பழுது பாக்கணும்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஆமாம்,அரசு எந்திரத்தை பழுதுபார்க்க மக்கள் எழுச்சிதான் தேவை.
Post a Comment