Tuesday, September 6, 2011

குழந்தைகளைக் கொல்லும் அரசு மருத்துவமனைகள்....

இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்தது ஒரு சிறு செய்தியாக வந்தது. இன்று வேறு செய்திகளின் சுழலில் அடித்து செல்லப்பட்டு விட்டது...

Andhra infant deaths: hospital ill equipped, says govt

இது பற்றி கருத்து கூறிய ஒரு ஆந்திர அமைச்சர் இது கடவுளின் செயல் என கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் சுமார் 18 (இறுதி எண்ணிகை 26) குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பெரிய செய்தியாகி பிறகு அடங்கி விட்டது.

 இதே மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு குழந்தை எறும்புகள் கடித்து அரசு மருத்துவமனையில் இறந்த செய்தி நெஞ்சை நடுங்கச்செய்தது.

'Ant bite' death: Body of newborn exhumed

இந்த குழந்தையை இன்குபேட்டரில் வைக்கும்போது அங்கு இருந்த எறும்புகளைப் பார்த்த குழந்தையின் உறவினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அது சாதாரணமானதுதான் என பதிலுரைத்ததாகவும் செய்தியில் உள்ளது.

இதுதான் நம் தேசத்தின் அரசு மருத்துவமனைகளின் லட்சணம். இது ஏதோ பிற மாநிலங்களில்தான் இப்படி என எண்ண வேண்டாம். நம் தாய்த் தமிழகத்திலும் இதே நிலைதான்.. அதுவும் குழந்தைகளின் பராமரிப்பில் இருக்கும் அலட்சியம் அதிர வைக்கிறது.

நம் அரசாங்கங்கள் நம் மக்களுக்கு டீவி, கிரைண்டர், லேப்டாப், மிக்சி இலவசமாக வழங்குவதற்கு பதிலாக இப்படிப்பட்ட  அரசு மருத்துவமனைகளை சிறப்பாக பராமரித்து நல்ல சேவை வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இப்போது  அங்கும் குழந்தை பிறந்தால், ஆபரேசன் செய்தால், மருத்துவமனை  ஊழியர்களையும் தனியாக “கவனிக்க” வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இதை அந்த தனியார் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கின்றன. இங்கு அனைத்து ஊழியர்களுக்கும் மோசமான சம்பளம்தான் தருகிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளித்தாலும், கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்ச ஊழல் கிஞ்சித்தும் இரக்கமில்லாமலும், பாரபட்சமில்லாமலும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. 

அரசு மருத்துவமனைகள் குறித்து நான் ஜனவரி 12,2011ல் எழுதிய பதிவின் சுட்டி கீழே :

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

நம் அரசாங்கம் மக்களுக்கு தரமான மதுவகைகளை வழங்க செலவு செய்யும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது தரமான மருத்துவ வசதிகள் வழங்க செலவு செய்தால் நன்றாக இருக்கும்.. செய்வார்களா???

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இந்த அரசாங்கங்களோட கண்ண திறந்து இதுக்கு ஒரு நல்ல வழி செய்யணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

2 comments:

Bala said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

இன்று பொதுவாக எல்லா மக்களும் தனியார் மருத்துவமனைகளை தான் நாடி செல்கிறார்கள்.

பாமர மக்கள் தான் அரசு மருத்துவமனைகளை நாடி செல்கிறார்கள் . தாங்கள் கூறுவது போல அங்கும் தரவேண்டியதை தந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை உணர்ந்து இதுபோல கசப்பான நிகழ்வுகள் நடக்காமல்

இருக்க அரசால் இயன்ற உதவிகள் செய்யவேண்டும் .


http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

பாலா, இதில், செய்வதையும் செய்துவிட்டு சப்பைக்கட்டு கட்டும் போக்குதான் கவலை அளிப்பதாக இருக்கிறது... மாறவேண்டும் என வேண்டுவோம்.. அவ்வளவே..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..