இன்று உலகில் நாகரீக நாடுகளில் நம் இந்தியா உட்பட சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த சட்டத்தின் ஆட்சி நம் தேசத்தில் 1947/50 களில் ஆரம்பித்தபோது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றி :
1) அன்று ஆட்சியாளர்கள் தவறு செய்ய பயந்தார்கள்... இன்று பயப்படாமல் தவறு செய்கிறார்கள்.
2) உண்மையில் சட்டத்தை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டது அன்று.. சட்டத்தை பாதுகாப்பதுபோல நடிப்பது இன்று..
3) குற்றவாளிகள் உள்ளேயும் ஆட்சியாளர்கள் வெளியேயும் இருந்தனர் அன்று.. சில பல ஆட்சியாளர்களே குற்றவாளிகளாக உள்ளேயும் வெளியேயும் இருப்பது இன்று..
4) ஓரளவுக்கு மனசாட்சிக்கு பயந்தது அன்று... இன்று பணத்துக்கும் பதவிக்குமே முதல் மரியாதை...
நம் சமூகமும் அரசியலும் இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதால் நம் இன்றைய சட்டத்தின் ஆட்சி பற்றி சில வரிகள்...
1) பிடிபடாதவாறு தவறு செய்பவர்கள் உத்தமர்கள். பிடிபடுபவர்கள் முட்டாள்கள்.
2) காசு வாங்கிக்கொண்டு காரியம் செய்து கொடுப்பவர்கள் நேர்மையானவர்கள். காசு வாங்கியும் காரியம் ஆகாவிட்டால் அவர்கள் ஊழல்வாதிகள்.
3) தவறு செய்பவர்களைப்பற்றி அரசுக்கு தெரிந்தாலும் வேறு யாராவது புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.. அதுவும் அரசுக்கு தேவையான நேரத்தில் அல்லது சவுகரியமான நேரத்தில்...
4) சாட்சியும் ஆதார ஆவணங்களுமே ஒருவனை குற்றவாளி ஆக்க முடியும்.
5) பதவிகளில் இருப்பவர்கள் தவறுகள் செய்துவிட்டு சாட்சிகளையும் ஆதார ஆவணங்களையும் அழித்துவிட்டால் அவர்கள் செய்த தவறும் மறைந்து விடும். இன்றைய சூழலில் அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
6) போதுமான ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை ஆகும் குற்றவாளிகளும் உத்தமர்கள்தான். சந்தர்ப்ப சூழலில் மாட்டிக்கொள்ளும் உத்தமர்களும் குற்றவாளிகள்தான்...
இந்த சூழலில் நமக்கு சட்டத்தின் ஆட்சியைவிட தர்மத்தின் ஆட்சியே தேவை. அது என்ன தர்மத்தின் ஆட்சி?
ரத்தின சுருக்கமாக, ஒவ்வொரு மனிதனும் தம் கடமைகளை யாருடைய மேற்பார்வையும் இல்லாமல், சரியாக, நேர்மையாக செய்து, சக மனிதனை மதிக்க கற்றுக்கொண்டால் நம் தேசம் சுபிட்சமாகும். அதுதான் தர்மத்தின் ஆட்சி..
கடவுளே மஹாலிங்கம் இது நடப்பது உங்க கைலதான் இருக்கு...உடனடியா தர்மத்தின் ஆட்சி நம் தேசத்தில் ஏற்பட அருள் செய்யுங்க...
சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே போற்றி... ஓம் நம சிவாய...
4 comments:
//ரத்தின சுருக்கமாக, ஒவ்வொரு மனிதனும் தம் கடமைகளை யாருடைய மேற்பார்வையும் இல்லாமல், சரியாக, நேர்மையாக செய்து, சக மனிதனை மதிக்க கற்றுக்கொண்டால் நம் தேசம் சுபிட்சமாகும். அதுதான் தர்மத்தின் ஆட்சி..//
உண்மை ,வித்தியாசத்தையும் சரியாக அலசியி ருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அருமையான பகிர்வு
திரு தமிழ்த்தோட்டம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment