நம் அரசாங்கம் யாரை ஏழை என்று கருதி திட்டங்கள் தீட்டுகிறது என இன்று பேப்பரில் வந்திருக்கிறது... அதன் சுட்டி கீழே...
Spend Rs 32 a day? Govt says you can't be poor
நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பெருநகரத்தில் ரூ32 க்கு மேல் செலவு செய்பவர் என்றால் அல்லது ஒரு சிறுநகரத்தில் அல்லது கிராமத்தில் ரூ26க்கு மேல் செலவு செய்பவர் என்றால் நீங்கள் வருமைக்கோட்டுக்கு மேல் வந்து விட்டீர்கள்... எப்பூடி...
இதில் சாப்பாட்டுக்கு , காய்கறிக்கு , எண்ணைக்கு , பாலுக்கு , கல்விக்கு என ஒரு குடும்பம் (4நபர்) எவ்வளவு செலவு செய்வது எனவும் கணக்கு வேறு சொல்கிறார்கள். படிக்கும்போதே தலை சுற்றுகிறது.
இந்த இலக்கைக்கூட எட்ட முடியாமல் இருக்கும் அரசு உண்மையில் வெட்கப்பட வேண்டும். பேசாமல் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அரசு சலுகைகள் என அறிவித்துவிட்டு போய்விடலாம். (அவர்கள் கூட சண்டைக்கு வந்து விடுவார்கள்.)
அரசாங்கமே ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நபருக்கு ரூ120 சம்பளம் கொடுக்கிறது (கணக்கு காட்டவாவது). அப்படி பார்த்தால் வருடத்துக்கு 100 நாட்களுக்கு ரூ 12000-00. ஒரு குடும்பத்தில் 2 நபர்கள் இதில் வேலைக்கு சென்றால் வருடத்துக்கு ரூ 24000-00..
அதாவது நம் அரசாங்கம் இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திலேயே இந்த வறுமையை ஒழித்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்...
மக்களைப்பற்றியோ அவர்கள் வாழும் சூழல் பற்றியோ இருக்கும் விலைவாசி பற்றியோ கொஞ்சமும் தெரியாத, அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத சில பல அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கோடு கேலிக்கூத்தானது..
இதைக்கூட நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாக சாதிக்கவில்லை என நினைக்கும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
நேர்மையாக சிந்தித்தால், இன்றைய விலைவாசியில் ஒரு பெருநகரத்தில் சுமார் ரூ 2,40,000 க்கு குறைவாக செலவு செய்பவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வருபவர்கள்தான். இவர்கள் அனைவரையும் முன்னேற்றதான் நம் அரசாங்கம் பாடுபட வேண்டும்.
இதைவிடுத்து இல்லாத ஒரு வறுமைக்கோட்டை உருவாக்கி அனைவரையும் பொய் சொல்ல வைத்து அவர்களை முன்னேற்ற ஊழல் திட்டங்கள் தீட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.. அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு எல்லை விரிவு படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டு பெரும்பான்மை சமூகம் பயனடைய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.. அவை உடனடியாக செம்மையாக ஊழலின்றி செயல்படுத்தப்பட வேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்????
கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.
சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...
6 comments:
இந்த ரூபாய் கணக்கு சரியான காமெடி.இன்னும் 100 வருஷமானாலும் 32 ரூபாயை வைத்திருப்பார்கள்.மற்ற தொண்டுநிறுவனங்கள்,அமைப்புகள் வேறு அளவுகோல் வைத்து எடுக்கின்றன.ஆனாலும் குறைந்த பாடில்லை.ஏழைகளை அப்படியே வைத்திருப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு லாபம்,பகிர்வுக்கு நன்றி
கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.
வறுமைக்கோட்டுக்கு எப்படி அளவுகோல் வைக்கிராங்க?
திரு ஷண்முகவேல், தாங்கள் கூறுவது உண்மையே. இவர்களை முன்னேற விடாமல் அப்படியே வைத்திருந்தால்தான் அரசியல்வியாதிகள் பிழைக்க முடியும்.. என்ன ஒரு தொலைநோக்கு பார்வை???
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
திருமதி லக்ஷ்மி, இந்த கோடு நம்ம பிளானிங் கமிஷன் வரையறுத்து இருக்கு... இது யாருக்கு பலன் தர என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.
பகிர்வுக்கு நன்றி
திருமதி இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment