Wednesday, October 12, 2011

இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ள கருப்பு பணம்....$40 பில்லியன்

இன்றைக்கு கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது....

Scam 2.0: $40 bn of black money may have come back to India


அதாவது நம் நாட்டின் கருப்புபணம் நம் நாட்டிற்கு வந்ததாக ஒரு கணக்கு சொல்லி இருக்கிறார்கள்... அதன்படி, சென்ற ஒரு ஆண்டில் மட்டும் நம் நாட்டிற்குள் வந்த கருப்பு பணத்தின் மதிப்பு மட்டும் சுமார் $40 பில்லியன். 

இது தோராயமாக நம் நாட்டின் சென்ற ஆண்டின் 2010-11 ஏற்றுமதி கணக்குகளை மட்டும் படித்து சொல்லி இருக்கும் தொகைதான் இது. அதாவது பொருள் மற்றும் சர்வீசஸ் ஏற்றுமதிக்கும் நம் நாட்டுக்குள் வந்த பணத்தின் மதிப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது.

அதாவது மேல் நாடுகளில் இப்போது ஓரளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக ஆகிக்கொண்டு வருவதாலும், அந்த அளவுக்கு நம் நாட்டில் கெடுபிடிகள் அதிகம் இல்லாமல் இருப்பதும் மற்றும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை வைத்து இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதாலும் கருப்பு பணத்தை இந்தியாவில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பு என கருதுகிறார்கள் போல இருக்கிறது.

இது நம் அரசாங்கத்தின் கண்களுக்கு இன்னும் தட்டுப்பட வில்லை போல இருக்கிறது.சாமானியர்கள் லேசாக செலவு செய்தாலே ஆயிரம் கேள்விகள் கேட்கும் அரசாங்கம், கோடிக்கணக்கான பணத்தை இப்படி எடுத்து வந்ததை கேள்வி கேட்காமல் கமுக்கமாக இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

எப்போதுமே நம் நாட்டில் பலியாடு என்பது சாமானிய நடுத்தர மக்கள்தான். வசதி படைத்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யலாம் என்ற நிலை மாறும் வரை நம் நாடு உருப்பட வாய்ப்பு  நிச்சயம் இல்லை.

இதை யெல்லாம் அந்த மஹாலிங்கம் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார். ஆனால் இன்னும் ஒண்ணும் செய்யல. எங்கெங்கோ சுழட்டி அடிக்கும் அவர் சாட்டை இதிலும் சுழலும் நாள் வெகு தூரம் இல்லை.


சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஹர ஹர மஹாதேவா சரணம்...

5 comments:

shanmugavel said...

//எப்போதுமே நம் நாட்டில் பலியாடு என்பது சாமானிய நடுத்தர மக்கள்தான். வசதி படைத்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யலாம் என்ற நிலை மாறும் வரை நம் நாடு உருப்பட வாய்ப்பு நிச்சயம் இல்லை.//

சத்தியமான வார்த்தை.பகிர்வுக்கு நன்றி,

இராஜராஜேஸ்வரி said...

எப்போதுமே நம் நாட்டில் பலியாடு என்பது சாமானிய நடுத்தர மக்கள்தான்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஹர ஹர மஹாதேவா சரணம்..

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திருமதி இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

PMsyed said...

நல்ல பதிவு அனைவரும் படித்து பயன்பெர வேன்டிய ஆர்ட்டிகல்
நன்றி

Sankar Gurusamy said...

திரு சூப்பர் சையத், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..