இன்று 31-10-2011 உலகின் மக்கள்தொகை 700 கோடி ஆக ஆனது. செய்தி சுட்டி கீழே :
World's seven billionth baby born in UP?
இதில் இந்தியா மற்றும் சீனா வில் மட்டுமே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் இந்த இரண்டு நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தியில் நமது இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 140 மக்கள் வாழ்கிறார்கள், அதுவே இந்தியாவில் 368 பேர் வாழ்கிறார்கள்.
அதிக மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் இருக்கும் நம் இந்தியாவின் சவால்கள் மிக அதிகம்.
1) அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உணவு, உடை, இருப்பிடம்..
2) அனைவருக்கும் சிறந்த கல்வி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்
3) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்
4) சிறந்த நேர்மையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்
இவற்றை நாம் ஓரளவுக்கு செய்து வந்தாலும், இன்னும் விரைவான வேகத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
இதற்கு தடையாக இருக்கும் காரணிகளை அகற்றி விரைவில் நாம் நம் தேவைகளில் தன்னிறைவு அடைய இந்த முக்கியமான தருணத்தில் வேண்டிக்கொள்வோம்..
சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...
5 comments:
//சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா//
இவர்தான் அத்தனை பேருக்கும் படியளக்க வேண்டும்.
உண்மை தான் .சவால்களும் தடைகளும் அதிகமே! தொலை நோக்குத் திட்டங்கள் தேவை.பகிர்வுக்கு நன்றி.
திரு கைலாஷி, திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
நாம் சிந்திக்கவேண்டிய நேரமிது..
தொடர்புடைய எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழக்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/11/700.html
முனைவர்.இரா.குணசீலன், நிச்சயம் பார்க்கிறேன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment