Monday, October 17, 2011

மின்சாரம் - சில கவலைகள்...

இன்று 17 அக்டோபர் 2011 முதல் 3 நாட்களுக்கு கோல் இந்தியாவில் ஊழியர்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நிலக்கரி இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் நம் தேசத்தில் இது ஒரு பெரிய அடியாகவே இருக்கும்...

ஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் திண்டாடும் நாம் இன்னும் சில மணிநேர மின் வெட்டிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் நினைப்பதுபோல் ஆயிரம் கோடிக்கணக்கில் முதலீடு செய்தால்தான் மின்சாரம் நமக்கு கிடைக்குமா? என இன்று கூகிளில் தேடிக் கொண்டிருந்தபோது சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன..

பீகார் மாநிலத்தில் ஒரு தனியார் கம்பெனி நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறதாம். ஒரு நாளைக்கு ரூ 2 செலவில் வழங்குவதாக தெரிகிறது. அந்த கம்பெனியின் வலைத்தள இணைப்புக்கு இங்கே அழுத்தவும்.  அதில் மேலும் பல விவரங்கள் கிடைக்கிறது.

இதுபோல ஒரு சில நிறுவனங்கள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் வைத்திருக்கிறார்கள். 

மேலும் நான் எனது பள்ளி நாட்களில் கேள்விப்பட்ட கோபார் கேஸ் எனப்படும் சாண எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க தொழில் நுட்பம் ஏற்கனவே இங்கு இருக்கிறது. அதை ஏன் தீவிரமாக முன்னெடுத்து செல்லக்கூடாது??

சிறிய சூரிய சக்தி மின் நிலையங்களை ஒவ்வொரு பெரிய கட்டிடங்களிலும் அமைக்க முடியும் என சில நிறுவனங்கள் சொல்கின்றன.. அரசாங்கமும் அதற்கு மானியம் வழங்குகிறது.

இது போல நிறுவனங்களை அணுகி அவற்றின் மூலம் நம் மின் உற்பத்திகளை பெருக்கினால் நம் மின் பற்றாக்குறைகள் தீராதா??

மேலும் நம் நாட்டில் இருக்கும் பெரிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து இதை மேலும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தம் வளாகங்களில் இப்படிப்பட்ட புதிய தொழில் நுட்பத்துடன் சிறு மின் தயாரிப்பு நிலையங்களை அமைத்தால் அவைகளுக்கான மின் பயன்பாடு மிச்சம் தானே..

உண்மையில் மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு அரசாங்கமும் மனசு வைத்து ஆவன செய்தால் விரைவில் தீர்வு வரும் என நம்புகிறேன்.. செய்வார்களா???

அந்த மஹாலிங்கம்தான் அருள் செய்யணும்...

சதுரகிரி நாயகனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

12 comments:

shanmugavel said...

பெரிய பிரச்சினையா இருக்கு சார்.ஏதாவது தீர்வு கெடைச்சாதான் சரி.நீங்கள் சொன்ன மாதிரி மனமிருந்தால் மார்கமுண்டு.பகிர்வுக்கு நன்றி.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், நேத்தே இந்த ஸ்ட்ரைக் பிரச்சினை முடிவுக்கு வந்துட்டது..

ஆனாலும் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியாளர்கள் தயாரா இல்லைங்கரதுதான் நிதர்சனம்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,



இந்த பிரச்சனைக்கு கூடிய விரைவில் மாற்று முறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நினைப்பில் அரசாங்கம் முழு மூச்சுடன் இறங்கி வருங்கால இளைஞர்களுக்கு உதவி செய்து மின் பற்றாக்குறையை முழுவதுமாக நீக்கவேண்டும்.

http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, நிச்சயம் செய்ய வேண்டும்.. நம்புவோம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Karthikeyan Rajendran said...

யோசிக்க வேண்டியோர்!!! யோசித்தால், நல்ல வழி பிறக்கும், எப்போ யோசிப்பாயிங்களோ!!!!!!!

Sankar Gurusamy said...

திரு ஸ்பார்க் கார்த்தி, நம்புவோம்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

Sankar Gurusamy said...

திருமதி அம்பாளடியாள், தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

Sankar Gurusamy said...

திரு ரெவெரி, நன்றி.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செய்தி நல்ல செய்திதான் ---

Sankar Gurusamy said...

திரு அப்பு, இந்த உமி தவிரவும் நம் கிராமங்களில் இருக்கும் வேலிக் கருவேல மரங்களை வெட்டி உபயோகப் படுத்தி கூட மின்சாரம் தயாரிக்க முடியும். மேலும் இந்த அதிக உபயோகமில்லாத, நிலத்தடி நீரை உறிஞ்சுகின்ற ஒரு மரத்தை அழிக்கவும் ஒரு வாய்ப்பாகும். இதனால் கிராம மக்களிடையே ஒரு வேலைவாய்ப்பும் உருவாக வாய்ப்பு ஏற்படும். யாராவது இது பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு முயற்சி செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..