நம் தேசம் சுதந்திரமடைந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தை கைக்கொண்ட நினைவு தினம் நம் குடியரசு தினம். இந்த நாளில் நமது தேசத்தின் முன்னேற்றத்தினை தடுத்துக்கொண்டிருக்கும் சில பிரச்சினைகளை பற்றிய எனது அனுமானத்தை முன் வைக்கிறேன்..
தனிமனித ஒழுக்கமும், கடமை உணர்வும், நேர்மையும், சத்தியமும் அபாயமான அளவுக்கு குறைந்துபோனது.
மக்களிடையே குறைந்துவரும் சமூக பொறுப்பும், அதிகரிக்கும் வடிகட்டிய சுயநல சிந்தனைகளும்.
பணம் பிரதானமாகவும், மனிதம் கடைசியாகவும் கருத்தப்படும் ஒரு வாழ்வியலை கைக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவெடுத்தது.
அதிகரித்துவரும் குடி/போதைப்பழக்கமும், அதுதான் நாகரீகம் என இளைய சமுதாயம் தீவிரமாக நம்புவதும்.
சிதைந்துவரும் விவசாயத்தை அடியோடு புறக்கணிக்கும் அரசாங்கம்.
அரசாங்கத்தில் மலிந்துவிட்ட லஞ்சமும் ஊழலும்.
அதிகரிக்கும் விலைவாசியும், உயரும் வறுமையும்.
சட்டங்கள் சரியான முறையில், எல்லோருக்கும் சமமாக அமல் படுத்தப்படாதது. வலுத்தவனுக்கு ஒருவிதமாகவும், இளைத்தவனுக்கு ஒருவிதமாகவும் அமலாகும் சட்டங்களும் அதை அமல்படுத்துபவர்களும்.
சட்டங்களில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பது தெரிந்தும் அதை அடைக்க யாரும் பெரிய அளவில் முயற்சி செய்யாதது. மற்றும் புதிய சட்டங்கள் செய்யும்போதும் பொத்தல்களுடனேயே செய்ய முனைவது.
கடவுளே, மஹாலிங்கம், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே.. ஏதாவது செஞ்சு நம்ம தேசத்து மக்களை காப்பாத்துங்க..
சதுரகிரி நாயகனே சரணம்.. சரணம்..
2 comments:
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
திரு கே ஆர் விஜயன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment