நான் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது கடவுளிடம் விழுந்து விழுந்து பிரார்த்தனை செய்வேன். கேட்காத சமாசாரமே இல்லைங்கர அளவுக்கு இருக்கும் என் பிரார்த்தனைகள். எனக்கு தேவையான சில விசயங்கள் பலிச்சது.
என்னைப் பார்த்து என் நண்பனும் என்னைப் போலவே பிரார்த்தனை செய்தான். ஆனால் சில நாட்களில் ஒன்னும் வேலைக்காகவில்லை என்று விட்டு விட்டான்.
தினமும் கடவுளிடம் எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்கிறோம். அது எல்லோருக்கும் ஒரே மாதிரி பலிப்பதில்லை. இதன் காரணம் என்ன என சிந்தித்த போது எழுந்த சிந்தனைகள்.
1) முதலில், நம் மனதுக்கு நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு இருக்கிறது. முதலில் நாம் நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று ஆழ்மனதில் நம்பவேண்டும்.
சிலர் நம்பிக்கை இல்லாததுபோல பேசினாலும் ஆழ் மனதில் பெரும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். இது ஆழ்மனதுக்கு நம்பிக்கை யூட்ட செய்யப்படும் யுக்தியாகயும் கைகொள்வார்கள்.
வேண்டுதல்கள் வைப்பதும் நம் மனதின் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள செய்யும் ஒரு யுக்தியே.
2) பிரார்த்தனைகளில் இரு விதம் இருக்கிறது. ஒன்று தேவைக்கான பிரார்த்தனைகள். மற்றொன்றும் நம் ஆசைக்கான பிரார்த்தனைகள்.
பெரும்பாலும் நம் வாழ்வின் தேவைக்கான பிரார்த்தனைகள் நாம் கேட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் நமக்கு தேவையான அளவுக்கு நிறைவேறிவிடும். ஆசை / பேராசைக்கான பிரார்த்தனைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்படும். அல்லது நிறைவேறாமலே போகி விடும். இது கடவுளிடம் தவறு இல்லை. நம் பிரார்த்தனையில்தான் தவறு இருக்கிறது.
3) ஒருமுறை ஒரு நாத்திக நண்பர் என்னிடம் வந்து, ”இப்பிடி விழுந்து விழுந்து பிரார்த்தனை பண்றியே அது கடவுளுக்கு புரியுமா? அவர்தான் கடவுளாச்சே அவருக்கு உனக்கு தேவையானது என்னன்னு தெரியாதா? அவர்கிட்ட நீ கேட்டுத்தான் அதை உனக்கு அவர் குடுக்கணுமா? கேக்காட்டி தர மாட்டாரா?” இப்பிடி சராமாரியா கேள்விகளை அடுக்கி என்னை சிந்திக்க வைத்தார்.
சிந்தனை முடிவில் அவருக்கு அளித்த பதில் :
”நமது பிரார்த்தனைகள் கடவுளிடம் சொல்லப்படும் போது எந்த மொழியில் சொன்னாலும் அவருக்கு புரியும். ஏன்னா கடவுள் நமக்கு உள்ளயும் இருக்கிறார். நமக்கு புரிந்த பிரார்த்தனை அவருக்கும் நிச்சயம் புரியும்.
கடவுளுக்கு நம் தேவைகள் என்னன்னு தெரிஞ்சாலும் அதை அவர் குடுக்கரவரை பொறுமை இல்லாத நாம் நமக்கான தேவைகளை அவரிடம் கேட்கிறோம்.
நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்கு தரவேண்டிதை தரவேண்டிய நேரத்தில் நிச்சயம் கடவுள் தருவார்.”
நமக்கு தேவை - கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.. அது இருந்தால் எப்படிப்பட்ட பிரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும்...
கடவுளே...மஹாலிங்கம்.. அப்பிடிப்பட்ட ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் எல்லாருக்கும் கிடைக்க நீங்கதான் அருள் செய்யணும்...
சதுரகிரியாரே போற்றி... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்...
6 comments:
//நமக்கு தேவை - கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.. அது இருந்தால் எப்படிப்பட்ட பிரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும்...// சிறப்பான வரிகள்.பகிர்வுக்கு நன்றி
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வணக்கம் சங்கர் குருசாமி அவர்களே,
//பிரார்த்தனைகளில் இரு விதம் இருக்கிறது. ஒன்று தேவைக்கான பிரார்த்தனைகள். மற்றொன்றும் நம் ஆசைக்கான பிரார்த்தனைகள். //
மிகச் சரியான சிந்தனை..
இறைவன் நமது தேவைகளை கேட்காமலேயே தந்துவிடுகிறான் என்பதே உண்மை..
நமது ஆசைகளையும் தருகிறான்.. அதன் அனுபவத்தையும் நம்மையே அனுபவிக்கச் சொல்லிவிடுகிறான்..
பிரார்த்தனை அவசியம் தான் நமக்கு பக்குவம் வரும் வரை..
எப்படி பிரார்த்திக்க வேண்டும் என மணிவாசகர் திருவாசகத்தில் ஒரு பதிகமே பாடியிருக்கிறார்..
" பிரார்த்தனை பத்து "
என்று...
எத்தனை பேர் அவர் கேட்டபடி கேட்க முடியும் ?
முயற்சிப்போம்... நன்றி
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
nalla karuthu
திரு அருள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment