நாம் அடையும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் இருந்து நமக்கு வருபவை என்றாலும், சில விஷயங்கள் கடவுளால் மட்டுமே தர முடியும் என்ற நிலையில் இருப்பவை... அவை பற்றி...
1) நல்ல உடல், மன ஆரோக்கியம்
2) சுயநலமில்லா பந்து மித்திரர்கள், சுற்றத்தார்கள்
3) சத் சங்கம், சத் சிந்தனை
4) நல்ல மனைவி, மக்கள்
5) தேச, உலக நலன்
6) மன நிம்மதி, ஆனந்தம், மன அமைதி
7) ஞானம்
இவை அனைத்தும் இறைவன் மட்டுமே தர முடியும். மேலும் நமது, ”இந்த உலகில் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்ற பிரார்த்தனைகளின் முடிவு மேற்கண்ட ஏதாவது ஒன்றில் வந்து தான் நிற்கும்.
எனவே பொதுவாக இவற்றை பிரார்த்தனை செய்தாலே இறைவன் நமக்கு இந்த உலகில் இவற்றை அடைய தேவையானவற்றை உடனடியாக அளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.
குறைந்த பட்சம், மன நிம்மதியும் ஞானமும் நமக்கு வாய்த்தால் வேறு எதுவும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை.
இதில் ஞானம் கை கூடினால் நிம்மதி தானாக கிடைக்கும். எனவே ஞானம் வேண்டி பிரார்த்திப்போம். ஒரு நிம்மதியான சமுதாயம் படைப்போம்.
கடவுளே மஹாலிங்கம்.. எல்லாருக்கும் மன நிம்மதியும் ஞானமும் கைகூட அருள் செய்யுங்கள்..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....
8 comments:
அருமையான விஷயம்...
உண்மைதான் தோழரே..
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்..
என்று 16 பேறுகளையும் வேண்டும் அம்மைப்பாடல்
நினைவுக்கு வருகிறது..
வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
http://sivaayasivaa.blogspot.com
திரு # கவிதை வீதி # சௌந்தர், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உண்மையே இவற்றை கடவுள் மட்டுமே தரமுடியும்.பகிர்வுக்கு நன்றி.
எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் கேட்கக்கூடியது அவன் தாள் பற்றி பிறவா வரம் வேண்டும் என்பதொன்றே.மற்றவை யாவும் மாயையின் தாக்கத்தால் வரும் ஐம்புலன்களின் தேவையேஇன்றி வேறில்லை. ஆன்மநிலையில் சாட்சியாய் நின்று முற்றரிவும், முற்றுணர்வும்,அதீத கவனமும் பெரும்கால் "நாம், எனது" எனும் பற்று நம்மைவிட்டகலும். அதுவரை நம் பிறப்பு நம் கையில்தான். அதாவது, நம் கர்ம வினையை ஒட்டி அவன் கொடுக்கும் வரம்தான் நம் வாழ்க்கை.இதில் சுகமும், துக்கமும் கலந்தே இருக்கும். எது மேலோங்கி இருக்கிறது என்பது வரத்தை(கர்ம பலன் வழி) பொறுத்தது.அவ்வபோழுது, நாம் வேண்டி ஆண்டவனிடமிருந்து சில வரங்கள் கிடைக்கலாம்.ஆயினும், நம் கர்மக் கணக்கை நாம்தான் அனுபவிக்கவேண்டும்.
விடாத தெய்வப்பற்று ஒளியாய் நின்று வழிகாட்ட வினை கரையும், துயர் விலகும், ஞானம் பெருகும்....இறுதியில் அதுவே தன்னைத்தான் அறிய வழி காட்டும்.
திரு அபியாஷ், தங்கள் கூற்று முற்றிலும் உண்மையே. நாம் இந்த உலகில் வாழ பிரார்த்திக்கும் பிரார்த்தனைகளின் சாராம்சமே இந்த பதிவு...
அவனருள் இல்லாமல் அவன் இல்லை... இதை அருமையாக விளக்கிய தங்கள் கருத்துக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி...
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment