இன்றைக்கு இருக்கும் தியான முறைகள் பெரும்பாலும் மதம் சார்ந்தே இருக்கின்றன.. அல்லது இந்துமதம், பௌத்த மதம், ஜைன மதம் இப்படிப்பட்ட மதங்களில் இருந்துதான் வந்துள்ளன.. என்னதான் பல தியான முறைகள் மதத்துக்கு அப்பாற்பட்டது என்று பிரச்சாரம் செய்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.
ஆனாலும் உண்மையில் தியானம் தோன்றிய மதங்கள் எதுவாயினும் தியானம் என்பது மனிதனுக்குள் ஒரு நன்மையான மாற்றம் விளைவிக்கும் ஒரு மருந்துதான்.
மருந்து தயாரிப்பவர் அல்லது தருபவர் யாராக இருந்தாலும் வியாதி குணமானால் சரிதானே?? உளியை செய்தது யாராக இருந்தாலும் அது சிற்பம் வடிக்க உதவினால் சரிதானே??? அதுபோலவே தியானமும், மூல மதம் எதுவாக இருந்தாலும் அது நம்மை சரியான வழியில் செலுத்த உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
ஆனால், தம் மதத்தின் மீது அதீத பற்று உடைவர்கள் இதை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் ஒரு நெருடலுடன் தியானம் செய்வதற்கு பதிலாக தம் மதத்தின் கடமைகளை சரியாக செய்தாலே ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.
விமானம் யார் கண்டுபிடித்தாலும் விரைவாக பயணம் செய்ய அதை நாம் உபயோகப் படுத்துவதுபோல, தியானமும், நாம் ஆன்மீகத்தில் விரைவாக ஞானம் நோக்கி பயணம் செய்ய உதவுகிறது. இதை புரிந்து கொண்டு தியானம் செய்த சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர்களின் தியான அனுபவம் மிக அதிசயமானது. அவர்கள் கூற்றுப்படி, அவர்கள் செய்துவந்த தியானம் அவர்களுக்கு வேறு மதத்தின் பாற்பட்டதானாலும், தத்தமது மதக் கடமைகளில் அதிக கவனம் செலுத்தும் படியாக அவர்கள் வாழ்க்கைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. தியானமும் செய்து, தம் மதக் கடமைகளையும் அவர்கள் செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு காலப்போக்கில் இது நம் மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விசயம் தானா என்ற நெருடல் ஏற்பட தியானம் செய்வதை நிறுத்திவிட்டார்..
எனவே தியானங்களின் மதத்தைப்பற்றி அதிக சிந்தனை செய்வதை விட்டுவிட்டு அவற்றின் அளப்பரிய பலன்களை எண்ணிப் பார்த்து பயிற்சி செய்தால் நம் வாழ்வு சிறக்கும். ஞானம் விரைவில் சித்திக்கும்.
கடவுளே மஹாலிங்கம், தியானத்தின் இந்த உண்மையான தன்மை எல்லாருக்கும் புரிஞ்சு அவங்க செம்மையாக தியானம் செய்து விரைவில் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்.
சதுரகிரி நாதனே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...
9 comments:
சதுரகிரி நாதனே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...
//ஆனாலும் உண்மையில் தியானம் தோன்றிய மதங்கள் எதுவாயினும் தியானம் என்பது மனிதனுக்குள் ஒரு நன்மையான மாற்றம் விளைவிக்கும் ஒரு மருந்துதான்.//
சிறப்பான வார்த்தைகள்.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல்,
திருமதி இராஜராஜேஸ்வரி மேடம்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//விமானம் யார் கண்டுபிடித்தாலும் விரைவாக பயணம் செய்ய அதை நாம் உபயோகப் படுத்துவதுபோல, தியானமும், நாம் ஆன்மீகத்தில் விரைவாக ஞானம் நோக்கி பயணம் செய்ய உதவுகிறது. //
மிக அருமையான ஒப்பு நோக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
ஒரு வேண்டுகோள்..
இன்றைய சிவயசிவ ( திசைகளில் எது சிறந்தது ? )
என்பதில் பின் இணப்பு ஒன்று இணைத்துள்ளேன்
வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை வந்து பார்வையிடுங்கள்..
நன்றி..
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வலையுலக நட்புச் சங்கிலித் தொடரை தொடர தங்களை அழைத்திருக்கிறேன்..
வாருங்கள் கை கோர்ப்போம்...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
திரு சிவ.சி.மா. ஜானகிராமன்,நிச்சயம் செய்கிறேன்..
தங்கள் அழைப்பிற்கு நன்றி
namakkum naatukkum nallavaimattumay
திரு கவிக்குரல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment