சில நாட்களுக்கு முன் நம் மத்திய அரசு சமூக ஆர்வலர்களுடன் லோக்பால் விசயமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பின், இனிமேல் எந்த விதமான சட்ட விவாதத்திலும் எந்த சமூக ஆர்வலர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என அறிவித்தது.
அதன் பின் நடந்த லோக்பால் பற்றிய அனைத்துகட்சி கூட்டத்தில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசின் நடவடிக்கையை பெரும்பாலான கட்சிகள் கண்டித்ததாகவும், அதுவும் முதலில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சு நடத்திவிட்டு இப்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
மக்கள் நலனில் உண்மையான் அக்கரையுடன் செயல்படும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட எந்த ஜனநாயக அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
மாறாக, தேர்தலில் நின்று ஜெயித்து விட்டால் மட்டுமே மக்கள் நம்பிக்கை இருக்கிறது, இவர்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கரை கொண்டவர்கள் என்ற மாய தோற்றத்தை நம் அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய மோசடி என்ற விசயம் நமக்கு அலைக்கற்றை ஊழலிலும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், கருப்புப் பண விசயத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும் அம்மணமாக தெரிகிறது.
மேலும் இன்றைய செய்தியில் அரசு கருப்பு பணத்தை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாகவும் அதில் நேற்று உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி..
இதற்கு முன் அலைக்கற்றை ஊழல் விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் விசாரணையே நடைபெற ஆரம்பித்தது. நடவடிக்கையும் ஒவ்வொரு முறை குட்டிய பிறகே நொண்டி நொண்டி எடுக்கப்படுகிறது. இந்த சூழலில் மக்களுக்கு உச்ச நீதிமன்றம் இந்த கருப்புப் பண விசயத்தில் தலையிட்ட பின் ஒரு நம்பிக்கை கீற்று ஏற்பட்டிருக்கிறது.
இப்போது எனது சந்தேகம் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற பொறுப்பு உள்ள அரசியல்கட்சிகளின் ஆட்சியாளர்கள், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தம் சொந்த நலனுக்காக காரியங்கள் செய்து கொள்ளும்பொழுது, இவர்கள்மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும் / இருக்கும் என நினைக்கிறார்கள், என்பது புரியவில்லை.
மக்களின் நம்பிக்கையைப் பெறாத அல்லது இழந்த ஆட்சியாளர்கள் செய்யும் ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது...
இப்படி இருக்கும் நேரத்தில் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல் படும் நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும் நம் தேசத்தை ஆள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இருட்டை விரட்டுவதற்கு எளிய வழி ஒரு விளக்கை ஏற்றுவதே....
இப்படிப்பட்ட மோசடி அரசியல்வாதிகள் ஒழிய, திரு அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் அரசியலில் குதித்து ஒரு கட்சி ஆரம்பித்து, மக்களுக்கு நல் வழி காட்ட முன்வர வேண்டும்.
திரு அப்துல் கலாம், கிரண் பேடி போன்றோர் மக்களுக்கு சரியான தலைவர்களை அடையாளம் காட்ட அரசியல் களம் காணவேண்டும்.
மேலும் நேர்மையானவர்கள் அரசியல் களம் கண்டு தேசம் செழிக்க உதவ வேண்டும்.
இதெல்லாம் நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்.
சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!! சதுரகிரி நாதனே சரணம்!!!
4 comments:
தமிழ்நாட்டில் ஏற்பட்டது போல
டெல்லியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்
என்பது எமது கருத்து..
பார்ப்போம்..
எல்லாம் சிவன் செயல்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை போய் வெகு காலமாயிற்று சங்கர்.இப்போது மக்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான்.நல்ல பதிவு.
அரசியலில் ஒண்ணுமே புரியல நண்பா
வலைசரத்தில் இன்று
வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க
திரு சிவ சி மா ஜானகிராமன், திரு ஷண்முகவேல், திரு “என் ராஜபாட்டை”-ராஜா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment