Tuesday, July 19, 2011

முத்தான மூன்று..

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களின் அழைப்பிற்கிணங்க முத்தான மூண்று என்ற தலைப்பில் இந்த சங்கிலிப் பதிவு :

குரு :
மூன்று என்றவுடன் நியூமராலஜியில் குருவைக் குறிக்கும். முதலில் என் குருவை வணங்கி இந்த சங்கிலிக் கண்ணிப் பதிவு நல்ல படியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

கடவுள் கடாட்சம் :
அந்த உலகளந்த பெருமாள் மூன்று அடிகளால் இந்த உலகத்தை அளந்து மாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி ஆட்கொண்டதாக புராணம் கூறுகிறது.. அந்த மாயவன் இறைவன் நம் அனைவரின் மும்மலங்களான கர்மங்களை அடக்கி ஆட்கொள்வானாக...

குடும்பத் துணை :
இந்துக்களான நம் திருமண வாழ்க்கை தாலியில் மூன்று முடிச்சுடன் தொடங்குகிறது.. அனைவருக்கும் சிறப்பான திருமண வாழ்வு அமைந்து சுபிட்சமாக வாழ ஆண்டவன் அருளட்டும்...

சந்தர்ப்பங்கள் :
நீரில் நீச்சல் தெரியாதவர்கள் விழுந்துவிட்டால் மூன்று முறை அவர்களை நீர் மேலே தூக்கி விடுமாம்.. அதுபோல் நம் வாழ்விலும் இக்கட்டான நிலைகளில் ஆண்டவனும் நம்மை பலமுறை தூக்கி விடுகிறான்.

மகிழ்ச்சி :
அந்த காலத்தில் சினிமாவில் ஹீரோ வில்லனிடம் எப்பவும் மூன்று அடி வாங்கி விட்டுத்தான் திருப்பி அடிக்க ஆரம்பிப்பார். அது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. இப்ப நினைச்சாலும் புரியவில்லை...ஆனா நம்மளால அத விசில் அடிச்சு சந்தோசமா எஞ்ஜாய் பண்ண முடிஞ்சது...


கடவுளே மஹாலிங்கம்,  உலக மக்கள் அனைவருக்கு அருமையான குரு அமைந்து, கடவுள் கடாட்சம் கிடைத்து, சிறந்த குடும்பத் துணை அமைந்து, வாழ்வில் முன்னேற சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைத்து, மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்க்கை ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....ஹரஹர மஹாதேவா போற்றி...

இந்த சங்கிலித் தொடரைத்தொடர திரு ஷண்முகவேல் அவர்களை அழைக்கிறேன்... http://counselforany.blogspot.com/

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

கடவுளே மஹாலிங்கம், உலக மக்கள் அனைவருக்கு அருமையான குரு அமைந்து, கடவுள் கடாட்சம் கிடைத்து, சிறந்த குடும்பத் துணை அமைந்து, வாழ்வில் முன்னேற சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைத்து, மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்க்கை ஏற்பட அருள் செய்யுங்க.//

நிறைவான பிரார்த்தனை.

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சங்கர் குருசாமி அவர்களே,

எமது வேண்டுகோளை ஏற்று
உடனடியாக இந்த இணைப்பில் இணைந்த தங்களுக்கு முதற்கண் நன்றி..

மூன்று என்பதை மிக வித்தியாசமாக
அணுகியிருக்கிறீர்கள்..

குருவிலிருந்து ஆரம்பித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Sankar Gurusamy said...

திரு சிவ சி மா ஜானகிராமன், இப்படி ஒரு விஷயத்தை எழுதத் தூண்டிய தங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

shanmugavel said...

இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.சிறப்பான பிரார்த்தனை.நன்றி.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தங்களின் பதிவை எதிர் நோக்கி இருக்கிறோம்..

Karthikeyan Rajendran said...

மூன்று என்பதை மிக வித்தியாசமாக
அணுகியிருக்கிறீர்கள்..
ஜானகிராமன் சார். சொன்ன மாதிரி உங்கள் வித்யாசமான அணுகு முறை
நன்று தொடரட்டும், பதிவு

Sankar Gurusamy said...

திரு ஸ்பார்க் கார்த்தி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Karthikeyan Rajendran said...

அன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் மற்றும் கூகுள் + ல் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......

Sankar Gurusamy said...

திரு ஸ்பார்க் கார்த்தி, எல்லா சோசியல் வெப்சைட்களும் உபயோகிக்க எளிதானதுதான். சில நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தினால், தானே தெரிந்துகொள்வீர்கள்..