இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும், நம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய இலக்கு ஞானம். இதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தாலும், விரைவில், பாதுகாப்பாக அடைய சரியான வழி தியானமே..
தியானம் செய்வதால் என்ன பயன்? நமக்கு சக்திகள் கிடைக்குமா? பறக்க முடியுமா? மறைய முடியுமா? எதிரியை அழிக்க முடியுமா? நிறைய பணம் கிடைக்குமா?? அது என்னதான் செய்யும்?
நானும் தியானம் கற்று சில நாட்களாக செய்து வருகிறேன்.. என் அனுபவத்தில் அறிந்தவை :
முதலில் நமக்கு நம்மை உண்மையாக அறிமுகம் செய்து வைக்கும்.. நமது கொள்ளளவு (Capacity) என்ன என்று நமக்கு உணர்த்தும். நாம் நினைப்பது போல் ஒரு சூப்பர்மேன் அல்ல அல்லது ஒரு உதவாக்கரை அல்ல.. நமது உண்மையான மதிப்பீடு நமக்கு மிக முக்கியம். இதிலிருந்துதான் நாம் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அதை நமக்கு அழகாக நாசூக்காக உணர்த்துகிறது.
அடுத்து நம் வாழ்வின் உண்மையான வாழ்வியல் தேவைகள் என்ன என நமக்கு உணர்த்தி நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. மேலும் சில தேவையில்லாத விசயங்களில் நாம் மதி மயங்கி மூழ்கிக் கிடக்கும் போது அதிலிருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறது..
இது நம் பழக்க வழக்கங்களில் ஒரு நேர் மறையான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
நம் வாழ்வின் இலக்கான ஞானம் அடைய நமக்கு பொருத்தமான ஒரு Custom made வழியில் நம் வாழ்வை வழி நடத்துகிறது. ஞானம் அடைய நாம் செய்யவேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வைக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இதை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான தியான முறைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யார் யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள். பல பிரபலமான அமைப்புகளும் இருக்கின்றன.
யாரிடம் கற்பது? எதை கற்பது? எது சரியான தியானம்? எது போலி தியானம்? ஆயிரம் கேள்விகள்..
இவற்றிற்கு உண்மையான, நேர்மையான பதில், நம் மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளலாம். நமக்கு யார் மீது அபிமானம் இருக்கிறதோ அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். நமது சுற்றத்தார் / நட்பு வட்டத்தில் நம்பிக்கைக்கு உரிவர்கள் பரிந்துரைக்கும் தியானம் கற்றுக் கொள்ளலாம்.
என் தியான ஆசிரியர் கூறிய ஒரு மிக முக்கியமான விசயம் - ”தியானம் எல்லாமே ஒரே விதமான பலன் தரும். அதை சொல்லிக் கொடுப்பவர்கள்தான் அதை பாகுபடுத்தி அதில் ஒரு உயர்வு தாழ்வு ஏற்படுத்திவிட்டார்கள். எனவே ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். மாறி மாறி மனதை அதுவோ இதுவோ என்று அலைய விடாதீர்கள்.”
இதில் அதி முக்கியமான விசயம் தொடர்ந்த தியான பயிற்சி. இதுவே நம் வாழ்வின் இலக்கான ஞானத்துக்கு நம்மை பாதுகாப்பாக இட்டுச்செல்லும்.
கடவுளே மஹாலிங்கம்.. உங்க அருளால எல்லாரும் தியானம் செய்து வாழ்வின் லட்சியமான ஞானத்தை அடைய அருள் செய்யுங்க..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...
11 comments:
சரியான கருத்துக்கள்.துவக்கத்தில் யாரையாவது சார்ந்து முயற்சி செய்வதே நல்லது.நல்ல பகிர்வு.
அருமை தோழரே..
தியானம் குறித்து நன்கு சொல்லியிருக்கிறீர்கள்..
நாங்களும் தினமும் ஜபிக்கும் போது தியானம் என்ற பெயரில் ஒரு 2 நிமிடம் ஓட்டறோம்..
ம்ம்.. இறையருளால் மனமொன்றிய நிலை வர பிரார்த்திக்கிறேன்.
திரு ஷண்முகவேல், திரு சிவ.சி.மா.ஜானகிராமன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//மாறி மாறி மனதை அதுவோ இதுவோ என்று அலைய விடாதீர்கள்.”//
எல்லாமும் ஒன்றுதான். அதன் அடிப்படையை நாம் புரிந்து கொள்வதில்தான் வெற்றியே இருக்கிறது.,
நல்ல கருத்துகள் சங்கர் குருசாமி...
வாழ்த்துகள்
திரு நிகழ்காலத்தில், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
http://www.livingextra.com/2011/07/blog-post_08.html இந்த பதிவுல போயி நல்ல பதிவுன்னி சொல்லிருக்கீங்களே..
இந்தாளு திருட்டு பதிவர் அவர் பதிவு எல்லாமே திருட்டு பதிவு..
இந்தமாதிரி திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்காதீங்க..
சித்தர்கள் ராஜ்ஜியம் பதிவுல இருந்து திருடி போட்டிருக்கார்..
http://siththarkal.blogspot.com/2010/12/blog-post_08.html
nalla pathivu..
valththukka..
can you come my said?
திரு பிரியமுடன் வசந்த், நானும் பார்த்தேன். சித்தர்கள், ஆன்மீக விசயத்தில் தவறு என்பதை வரையறுக்க நமக்கு அருகதை இல்லை. அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதற்கு அவர்கள் விளக்கம் சொல்ல வேண்டியது அகத்தியருக்கே.. சொல்வார்கள் என்று எண்ணுகிறேன். நிச்சயம் அவர் சரியான நேரத்தில் கேட்பார். சுட்டிக் காட்டியற்கு மிகவும் நன்றி..
திரு விடிவெள்ளி, தங்கள் வலைத்தளம் மிகவும் அருமையாக உள்ளது.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தவறு என்பதை வரையறுக்க நமக்கு அருகதை இல்லை. //
ஊக்கம் கொடுக்காதீங்கன்னு தானே சொன்னேன் தட்டி கேளுங்கன்னு சொல்லலயே..
நீங்க அங்கு போட்டும் ஊக்க பின்னூட்டங்கள்.. அவர் இன்னும் திருட காரணமாக வேண்டாமே..
திரு ப்ரியமுடன் வசந்த், தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.. கடைப்பிடிக்க முடிந்த வரை முயற்சிக்கிறேன்...
Post a Comment