Monday, July 11, 2011

எது தியானம்???

தியானம் என்றால் என்ன? இது ஒரு கடினமான கேள்வி.. இதற்கு ஒரே பதில் தரவும் முடியாது...

சிலர் அமைதியாக அமர்ந்திருப்பதே தியானம் என்கிறார்கள்.

சிலர் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் என்கிறார்கள்.

சிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழிபடுவதையும் தியானம் என்கிறார்கள்

சிலர் மந்திரம் உச்சாடம் செய்வது தியானம் என்கிறார்கள்.

சிலர் முனைப்போடு காரியம் செய்வதையும் தியானம் என்றே சொல்கிறார்கள்.

இப்படி பல சிலர் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள்..


ஒரே குழப்பம்.. யார் சொல்வதை எடுத்துக் கொள்வது. எதை விடுவது. எது சிறந்தது. எது ஒவ்வாதது.

முதலில், இதில் நாமாக, சுயமாக செய்யும் எதுவுமே ஒவ்வாவதுதான்... அது தியானமாகாது. முக்கியமாக ஒரு ஆசிரியர் மூலம் கற்காத தியானம் தியானமே அல்ல.

அது எந்த வகையானதாக இருந்தாலும் ஒரு தேர்ந்த தியான ஆசிரியரைப் பணிந்து தியானம் கற்றுக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும்.  அதுவே உண்மையான தியானம்... அது நம் வாழ்வில் தேவையானதை எல்லாம் நமக்கு அளிக்கும்..

கடவுளே மஹாலிங்கம்... நம் மக்கள் அனைவரும் ஒரு நல்ல தியான ஆசிரியரிடம் தியானம் கற்று சிறப்பாக பயிற்சி செய்திட நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

10 comments:

shanmugavel said...

தியானம் என்பது மனம் ஒருமுகப்படுவதுதான்.பல தியான ஆசிரியர்களும் இதை கூறியுள்ளார்கள்.நல்ல ஆசிரியர் தேவை என்பதே உண்மை.பகிர்வுக்கு நன்றீ.

Anonymous said...

உங்களால முடியல .... அதனால எல்லாருக்கும் ஆசிரியர் தேவை என்பது எந்தவிதத்தில் நியாயம் ???

Karthikeyan Rajendran said...

sariyagaththaan solgireergal anaal edipaadodu sollikkodukkum aasiriyarthaan ippodhu kidaippadhillai

இராஜராஜேஸ்வரி said...

அது எந்த வகையானதாக இருந்தாலும் ஒரு தேர்ந்த தியான ஆசிரியரைப் பணிந்து தியானம் கற்றுக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும். அதுவே உண்மையான தியானம்... அது நம் வாழ்வில் தேவையானதை எல்லாம் நமக்கு அளிக்கும்..//

பாடத்திற்கு நன்றி.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், மனம் ஒருமுகப்படுவதும் ஒருவகை தியானம். அது மட்டுமே தியானம் அல்ல. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், எனக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும் தியானம் கற்றுக்கொள்ள ஆசிரியர் தேவை... குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க ஒரு ஆசிரியர் தேவை என்பது போல.. குழந்தை தானாக எழுதப்படிக்க கற்றுக்கொள்ள முடியாது.. ஒரு தாய் தகப்பன், உறவினர்கள், பள்ளி ஆசிரியர் இப்படி யாராவது எழுதப் படிக்க தெரிந்த ஒருவர் பயிற்றுவித்த பிறகே அது கற்றுக் கொள்ள முடியும். அதுபோலவே இதுவும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தங்கள் பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் குறிப்பிட்டு கருத்திட்டால் நலம்.. யோசிக்கவும்..

Sankar Gurusamy said...

திரு ஸ்பார்க் கார்த்தி, நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். என்ன அவர்கள் பிரபலமாக இருப்பதில்லை. அவ்வளவே.. மேலும் ஒரு சிறந்த தியான ஆசிரியர் உங்களை ஒரு சுய சார்புடையவராக ஆக்குவார். எனவே அவரைப்பற்றிய விளம்பரங்கள் மிக குறைவாகவே இருக்கும்..

பிரபலமாக இருக்கும் நிறுவனங்களிலிருந்தும் தாங்கள் கற்றுக் கொள்ளலாம். என்ன ஒன்று?? தியானம் மட்டும் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் தரும் மேலதிக வியாபார நோக்குள்ள விசயங்களுக்கு நோ சொல்லிவிடுங்கள்..

விரைவில் தங்களுக்கு ஒரு தியான ஆசிரியர் தேவை என்று பிரார்த்தனை செய்யுங்கள்.. நிச்சயம் கிடைப்பார்...

மேலதிகவிவரங்கள் தேவைப்பட்டல் எனக்கு தனிப்பட்ட மின் மடல் அனுப்புங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

தங்கள் ஆர்வமே முக்கியம்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Anonymous said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

Online Books(Tamil- சாகாகல்வி )
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Sankar Gurusamy said...

திரு சிவம்ஜோதி28, நிச்சயம் பார்க்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..