நேற்று 13-ஜூலை 2011 மாலை சுமார் 7 மணி அளவில், மும்பையில், 3 இடங்களில் குண்டுகள் வெடித்து சுமார் 21 பேர் இறந்திருக்கிறார்கள். இது மிகவும் கண்டனத்துக்கு உரிய விசயமாகும். கோழைத்தனமாக அப்பாவி மக்களை தாக்கும் எவரும் மிக கடுமையாக கண்டிக்கத்தக்கவரே..
இது சில தீவிரவாத இயக்கங்களின் செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்னைப் பொருத்தவரையில் இதில் முழு பங்கு நம் அரசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்குத்தான்... எப்படி???
மேற்கு நாடுகளில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தால் பல ஆண்டுகளுக்கு அது நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுத்து தடுக்கிறார்கள்.
ஆனால் இங்கு நம் நாட்டில், இந்த கண்டிப்புகள் இப்படிப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்கள் மட்டும் பேரளவில் இருக்கும். பிறகு வழக்கம்போல் அடுத்த குண்டு வெடிப்புக்கு தயாராக வேண்டியதுதான்.
நாட்டின் ஒவ்வொரு செக் போஸ்டிலும் நாம் கண்டிப்புடன் இருந்தால் தீவிரவாதிகள் ஊடுறுவ முடியுமா? வெடிப் பொருள்களை கடத்த முடியுமா?
குஜராத்தில் சில நாட்களுக்கு முன் சொமாலியாவைச் சேர்ந்த சில மாலுமிகள் ஊருக்குள் உலவிக்கொண்டிருந்ததைக் கண்ட கடற்கரையோர கிராம மக்கள் போலீசில் சொல்லி நடவடிக்கை எடுக்க சொன்னார்கள். போலீஸ் விசாரணையில் அவர்கள் கடலில் திசை மாறி கரை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். இவர்கள் பற்றி கடலோர காவல்படைக்கோ நேவிக்கோ தெரிந்திருக்கவில்லை. அந்த லட்சணத்தில் நம் கடல் எல்லைப் பாதுகாப்பு இருக்கிறது..
நாட்டு மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டிய தலைவர்களில் பலர் ஊழலில் திளைத்து, லஞ்ச பணத்தை பதுக்குவதில் தீவிர கவனமாக இருப்பதால் தொண்டர்களான சில/ பல கீழ்/மேல்மட்ட அதிகாரிகளும் சுதந்திரமாக தவறு செய்ய விழைகிறார்கள்..
இதன் விளைவு நேரடியாக நம் நாட்டு மக்களை இப்படிப்பட்ட தீவிரவாதம் மூலம் பாதிக்கிறது.
இதில் இன்னொரு முக்கியமான் விசயமும் விசாரிக்கப்பட வேண்டும்.. அது என்னவென்றால், நம் அரசியல் தொழில் செய்யும் சில கேடுகெட்ட கோமான்கள் கைவரிசை இதில் இருக்கிறதா என்பதே அது...
இப்போது மீடியா, மக்கள் எல்லோரும் ஒவ்வொரு வாரமும் புதிய ஊழல், லஞ்ச புகார், அமைச்சர் பதவி விலகல், கருப்புபண விவகாரம் , விலைவாசி உயர்வு, இப்படி அரசுக்கு தொல்லை தரும் விசயங்களில் கவனம் அதிகம் இருக்கிறது.
இதை விட்டு விலகி இப்படிப்பட்ட ஒரு தீவிரவாத சம்பவம் நடைபெற்றால் அனைவரது கவனமும் அதில் திரும்பிவிடும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டதா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். செய்வார்களா???
கடவுளே மஹாலிங்கம்.. நீங்கதான் இதுக்கு ஒரு வழி செய்யணும்...
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...
4 comments:
தமிழகத்தைப் போல மத்தியிலும் ஆட்சி மாற்றம்
வேண்டும் என்பதே எனது கணிப்பு..
உஜிலாதேவி படித்துப் பாருங்கள்..
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், நானும் உஜிலாதேவி படித்தேன்... ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த காட்சிகள் மாறுமா என்பது சந்தேகம் தான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//மேற்கு நாடுகளில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தால் பல ஆண்டுகளுக்கு அது நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுத்து தடுக்கிறார்கள்.//
ஆமாம் .அப்போதைக்கு மட்டும் நினைப்பார்கள்.அவ்வளவுதான்.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment