நான் தியானம் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி - “நீ தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறாய்??” என்பது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவர்களும் வெவ்வேறு விதமான தியான முறைகளை முறையாக பயின்று, தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்.
முதலில் எனக்கு இது புரியவில்லை. பிறகு அவர்களின் தியான முறைகளுக்கு உட்பட்ட சில விளக்கங்கள் கேட்ட பிறகு ஓரளவுக்கு புரிந்தது..
அதாவது நாம் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்வதை தியானம் செய்வதோடு ஒப்பிட்டால், வழியில் , செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், உழுந்தூர் பேட்டை, திருச்சி, இப்படி வரும் ஊர்கள் போல நம் தியான இலக்கு நோக்கி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதன் அளவீடுதான் இந்த நிலைகள் என்று ஒருவழியாக புரிந்து கொண்டேன்.
இது சம்பந்தமாக எனக்கு தியானம் கற்றுத்தந்த ஆசிரியர் ஒன்றும் கூறி இருக்கவில்லை. அவரிடம் இது பற்றி விளக்கம் கூறுமாறு கேட்டபோது சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.
1) நமது தியான நிலையின் அளவீடுகள் உண்மையில் மதிப்பிடுவது சாதாரணமாக முடியாத காரியம்.
2) அதை உண்மையில் கண்டறிவது நம் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் வைத்தே கணிக்க முடியும்.
3) தியானத்தின் உயர்நிலை தாழ் நிலை என எதுவும் வரையறுக்கப் படவில்லை.
4) பெரும்பாலும் இது அவரவர்கள் கற்றுத்தரும் போது மாணவர்களுக்கு ஒரு மேலதிக ஆர்வம் உருவாக்க உபயோகப் படுத்துகிறார்கள்.
இதுபற்றி நான் மேலும் அறிய புகுந்தபோது கிடைத்த தகவல்கள்:
சில தியான முறைகளில், ஒரு குறிப்பிட்ட நாட்கள் தியானம் செய்தபின் அவர்கள் அடுத்த நிலைக்கு வந்துவிட்டதாக கணக்கிடுகிறார்கள்.
இன்னும் சில தியான முறைகளில், அவர்களின் மேலேயே இன்னொருவர் தியானம் செய்தும் உண்மையாக கண்டுபிடிக்கிறார்கள்.
சில முறைகளில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொருவிதமான தியானங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அது நாம் செய்யும் தியானத்தின் பால் சார்ந்ததே ஒழிய அது ஒன்றும் ஒரு பொதுப்படுத்தப்பட்ட விசயம் இல்லை.
மேலும் நாம் தியானத்தின் உண்மையான இலக்கான ஞானத்தை அடைய எடுக்கும் கால அளவு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே போதுமானது. சிலருக்கு பலபிறவிகளும் தேவைப்படுகிறது. அது நம் மனநிலையையும் நம் கர்மசொத்துக் கணக்கையையும் பொருத்தது.
தொடர்ந்து தினமும் தியானம் செய்தால் நிச்சயம் ஞானம் அடையலாம். எப்போது என்ற கேள்வியை விட்டுவிட்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து தியானம் செய்துவந்தால் ஞானம் நிச்சயம் சித்திக்கும்.
எனக்கு தெரிந்து தியானத்தில் இரண்டே நிலைகள்தான்.. ஒன்று தொடர்ந்து தியானம் செய்யும் நிலை. இன்னொன்று தியானத்தை விட்ட நிலை.
இதில் தியானம் செய்யும் நிலையில் நாம் எப்போதும் இருந்தால் ஞானம் சித்திக்கும்..
கடவுளே மஹாலிங்கம் எல்லாரும் தொடர்ந்து தினமும் தியானம் செய்து ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...
7 comments:
அறிய தகவல்கள்..
//நமது தியான நிலையின் அளவீடுகள் உண்மையில் மதிப்பிடுவது சாதாரணமாக முடியாத காரியம்.//
இதுதான் உண்மை.நல்ல பகிர்வு.நன்றி
திரு # கவிதை வீதி # சௌந்தர்,
திரு ஷண்முகவேல்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
உண்மையான கருத்துகள்..
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக..
வாழ்த்துக்கள்..
திரு சிவ.சி.மா. ஜானகிராமன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
amaithi..amaithi amaithi...keep thiyana without calculating the stage...simply keep quite..and try to concentrate one point...or simply don't give room for any thoughts....தியணம்....சாதாரணமாக எல்லோரும் உச்சரிக்கும் வார்த்தைத்தான்...அதன் அர்த்தமோ புரியாத புதிர்...எல்லோருக்கும் கைகூடவல்லது அல்ல..கஷ்ட்டமானதும் அல்ல அவ்வலவு எளிதும் அல்ல...கண்ணைமூடிக்கொண்டிருந்தாலே தியானம் செய்வதாக க்ருதுகிறோம்ன. அது ஒரு முயற்ச்சி...முயன்றால்தான் முடியும்...ஒரு செகண்ட்...ஒருநிலைப்படமுடியுமானால் சிறப்புத்தான்...எல்லாவாற்றையும் மறந்த நிலையில் சமைக்க முடிந்தால்....இப்படியாக கூட்டிக்கொள்ளலாம்..
எல்லாவற்றிர்க்கும் ஒரு கொடுப்பனை...அல்லது கடாட்ச்சம்..அது நமது ப்ராப்தபடி நடக்கலாம்..மற்றப்படி நிலைப்பாடுகள் என்பதெல்லாம் நம்மை நாமே நம்ப்பிக்கையோடு முன்னேற்றிக்கொள்ள ஒரு யுக்தி...இந்த செகண்டே நிற்ச்சலனமாய் இருந்த நின்ற.,.எப்படி இருக்கிறோமே அதே நிலையில் ஒரே செகண்ட் சிந்தனையற்று இருந்துப்பாருங்கள்...என்ன ஒரு அமைதி..நிற்ச்சலனம்...
ஆனால் மனிதன் உணர்வுகளால் பின்னப்பட்டிருக்கிறான்..உலக சம்பந்தப்பட்ட விசயங்களின் ஆக்ரமிப்பில் உலன்றுக்கொண்டே இருக்கிறான்..அழ்ந்த தூக்க நிலையில் கூட கனவு என்ற பெயரில் சலனத்தோடே தூங்குகிறான்..இப்படி உலகமயமான மாயையில் இருந்து தப்ப இயாலாது வாடுகிறான்..காரணம்...சுயம்....குடும்பம்...சுகபோகம்...இதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு கோமண ஆண்டியாய் எதைப்பற்றியும் சிந்திக்காமல் கவலைப்படாமல்...அடுத்த வினாடியைப்பற்றிய சுரணையில்லாமல் எவனொருவனால் இருக்கமுடியுதோ அதாவது தான் என்ற ஒன்றை உணராமல்...சிவனே என்று....இப்படிப்பற்றவனால் மட்டுமே சித்தனாக முடியும்...நம் செய்வதெல்லாம் நம்மை ஆசுவாசப்படுத்திக்க கடைப்பிடிக்கும் ஒரு அமைதியான நிலை...இதையே தொடர்ந்து விடாப்பிடியாக செய்தால் ஒருவேலை கைக்கூடலாம்..ஆனால் குடும்ப வாழ்க்கையிலும்....உலக நடமுறையிலும் சிக்குனண்டவனால் சாத்தியப்படுமா...கணக்கிடுதலின்..அதாவது இந்த சனம்...நொடி...அடுத்த சனம்..நொடி..இப்ப...அப்புறம்..இன்று...நாளை...என்ற கால்குலேசனுக்கெல்லாம் எட்டாதவனாக...அதன் பிடியில் சிக்காதவனாக விடிதலும், அடைதலும் எவனை பாதிக்கவில்லையோ...எவனால் கல்லாய் சமைத்திருக்க இயலுமோ அவனால் இயலலாம்..அல்லது பரமஹம்ஸர்,ரமணர், இராமலிங்க அடிகளார் போன்ற மஹாண்களின் அருள்ப்பார்வை நமக்கு கிடைத்து,நாமும் எல்லோவற்றையும் துறந்து சரண்டர் ஆனோம் என்றால் கைக்கூடலாம்...இதெல்லாமே கூட நமது சுயநலமே...பேருண்மை அறிந்திடல் வேண்டும்...அறிந்ததோட நின்று விடாமல் சமுதாயத்திற்க்கு இந்த உலகம் நன்மை அடையும் பொருட்டு விளைதல் வேண்டும்..இல்லையேல் யாருக்கு என்னப்பயன் நம்மைத்தவிற,,.சுயநலத்தின் அடிப்படையில் உதித்தல் கூடாது...பொதுநலம் கொள்க.. அன்னை தெரசாவைப்பாருங்கள் எந்த தியானம் செய்தார்கள்...உண்மை அவரிடம் மண்டி இட்டது...தொண்டே தியானம்...வாழ்க..
திரு அனானிமஸ், அருமையான தங்கள் கருத்துக்கு நன்றி....
Post a Comment