ஜூன் 5, ஞாயிறு அன்று அதிகாலையில் பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை போலீசார் அடக்கிய விதம் சற்று நெருடலாகவே இருந்தது. அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விட, அவர் மீது ஏவி விடப்பட்ட போலீசாரின் வன்முறை தாக்குதல் மோசமானதாக இருந்தது.
இது ”ஊழலற்ற நிர்வாகம்” / “கருப்புப் பணத்தை திரும்ப கொண்டுவருதல்” பற்றிய நம் நாட்டின் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை -'attitude' எடுத்துக்காட்டியது.
அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மீது, நம் தேசத்தின் தலைநகரின் மையத்திலேயே, மீடியா முன்னிலையிலேயே, இப்படி ஒரு வன்முறை நடவடிக்கை எடுக்கும் இவர்கள் தம் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், கண்காணாத இடத்தில் இருக்கும் நம் சாதாரண பொதுமக்களின் மற்றும் பழங்குடியினரின் போராட்டத்தின் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும்போது நடுக்கமாக இருக்கிறது.
இதில் நம் மதிப்பு மிக்க அமைச்சர்கள் கூற்று இன்னும் வேடிக்கையாக இருந்தது. “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்ய வேண்டும்.. அரசியல் பேசக்கூடாது... ” என்று திருவாய் மலர்ந்தருளினர்.
இனிமேல் அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் அரசியல் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இப்போது இதை அமைச்சர்கள் டிவி பேட்டிகளில் சொல்கிறார்கள். நாளை இது ஒரு சட்டமாகவே வரலாம்.)
போராட்டதுக்கு முன் அனுமதி, பொதுக் கூட்டத்துக்கு முன் அனுமதி, உண்ணாவிரத்துக்கு முன் அனுமதி, போராட்டம் நடத்த ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் அனுமதி, முன்னறிவிப்பின்றி அனுமதி ரத்து, நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை, அமைதியாக போராடினாலும் தாக்குதல்.... வெள்ளையர்கள் ஆட்சி செய்தபொழுது இருந்த சட்ட நடைமுறைகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையோ என்ற பிரமை எழுகிறது. வெள்ளையர்களுக்குப் பதில் இந்த கேடு கெட்ட ஊழல் அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். இதுதான் ஒரே வித்தியாசம்.
இவர்களுக்குத் தேவை- இவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாத அடிமைகள் மட்டுமே... இதற்கு இவர்கள் நாட்டை ஆள வேண்டியதில்லை. ஆட்டுமந்தையை ஆண்டாலே போதும்.
கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இவங்களுக்கு நல்ல புத்திய குடுத்து தேசத்தை காப்பாத்தணும்.
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...
6 comments:
இதில் என்ன செய்ய வேண்டும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
திரு # கவிதை வீதி # சௌந்தர், உண்மைதான். இவர்களுக்கும் ஓய்வு கொடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது போல தெரிகிறது..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வணக்கம் எல்லாம் சரி
இந்த அரசியல் நம்பிக்கை துரோகிகளை எப்படி விளக்குவது, எப்படி வெளியேற்றுவது.
இராஜராஜன்
மக்கள் ஊழல்களுக்கு எதிராகவே முடிவெடுப்பார்கள் எப்போதும்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
திரு வனம், இவர்களுக்கு விளக்கி புரிய வைக்கவேண்டியதில்லை. வெளிச்சம் வரும்பொழுது இருள் தானாக சென்றுவிடும். அந்த வெளிச்சம் வரும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Post a Comment