Monday, June 20, 2011

நான் யார்??? - ஆணவம் - ஞானம் ....

இன்று காலையில் இருந்து இது பற்றி ஒரே சிந்தனையாக இருந்தது.

 “நான் யார்?”.

இது நமது அன்புக்குரிய ரமண மஹரிஷி கேட்ட ஒரு ஆன்மீக கேள்வி. இதற்கு பதில் தெரிவதும் ஒரு விதத்தில் ஞானம்தான்.

இதற்கு ஆத்ம ரீதியாக நாம் உணர்வதற்கு பல பதில்கள் இருந்தாலும், இதன் வெளிப்படையான, உடனடி பதில் இன்று நமக்கு இருக்கும் ஆணவம்தான் ”நான்” என்பது.  நமது ஆணவமே நமது இன்றைய கர்ம சொத்து.

நம் வாழ்வில் தேடும் பல விசயங்கள் நமது ஆணவத்தை சுற்றியே இருக்கின்றன. நமது ஆணவமே நமது அடையாளம். நமது ஆணவமே நமது ஆத்ம முகவரி.  நம்மை பணம் புகழ் அங்கீகாரம் தேட வைப்பது நம்மிடம் உள்ள இந்த ”நான்” என்ற ஆணவம்தான்.

ஒவ்வொருவர் வாழ்வுக்கும் / படைப்புக்கும்  ஒரு காரணம் / லட்சியம்  இருக்கிறது. அது இந்த ஆணவத்தின் மூலமே செயலாக்கப்படுகிறது. நமது வாழ்வின் காரணத்தை அறிந்து அதை செய்து நம் கடமையை முடிக்க நம் முழு வாழ் நாளும் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பல பிறவிகளும் தேவைப்படுகிறது.

இதில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம் வாழ்வின் லட்சியத்தை / காரணத்தை நோக்கி நம்மை தள்ளுகின்றன. அதை செய்வதற்கு நம்மை தயார் படுத்துகின்றன. அதை செய்து முடித்தவுடன் நம்மை ஞானத்தை நோக்கி தள்ளிவிடுகிறது.

ஆணவத்தை நாம் விடுவதன் மூலம் நம்மை நாமே இழக்கிறோம். நாம் இந்த உலகில் முக்கியமானதாக கருதும் மானம் ரோஷம் வெட்கம் மரியாதை இதை எல்லாம் விட்டால்தான் ஆணவத்தை விட முடியும். (இதனால்தான் சில சித்தர்களும் ஞானிகளும், பைத்தியக்காரர்கள் போல் இருக்கிறார்களோ / வருகிறார்களோ??)

ஆணவத்தை முழுமையாக விட்டால்தான் நமக்குள் இருக்கும் உண்மையான நம்மை தரிசனம் செய்ய முடியும். அதுவே பூரண ஞானம்.

கடவுளே மஹாலிங்கம்.. வாழ்வின் லட்சியம் நிறைவேறி, பூரண ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...


சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

6 comments:

Bala said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,


உள்ளத்து தூய்மைக்கு முக்கியத்தவம் கொடுப்பவர்கள் தான் சித்தர்கள் ஆகையால் தான் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிக்கொள்ளவே பித்தர்கள் போலவும் மனநலம் குன்றியவர்கள் போலவும் காணபடுவார்கள்



அருமையான விளக்கத்தை தந்தற்கு நன்றி...



http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

shanmugavel said...

நான் யார் என்ற கேள்வியே தன்னை அறிதலின் அடிப்படை.ஆணவத்தை விட்டால்தான் அனைத்தும் பெற முடியும்.நல்ல பகிர்வு.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

சத்தியமான வார்த்தைகள் சங்கர் ...

" யான் எனது என்னும் செருக்கு அற்ற இடமே
திருவடியாம் "

என்பது கந்தர் கலிவெண்பா..

ஆணவம் என்பது நமது பிறவிக்கு முன்பிருந்தே தொடரும் நோய்..

ஆணவம் அழிவதுமில்லை..

அவனருள் இருப்பின் அதை அடக்கலாம்..

Sankar Gurusamy said...

திரு சிவம்ஜோதி28, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..