இன்று நம் தேசத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒழுங்கற்ற அரசு நிர்வாகம். அரசாங்கம் செயல்படுத்த எண்ணும் ஒவ்வொரு செயலையையும் இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கற்ற நிர்வாக அமைப்பு எவ்வாறு செம்மையாக செயல்படுத்த முடியும்.
இதில் குறை எங்கு இருக்கிறது?? நிர்வாக அமைப்பில் சில குறைகள் இருந்தாலும் அதை நிர்வகிப்பவர்களில் தான் பெரும் குறை இருக்கிறது. ஒவ்வொரு சட்டமும் நியதியும் நடைமுறைகளும் மக்களை முன்னிறுத்தி, மக்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் உண்மையை மறந்து, இவற்றை வெறும் வார்த்தைகளாகவும், பொது நலனைவிட சுயநலனுக்காகவும் சில தனிநபர் நலனுக்காக இவற்றை வளைக்கவும் மக்களை வதைக்கவும் இவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளால்தான் பிரச்சினையே.
பல அதிகாரிகள் மக்களை வதைப்பதிலும், பொது நலனை சாகடித்து, தனிநபர்களின் நலன் பேணுவதில் ஆவலாகவுமே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் அரசியல் நிர்ப்பந்தங்களினாலும் இவ்வாறு ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.
அதிசயமாக சில உண்மையான அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் செயல்படுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்..
இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசு நிர்வாகம்தான், கோடிக்கணக்கான மக்கள் பணத்தை கையாள்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.
இவர்களுக்கு எஜமானர்களான நம் நாட்டு அரசியல் தலைவர்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்லர். "உன்னாலே நான் கெட்டேன் , என்னாலே நீ கெட்டாய்" என்பது அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் பொருந்தும்.
மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து பொதுமக்களாகிய நம் பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நம் ஜனநாயகத்தில் பொதுஜனமாகிய நமக்கு வேறு போக்கிடம் இல்லை. நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வர ஆண்டுக்கணக்கில் ஆவதும் நம் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறது.
இந்த லட்சணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மேலும் மேலும் செலவு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைந்துகொண்டே இருக்கிறது.
ஓட்டைப்பானையில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் குடிப்பதற்கு நிற்காது. அது போல இந்த ஓட்டை அரசு நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவராமல் புதிய நலத்திட்டங்கள் பலன் தராது.
முதலில் அரசு தன் நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். அதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
இது சரியாகிவிட்டால் பல விசயங்கள் தானே சரியாகும். அரசு செம்மையாக நடக்கும். மக்களும் சுபிட்சமாக இருப்பர்.. செய்வார்களா??
கடவுளே மஹாலிங்கம், இந்த அரசு நிர்வாக குறைபாடுகள் சரியாக நீங்கதான் ஒரு நல்ல வழி செய்யணும்..
சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கமே போற்றி...

6 comments:
உங்களுக்கு விஷயமே புரியல. அரசு மக்களுக்காக இல்லேன்னு மொதல்ல புரிஞ்சுக்கோங்க.
அய்யா, திரு பழனியப்பன் கந்தசாமி, நான் உண்மையில் ஒரு அரசாங்கம் மக்களுக்காக செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி இருக்கிறேன். இன்றைய நிலைமை தாங்கள் கூறிய படி இருப்பதுதான் நிதர்சனம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஒரு அரசாங்கம் மக்களுக்காக செயல்படவேண்டும் இன்று அது இல்லை.அரசு முதலில் கடும் சட்டம் மாற்றம் மேற்கொள்ளவேண்டும். அதன் பின் திட்டங்கள் செயல்படுத்தவேண்டும். நன்றி
திரு கண்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அரசியல்வாதிகளின் கைப்பாவையாகவே அதிகாரிகள் செயல்படும் நிலை அதிகம்.இதுவும் முக்கிய காரணம்.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Post a Comment