நம் வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கான மூல காரணம் நம் கர்ம வினைகளின்பால் உள்ளது. அதுபோல நம் சமூகத்தில் நிலவும் பலவித பிரச்சினைகளுக்கான காரணமும் இந்த கர்ம வினைகளை சார்ந்தே இருக்க முடியும். பல தனிமனிதர்களின் கர்ம வினைகள்தான் ஒரு சமூகத்தில் பிரதிபலிக்கின்றன.
கர்ம வினை எனப்படுவது என்ன? இதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், நான் எளிதில் புரிந்துகொண்டிருக்கும் சில விளக்கங்கள் கீழே
நாம் செய்யும் நல்ல / கெட்ட செயல்களால் நமக்குள் / அதனால் பாதிப்படைபவருக்குள் உருவாகும் எண்ண அலைகளின் பாதிப்புதான்.
ஒருவித எதிர்பார்ப்போடு செய்யப்படும் / செயல்படும் வினைகளின் விளைவு சிந்தனை மூலம் வெளிப்படும். இந்த சிந்தனைகளின் பாதிப்புதான் கர்ம வினை.
எந்த ஒரு செயலும் நல்லது அல்லது கெட்டது என்று வகைப்படுத்த நம் சிந்தனையில் அந்த செயல் ஏற்படுத்தும் பாதிப்பே முக்கிய காரணம். ஒரு விசயத்தை நாம் மனதளவில் எடுத்துக்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும் விதம்(பக்குவம்)தான், அதனால் நாம் பாதிப்படைகிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
பாதிப்படைந்தால் கர்ம வினை நிச்சயம். பாதிப்படையாமல் இருக்க பழகிக்கொள்ளவே பல ஆன்மீக சாதனைகள் உதவுகின்றன.
சுருக்கமாக சொன்னால் இந்த கர்ம வினை என்பதும் ஒருவித சக்திதான். எனவே The law of conservation of energy இங்கும் பொருந்தும்.
The law of conservation of energy states that energy may neither be created nor destroyed. Therefore the sum of all the energies in the system is a constant.
அதாவது இந்த உலகின் கர்ம வினை என்பது ஒரே நிலையில் இருக்கும். இதை அழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாகினும், இதை நிச்சயம் வேறு திசைகளில் திருப்பிவிட முடியும் என்பது புலனாகிறது.
மனிதர்களுக்கிடையில் இந்த கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றிக் கொள்ளும் வல்லமை நிச்சயம் இருக்கும். அதை சில ஞானிகள் உபயோகப்படுத்தியும் இருக்கிறார்கள்.
இதுபோல் சமூகத்தில் இருக்கும் கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றும் வல்லமை இருக்கும் ஞானிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் இதற்குள் ஏதாவது செய்து சமூக அவலங்களை தடுத்திருப்பார்கள்.
அதனால் அப்படி யாரும் இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் விரைவில் உருவாக வேண்டும். அவர்களால் இந்த சமூகத்துக்கும் அதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.
கடவுளே மஹாலிங்கம் சிறந்த ஞானிகள் நாட்டில் தோன்றி சமூகத்தின் கர்ம வினைகளை சீர்படுத்தி மக்கள் சுபிட்சமாக வாழ அருள் செய்யுங்க..
சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

5 comments:
ஆமாம்.அத்தகைய ஞானிகளும் தோன்றவே செய்வார்கள் என்று நம்புவோம்.பகிர்வுக்கு நன்றி.
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
கடவுளே மஹாலிங்கம் சிறந்த ஞானிகள் நாட்டில் தோன்றி சமூகத்தின் கர்ம வினைகளை சீர்படுத்தி மக்கள் சுபிட்சமாக வாழ அருள் செய்யுங்க..
சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..
nalla sinthanai. thelivaana parvai.
திரு சபரி / இராஜராஜேஸ்வரி மேடம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment