சமீபத்தில் ஒரு முறை நான் மதுரை அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். எங்களையும் சேர்த்து கோவிலில் ஒரு 7 பேர்தான் தரிசனத்துக்கு வந்திருந்தனர். வெகுநாட்களுக்குப் (சில வருடங்களுக்கு) பிறகு நான் அங்கு சென்றதால், நடைமுறை தெரியவில்லை.
வழக்கமாக செல்லும் பாதை வழியாக தரிசனத்துக்கு சென்றேன். தடுத்து நிறுத்தப்பட்டேன். கோவில் ஊழியர் ஒருவர் "சார் இது கட்டண வழி... இலவச தரிசனம் செய்யணும்னா இங்க முன்னால நின்னே தரிசனம் செஞ்சுட்டு போங்க" என்றார். உடனே நான் அப்பாவியா "இங்க மொத்தமே 7 பேர் தான் இருக்கோம், இதுக்கு எதுக்கு கட்டண முறை.. அதுவும் இங்கிருந்து பார்த்தால் சந்நிதி சரியாக தெரியவில்லை" என்றேன். "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. முன்னாடி போய் தரிசனம் வேணும்னா காசு குடுங்க" என்றார். ஒரு நபர்க்கு ரூ 10. நாம் மீண்டும் அவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் "ஏதாவது பேசணும்னா ஆபீஸ்ல போய் பேசிக்குங்க. எங்கள்ட சொல்றதத்தான் நாங்க செய்றோம்" என்றார்.. கடைசியில் ரூ 10 கொடுத்த பிறகே முன்னே சென்று தரிசனம் செய்ய முடிந்தது.
இதே கதை தான் திருவில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவிலிலும். முன்னால் நின்றுபார்த்தால் சுவாமி உருவம் முழுவதும் தெரியாது. சற்று உள்ளே சென்று பார்த்தால் தான் முழுதும் பார்க்க முடியும். இங்கும் இப்போது சுவாமியை முன்னால் சென்று பார்க்க கட்டணமுறை வந்து விட்டது.
திருச்செந்தூர் போன்ற கோவில்களில் நிலைமை இன்னும் மோசம்.
இதுபோல இன்னும் எத்தனை கோவில்களில் இப்பிடி இருக்குன்னு தெரியல. கூட்டம் இருக்கும் காலத்தில் மட்டும் இருந்த கட்டண தரிசன முறை இப்போது சுவாமி தரிசனத்துக்கே கட்டணம் கேட்கும் நிலைக்கு பரிணமித்திருக்கிறது.
என்னைப்போன்றவர்கள் ஆண்டவன் தரிசனத்துக்கே அதிக முக்கியத்துவம் தருவதால், பூசை, அர்ச்சனை கூட அதிகம் செய்வதில்லை. இப்போது அதுக்கும் வேட்டு வைத்துவிட்டார்கள்.
இந்த நிலை ஏன் ஏற்பட்டது? என்ன செய்யலாம்? எனது சிந்தனைகள்....
காரணிகள் :
இந்த நிலைக்கு முதல் காரணமாக சொல்லப்படுவது, கோவில்களுக்கு வருமானத்துக்கு வழி செய்வது.
மேலும், எப்பிடி கட்டணம் கேட்டாலும் குடுத்துத்தானே ஆகணும்ங்கற கோவில் நிர்வாகத்தினரின் திமிர் மனப்பான்மை.
கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல், அவை சிலரின் சொந்த உபயோகத்துக்காகயும் லாபத்துக்காகவும் மாற்றப்பட்டது.
நமது கோவில்களையோ, பக்தியையோ, பாரம்பரியத்தையோ பற்றி தெரியாதவர்களால் கோவில்கள் நிர்வாகம் செய்யப்படுவது.
இவைபற்றிய அக்கறை உடைவர்களை கோவில் நிர்வாகத்தில் பங்கு கொள்ள அனுமதிக்காதது.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு முறையாக ஆவணப்படுத்தப் படவேண்டும். அவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர்மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். முறையாக குத்தகை ஏலம் விடப்பட்டு சிறந்த வருமானம் அந்த சொத்துக்களிலிருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
வருமானம் அதிகம் உள்ள கோவில்களோடு சிறு கோவில்கள் இணைக்கப்பட்டு, அவற்றிற்கும் வருமானத்தில் ஒரு பங்கு தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், சமூக நல சங்கங்கள் சேர்ந்து நலிந்த பாரம்பரிய கோவில்களுக்கு நிதி உதவிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
உண்மையிலேயே பக்தியும், கடவுள் நம்பிக்கையும், பிறமனிதர் மீது மரியாதையும் தெரிந்தவர்கள்தான் திருக்கோவில் நிர்வாகத்தில் அனுமதிக்கப்படவேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள ஆர்வமுள்ளவர்களும் நிர்வாகத்தில் பங்குபெற அனுமதிக்கவேண்டும்.
இதெல்லாம் செய்வதற்கு முதலில் நல்ல மனம் அரசுக்கு வர வேண்டும். என்ன செய்வது, நமது இந்து மதக் கோவில்களை (அதுவும் வருமானம் வர வழி உள்ள கோவில்களை) மட்டும் அரசு உடைமையாக்கி பாரபட்சம் காட்டும் சூழலில், இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் ஓவர்தான்..
மஹாலிங்கம்... நீங்கதான் மனசு வச்சு இந்தக் குறைகளைத் தீர்த்து வைய்யுங்க... ஓம் நம சிவாய...சதுரகிரியாரே சரணம்....
8 comments:
இன்று கோவில், ஆன்மிகம் என்பதே பணம் பார்க்கும் தொழிலாக மாறிவிட்டது.
பணம் உள்ளவன் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும். பாவம் செய்திருந்தாலும்
Dear Mr.Thoppithoppi, If these Ancient temples are built by themselves it is somewhat ok. But these people are no way connected with the temples or religion etc.still these people run the temples... This is the pathetic situation.
Thanks for your visit and comments
கோவிலுக்கு போய்தான் வழிபட வேண்டும் என்பது சுத்த கயவாளித்தனம். பரிகாரம் ,தெய்வ குத்தம் என்று பலவாறு சொல்லி குழப்பி வைத்து பணம் பண்ணும் நோக்கம் அன்றி இதில் பக்தியோ ஆன்மீகமோ துளியும் இல்லை. நாம் தான் இவைகளை அறிந்து புறம் தள்ளவேண்டும்.
Dear Mr.Kakku - Manikkam, This is the belief of the individuals. In fact our ancient temples have special capabilities to make some different experiences within me which I have personally experienced. Hence I am visiting temples and having great dharshans.
These temples are built by our forefathers, kings, and religios leaders. But these are now being used by these useless people to loot the public which I have expressed my feelings in this post.
Thanks for your visit and your comments.
click to read
திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. சிந்தியுங்கள்.
Good article Sankarji..very useful..Thanks..
அன்புள்ள சங்கர் ,
தங்களின் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது , இதுபோன்ற காரணத்தால் தான் கோயிலுக்கு போய் வழிபடுவதை விட்டுவிட்டேன் . இந்த ஊணுக்குள் உள்ள சிவனை காண ஆரம்பித்துவிட்டேன் .
தாங்கள் கூறியது ஏழை ,எளிய மக்களுக்கு தான் பொருந்தும் பணக்காரர்களுக்கு அல்ல . சித்தர்கள் இயற்கையை வணங்கினார்கள் . பஞ்ச பூதங்களை வணங்கினார்கள் . ஆனால் இன்று .........எல்லாம் பணம் மயம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Dear Bala, Seeing God within is a very rare phenomenon.. Manay people cannot do that. Hence visiting Temples has become must for majority of people to have some spiritual solace.
Thanks for your visit and comments.
Post a Comment