Friday, January 21, 2011

ஆன்மீகமும் அரசியலும்....

நமது தேசத்தில் அரசியலும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.. ஒரு அரசியல் இயக்கம் நடத்துவதும் ஒரு ஆன்மீக இயக்கம் நடத்துவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டிற்கும் ஒரேவிதமான தேவைகள்தான்..ஒரேவிதமான சவால்கள்தான். என்ன அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து சேவை (???) செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள் சமூகத்தில் கலந்து சேவை (???) செய்கிறார்கள்.

உண்மையான் தேசப்பற்றும், தனிமனித ஒழுக்கமும் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்தால் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய ஆன்மீகவாதிகள் பெரும்பாலும், அரசுக்கு சார்பாகவே அறியப்படுகிறார்கள். எந்த ஆட்சி நடக்கிறதோ அந்த ஆட்சியாளருக்கு சார்பாக (சில நேரங்களில்  பினாமியாக????)  ஆகிவிடுகிறார்கள்.

உண்மையான ஆன்மீகவாதிகளை மறைக்கவே பல போலி ஆன்மீகவாதிகள் உருவாக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதுவும் இப்போது வரிசையாக போலி சாமியார்கள் பிடிபட்டுக்கொண்டு இருக்கும் சூழலில் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்றே படுகிறது. இது பற்றி எனது சிந்தனைகள்..

இன்று ஒரு ஆன்மீக இயக்கம் ஆரம்பிக்கவும் சிறப்பாக நடத்தவும்,  ஒரு சிறந்த "Public Relation"(PR) - திறமையே அதிகம் தேவை. இயக்கத்தைப் பற்றி நல்ல செய்திகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரவழைப்பது, அற்புதங்கள் பற்றி பிரச்சாரம் செய்வது, புது அன்பர்களை அதிகம் ஈர்ப்பது,  என்று சில திறமைகள் இருந்தாலே ஒரு ஆன்மீக இயக்கம் நடத்திவிடலாம்.

மக்களிடம் இருக்கக் கூடிய ஒருசமூக அங்கீகாரத்துக்கான ஏக்கத்தை இந்த மாதிரி ஆன்மீக இயக்கங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒவ்வொருவருக்கும் மனதளவில் ஒரு வெற்றிடம் இருக்கவே செய்கிறது. முழுமையான திருப்தி உள்ள மனிதனைக் காண்பது மிகவும் அரிது. அவர்களின் அன்றாடத் தேவைகள் அதிகரிப்பதும், மன அழுத்தங்கள் , புற அழுத்தங்கள் அதிகரிப்பதும் இந்த மாதிரியான ஒரு ஆன்மீகத்தேடலை நோக்கி அவர்களை உந்துகிறது. இல்லை என்றால் அவர்கள் மனநல மற்றும் உடல் நல மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.

நம் தேவைகளுக்கும், நமக்கு கிடைப்பவைகளுக்கும் உள்ள இடைவெளிதான் நமது மனதிருப்தியின் அளவுகோல். இந்த இடைவெளியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள். அந்த இடைவெளியைக் குறைக்க மனித முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களுக்கு ஓரளவுக்கு மன அமைதி தருவதற்கு, நமது பண்டைய யோகா, தியான, மூச்சுப் பயிற்சி முறைகளை முறையாகக் கற்ற, கற்பிக்கத்தெரிந்த  யாராலும் முடியும். இப்படிக் கற்றுத் தரபவர்கள் குரு ஆகிறார்கள். இந்த குருமார்களை மனிதர்கள் நம்பத்தொடங்குகிறார்கள். இதுவே ஒரு ஆரம்பப் புள்ளி.

இவர்களை மேலும் ஒரு பொதுக் குறிக்கோளை நோக்கி உந்தித் தள்ளி, தனது நோக்கங்களை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்களே போலி சாமியாராக ஆகிறார்கள்.  அதாவது, உலக அமைதி, உன்னத உலகம், பசியற்ற சமூகம், நோயற்ற சமுதாயம் மற்றும் பல..

இது மனித மனதில் உள்ள ஒரு ஹீரோ நோக்கிற்கு தீனிபோட்டு அவர்களை Exploit செய்வது ஆகும். சிறுவயதில் நமக்கு கார்ட்டூன்கள் மேல் அதிக ஆர்வம் ஏற்பட இது ஒரு முக்கிய காரணி. இந்தக் காரணியை பெரியவர்கள் ஆனதும் இப்படிப்பட்ட போலி சாமியார்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இந்தப் போலி சாமியார்களை நமது அரசியல்வாதிகள் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

என்ன செய்யலாம் :

யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மட்டும் கற்றுக் கொள்ளலாம். அவர்களின் இயக்கங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இவற்றுக்கு அளிக்கலாம்.

இவற்றை முறையாகக் கற்று, இடைவிடாமல் பயிற்சி செய்து வந்தாலே நமக்கு தேவையானவை கிடைத்துவிடும். இயக்கங்கள் சொல்லும் பெரிய நோக்கங்களுக்கு செவி சாய்த்து, நமது நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யாமல் இருக்கலாம்.

தேவை இல்லாத வணிகரீதியிலான "Merchandise" களில் இருந்து தள்ளியே இருக்கவேண்டும். சிறப்பு தரிசனம், குருவின் சிறப்பு ஆசி என்று வணிகப் படுத்தப் பட்ட விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தக் கலிகாலத்தில் இதை சரியாக செய்து வந்தாலே, தனிமனித ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு  அதிகரிக்கும். நமக்கு நாமே வழிகாட்டும் திறமை வாய்க்கும்.

மாட்டிக் கொள்ளாதவரை அனைத்து இயக்கங்களுமே உத்தமமானவையே!!!! இவற்றை வேறுபடுத்துவது மிகக் கடினம். நாம்தான் உஷாராக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.



கடவுளே!! மஹாலிங்கம் !!!!போலிகள்கிட்ட இருந்து எங்கள எல்லாம் காப்பாத்து!!!!! ஓம் நம சிவாய !!! சதுரகிரியாருக்கு அரோகரா!!!!

2 comments:

பாலா said...

ஐயா குருசாமி,

தாங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது தான். கடந்த மாதம் சென்னையில் சத்குரு ஜகிவாசுதேவ் மிக பெரிய ஒரு கூட்டத்தை நடத்தினார்.இந்த மாதம் ஸ்ரீ ரவி ஸ்ரீ அவர்கள் ஒரு மிக பெரிய கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதன் மூலம் நான் தெரிந்ததும் நீங்கள் கூறியதும் ஒன்றுதான் .


இரண்டுக்கும் கூட்டம் தேவை ,பணம் தேவை, ஆட்கள் தேவை ,மகளிர் கூட்டம் தேவை , செக்யூரிட்டி தேவை .....இப்படி எத்தனையோ எத்தனை .....

இதனை திருமூலர் அழகாக கூறுவார்..

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வார்

குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்

குருடும் குருடும் குழிவிழு மாறே.


தாங்கள் முடிந்தால் என் பதிவூட்டதை பார்க்கவும்.
http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Sankar Gurusamy said...

Mr Bala, Thanks for your kind visit and comments.

It is really true that common public is being exploited with such ease by these Gurujis. People should wake up. This blog I have made to give such a wake up call.