Monday, January 17, 2011

ஏன் இப்படி இருக்கிறார்கள்???

இன்று அரசின் ஒவ்வொரு துறையிலும், லஞ்சம், ஊழல் என்று தினமும் பத்திரிக்கை செய்தி வருகிறது.  இன்று இருக்கும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.

1) தாமதமும் ஒரு சலிப்படைந்த தன்மையும் : முதலில், நமது அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மைக்காக ஒரு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறு பொருள் வாங்குவதற்குக்கூட டெண்டர்விட்டு, கமிட்டி போட்டு, ஒரு பெரிய சடங்குபோல பல படிகள் கடந்துதான் வாங்க முடியும். இதற்கு சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை ஆகிறது. சில நேரங்களில் அதற்குள் அந்தப் பொருளுக்கான தேவையே இல்லாமல் போய்விடும்.  இதனால் ஒரு சில சின்னத்தேவைகளைக் கூட உடனடியாக நிறைவேற்ற முடியாததால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இது எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடியதே... இவர்களுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

யோசித்துப் பார்த்தால் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உண்மையாக நினைத்து பதவிக்கு வருபவர்கள் உணரும் முதல் தடை இது.

தீர்வு : அரசுப் பதவிக்கு வருபவர்கள் அனைவருக்கும் சிறந்த மனப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். முடிந்தால் முதல் சில ஆண்டுகளுக்கு, சில நேர்மையான அதிகாரிகள் / அமைச்சர்களை  "Mentor"  ஆகக் கொண்டு,  வழிகாட்டல், பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இந்த சலிப்பு ஏற்படாமல் இருந்தாலே நேர்மையான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நிச்சயம் உருவாவர்கள். (ஆனால் சில தவறான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இப்படிப்பட்ட, "Mentor" பணி செய்ய நேரிட்டால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும்... அதை இப்போது பார்த்தும் வருகிறோம்)

 
2) பாரம்பரியம் : எந்த ஒரு வேலை செய்யவும் ஒரு முன்னுதாரணத்தை எதிர்பார்த்தல். இதற்கு முன்பு இதுபோல செய்திருக்கிறார்களா? எப்பிடி செய்தார்கள்? ஒருவேளை அவ்வாறான ஒரு முன்னுதாரணம் இல்லாவிட்டால் முடிந்தது கதை... அந்த வேலை நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவேளை நடந்திருந்தால் இதற்குமுன் எப்படி செய்யப்பட்டதோ அதை அடிஒற்றியே செய்யப்படும். அது எவ்வளவு மோசமான பின்விளைவுகள் உள்ளதாக இருந்தாலும்.

தீர்வு :  முன்னுதாரணம் இல்லாத காரியங்களுக்கான வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வேலைகள் பாகுபாடு காட்டாமல் முடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசு வேலைகளுக்கும் சரியான "Target" நேரங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இது முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அதிகாரிகளும் / அமைச்சர்களும் நேர்மையான முறையில் பணி செய்யவேண்டும்.

 
3) பயம் : சில பல அரசு ஊழியர், அமைச்சர்களின் கைங்கரியத்தினால், உண்மையிலேயே நல்லன செய்யும் நபர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தவறு செய்பவர்களைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்படும் புதிய நடைமுறைகள் உண்மையில் தவறு செய்யாதவர்களை மாட்டுவிக்கவும், பயமுறுத்தவும் அதிகம் பயன்படுகிறது. இதனால் பல நேர்மையான அதிகாரிகளும் அமைச்சர்களும் வலுவான முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

தீர்வு : தவறுகள் நடக்கும்பொழுது புதிய நடைமுறைகள் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இருக்கும் நடைமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவும், அதை கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.  இவ்வாறு செய்தாலே தவறு செய்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆவதும் இவ்வாறு தவறு செய்பவர்கள் திருந்தாதற்கு முக்கிய காரணம்.

4)  கட்சிகள், பலம் மிகுந்தவர்களின் தலையீடு : நேர்மையாக பணியை ஆரம்பிக்கும்போது, இப்படிப்பட்ட தலையீடுகள் உற்சாகத்தைக் குறைத்து, முனைமழுங்கச்செய்துவிடுகின்றன.

தீர்வு :  தலையீடுகள் ஏற்படும்பொழுது கடைப்பிடிக்க ஒரு நடைமுறை ஏற்படுத்தப்பட்டு "Record" செய்யப்படவேண்டும்.(இது ஏற்கனவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் "Unofficial" ஆக).   அதில் தலையிடும் சம்பந்தப்பட்ட அனைவரின் பெயரோடு ஒரு "Report" தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையின் "Notice Board" மற்றும் பத்திரிக்கைகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்தத் தலையீடு சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்ளவும், தவறாக இருக்கும் பட்சத்தில் நிராகரிக்கவும் அதிகாரிகள் தைரியம் கொள்ளவேண்டும்.

5) பேராசையும் ஆதிக்கமனப்பான்மையும் : "உண்மையில், தவறு செய்யாதவர்களில் பெரும்பாலோனோர், தவறு செய்ய சந்தர்ப்பம் வாய்க்காதவர்களே...." இது நான் எங்கோ கேட்ட பொதுமொழி. உண்மையில் ஒருவருக்கு அப்படிப்பட்ட பதவி கொடுக்கப்படும்பொழுது இயல்பாக ஏற்படும் ஆதிக்கமனப்பான்மை, கண்முன் நடைபெறும் சில  தவறான நிகழ்வுகள், பெரும்பான்மை நபர்களை தங்களின் இயல்பான நிலையிலிருந்து பிறழவைத்துவிடுகிறது. பதவிக்கு வரும் முன்பாக நேர்மையும் சிறந்த கொள்கையும் கனவும் கொண்டிருப்பவர்கள் பதவிக்கு வந்த பின் மாறிவிடுவதற்கு இது  ஒரு முக்கியமான காரணி. என்னதான் சிலகாலம் தங்கள் கொள்கையில் பிடிப்பாக இருந்தாலும், காலப்போக்கில் மேற்கண்ட பல் வேறு காரணிகளுடன் கூட்டு சேர்ந்து இந்த நிகழ்வு ஏற்படக்காரணமாகிறது.

தீர்வு : இந்தக் காரணிக்கான நிரந்தரத் தீர்வு நமது "Gene" லயும், வளர்ப்புலயும், கல்விமுறையிலும் தான் இருக்கு. நாம எல்லாரும் எப்போதும் நேர்மையாக இருக்க சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். இது நம்முடய சந்ததிக்கு நிச்சயம் செல்லும். நமது குழந்தைகளை வளர்க்கும்போது இதை அழுத்தமாக சொல்லி வளர்க்க வேண்டும். கல்விக்கூடங்கள், இதில் பெரும் பங்கு ஆற்ற முடியும். தனிமனித ஒழுக்கமும், நேர்மையும் சில தலைமுறைகள் தொடரும்பொழுதே இந்தக் காரணி மாறமுடியும். பெரிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஒரு பயத்தை உண்டுபண்ணியும் இதை தற்காலிகமாக நிறுத்தலாம். ஆனால் நிரந்தரத்தீர்வு எதிர்காலத்தில் மட்டுமே.

இவ்வளவுக்கும் நடுவுல (மாட்டிக்காம) வேலை செய்யுற நமது அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உண்மைலேயே ரொம்ப திறமைசாலிகள்தான். ஆனா இந்தத் திறமைய இவங்க நேர்மையான விசயங்களுக்கு அதிகமாப் பயன்படுத்தினா நாடு நல்லா இருக்கும்.

இந்த நிலைமைலயும் இவ்வளவு தாமதமாவும் இவ்வளவாச்சும் நலப் பணிகள் நடக்குதேன்னு சந்தோசப்பட்டுக்கவேண்டியதுதான்.

ஓம் நம சிவாய ..... சதுரகிரியாரே இந்த நாட்டக் காப்பாத்து....

7 comments:

ப.கந்தசாமி said...

நன்றாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

ப.கந்தசாமி said...

word verification வேண்டுமா? கமென்ட் போட அது ஒரு தடையாக இருக்கிறது.

Sankar Gurusamy said...

Dear Dr P Kandaswamy Phd, Thanks for your visit and comments.

Now the word verification is removed.

Thanks for pointing this.

http://machamuni.blogspot.com/ said...

நீங்கள் மேலே சொன்ன அனைத்து விடயங்களும் நேர்மையான அதிகாரியாக இருந்து எனக்கு நடந்தது,நடந்து கொண்டிருக்கிறது,இனியும் நடக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Sankar Gurusamy said...

Dear Mr Samee Azhagappan, In this kaliyuga these things are bound to happen. Only people who can compromise can survive.. This is the bitter truth..

Thanks for your visit and comment..

http://machamuni.blogspot.com/ said...

///"compromise can survive"///பாத்து நடந்துக்கோங்க!மன்னிச்சுக்கோங்க!தெரியாம சொல்லிவிட்டேன்.உங்களுடன் நானும்,என்னுடன் வேறு ஒருவனும் லஞ்சத்திற்காக ஒத்துப் போவதற்கு ஆயிரம் காரணங்கள்.இந்த வார்த்தைகள்தான் லஞ்சத்தின் முதல் படி.நான் இந்த வார்த்தைக்கு அடிமையாயிருந்தால் இங்கு ஏன் பேசுகிறேன்.நான் இது போன்ற விடயங்களின் முதல் எதிரி."DON'T COMPROMISE ON ANY THING"எதற்காகவும் உங்களை நீங்கள் விலை கூறாதீர்கள்.குருதிப் புனலில் நாசர் சொல்வதாக ஒரு வசனம் உண்டு.எவனுக்கும் ஒரு விலை உண்டு.பயம் உண்டு.உனக்கான் விலை வரவில்லை.உனக்கு பயம் உண்டாக்கும் அளவு வரவில்லை.
எனக்கு விலையும் வரவும் இல்லை.அந்த விலைக்கு நான் விலை போகவும் கூடாது.எனக்கு இந்த மாதிரியான விடயங்களைக் கண்டு இது வரை பயம் வரவில்லை.இனி வராத சூழ்நிலையை இறைவன் கொடுப்பான்.அப்படி பயம் வந்தால் என் உயிர் உடலில் இருக்கக் கூடாது.என்றுதான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

Sankar Gurusamy said...

Dear Mr.Samee Alagappan, I could understand your feelings. But this is the 99.9% scenario today... A bitter pill truth.. :-(