நமது வரிப்பணம் எங்கே செல்கிறது??? -இதன் முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்..
ஒரு அரசாங்கத்துக்கு நாம் வரி என்று பலவகைகளில் கொடுப்பது எதற்காக?
1) நமக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த
2) சிறந்த அரசு நிர்வாகம் ஏற்படுத்த
3) நம் பாதுகாப்புக்கு ராணுவம், போலீஸ், துணைராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படைகள்,ஏற்படுத்த
4) நம் தேசத்துக்கு ஒரு மதிப்பு சர்வதேச அரங்கில் ஏற்படுத்த
ஆனால் நம் தேசத்தில் இப்போது நடப்பது என்ன?
உள்கட்டமைப்பு வசதிகள்
பெருநகரங்களுக்கு மட்டும் ஓரளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற சிறு குறு நகரங்கள், கிராமங்கள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும், சாலைவசதிகளும் இன்னும் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை...
அரசு நிர்வாகம்
இதைப்பற்றி தனியாகக் கூற வேண்டாம்... ஒரு அரசாங்க வேலை வாங்கவேண்டுமென்றால் லஞ்சம் தர வேண்டும் என்ற நிலை. ஏதாவது அரசு சம்பந்தப் பட்ட பணி நடைபெற லஞ்சம் தரவேண்டிய நிலை. மிகத் தாமதமாக வழங்கப்படும் நீதி.. தாமதப்படுத்தப் படும் தண்டனை நடைமுறைகள்.
போலீஸ், ராணுவம், பாதுகாப்புப்படைகள்
ஒருமுறை தமிழக முதல்வர் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்று சட்ட சபையில் கூறினார். அது இன்னும் சரியாக வில்லை என்றே தோன்றுகிறது. ராணுவத்திலும், ஊழலும், லஞ்சமும் வன்முறையும் ஊடுறுவ ஆரம்பித்து இருக்கின்றன.. தேசப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
நம் தேசத்துக்கு மதிப்பு
இதுபற்றி வெளிநாடு வாழ் சகோதர்கள் தான் சரியாகக் கூற முடியும். இப்போது,2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டி ஊழல்களின் கருணையால் நமது தேசத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் அதல பாதாளத்தில் தான் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் நமக்கு ஓரளவுக்கு சில விசயங்கள் கிடைத்திருக்கின்றன :
1) சில ஆப்பிரிக்க நாடுகள் போன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லை. குற்றங்கள் சற்று குறைவு.
2) இப்படிப் பட்ட நிலையிலும் ஓரளவுக்கு நிலையான அரசாங்கம் இருப்பதால் தொழில் வளர்ச்சி அடைதல்..
3) நமக்கு நாமே என்று சுயநலமுடன் வாழ நினைத்தால் ஓரளவுக்கு தடையில்லா வாழ்க்கைமுறை.
4) இன்னும் நம் கலாச்சார பாரியம்பரிய வேர் நிலையாக இருப்பதால் மேற்கு நாடுகள் போன்ற ஒரு ஒழுக்கக் கேடு வராமல் இருப்பது.
5) ஓரளவுக்கு கருத்து சுதந்திரம் ஆரோக்கியமாக இருப்பது.
இது போதுமா? இவையும் எவ்வளவு நாள் நிலைக்கும்?? தெரியவில்லை... ஆனால் இப்போது இருக்கக்கூடிய நிர்வாக சீர்கேட்டைப் பார்க்கும்போது ரொம்ப நாள் இந்த சந்தோஷம் நீடிக்கும் என்று தோன்றவில்லை.
காலமும் கடவுளும்தான் பதில் சொல்லவேண்டும்.
இந்த மார்ச் மாதத்தில் கட்ட வேண்டிய வருமான வரிகளெல்லாம் மொத்தமாக பிடித்தம் செய்வதைப் பார்க்கும் போது மனம் வெம்புகிறது. இதில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு பல்வேறு ஊழல்கள் செய்யப்பட்டு கடத்தப் படுவதைக் கேள்வியுறும்பொழுது நெஞ்சு கொதிக்கிறது.
நேற்றய (09 மார்ச் 2011) Headlines Today செய்தியில் தோராயமாக சுமார் 8 லிருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கருப்புப் பணம் ஒவ்வொரு ஆண்டும் நம் பாரத தேசத்திலிருந்து மட்டும் சுரண்டப்படுவதாக தெரிவித்தார்கள். இதுவும் மிகவும் குறைந்தபட்ச மதிப்பீடு என்று வேறு கூறி வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்கள்.
ஒன்றும் புரியவில்லை... எனக்குதான் மறை கழண்டு விட்டதா என்றும் தெரியவில்லை... கடவுள் தான் இந்த தேசத்தை இந்த துரோகிகளிடம் இருந்து காப்பாத்தணும்...
கடவுளே காப்பாத்து. சதுரகிரியாரே சரணம்... மஹாலிங்கமே போற்றி....
4 comments:
நல்ல கணக்கு தான்...
எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ... யாரோ... அறிவார்...?
Mr Raja Raja Rajan, These are the true facts we overlook very conveniently..
Thanks for your visit and comments.
அன்புள்ள சங்கர் குருசாமி ,
தாங்கள் கூறுவது உண்மை. மார்ச் மாதம் வந்தாலே எங்களுக்கு சம்பளமே கொஞ்சம் சந்தேகம் தான்.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Bala, Thanks for your visit and comments..
Post a Comment