இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளில் வாகன சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிக்கப்படுவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ 20 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.
அதுவும் பிடிபட்டது மட்டுமே இவ்வளவு என்றால், பிடிபடாதது, பிடித்தும் கண்டுகொள்ளாமல் (??) விடப்பட்டது எவ்வளவு இருக்கும் என கணக்குப் பண்ண முடியவில்லை.
இந்த தேர்தல் நேரத்தில் வாகன சோதனை செய்வதால் மட்டும் இவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் சில மாதங்களுக்கு முன்பிருந்தெ இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் நம் நாட்டில் பணத்துக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.
இவ்வளவுக்கும் ஒரு வேட்பாளர் ரூ 15 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறதாம்(???). ஆனால நிஜத்தில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது கண்கூடு. இந்தப் பணம் இவர்களுக்கு வாகன செலவுக்கு மட்டுமே பத்தாது. மேலும் பேச்சாளர்கள் செலவு, தொண்டர்களுக்கு பேட்டா, பிரியாணி, பேனர், தலைவர்கள் பிரச்சார செலவு, வாக்காளர்களுக்கு இலவசம்(???), பணம், சில முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு கவனிப்பு என்று ஒரு வேட்பாளரின் குறைந்தபட்ச தேர்தல் செலவு ரூ 5 கோடி இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆனால் இதெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் நம் அரசு,தேர்தல் கமிஷன் இல்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் தாக்கல் செய்யும் கணக்கைமட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டுகொள்வதில்லை போலும்.
இந்த தேர்தல் திருவிழாவில் பலனடைவோர் பலர். முதலில் அந்தந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் கும்பிடுபோடுவார்கள்.(மற்ற நேரத்தில் மதிக்க வேண்டியதில்லையே).
பேனர் எழுதுபவர்கள், வாகன ஓட்டிகள், கார், ஆட்டோ வாடகைக்கு விடுபவர்கள், கொடி,தோரணம் செய்பவர்கள், கட்டும் தொழிலாளிகள், மேடை அமைப்பளர்கள், மைக்செட் வாடகைக்கு விடுபவர்கள், சில பேச்சாளர்கள், மேடைப் பாடகர்கள், கலைஞர்கள், மாஜிக் நிபுணர்கள், ஆட்டக்காரர்கள், மிமிக்ரி ஆர்டிஸ்ட், இவர்களுக்கு தேர்தல் வரை யோகம்தான். ஒரே விஷயத்தில் இவர்கள் கறாராக இருந்தால் போதுமானது.. பணம்.
இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?? நன்கொடை என்றபெயரில் வரும் பணம் பெரும்பாலும் கருப்புப் பணமே... இதை மீண்டும் சம்பாதிக்க இவர்கள் ஏதாவது வழி செய்வார்கள் என்ற நப்பாசையில் தரப்படுவது. அல்லது தேர்தலில் நிற்க வாய்ப்பு எதிர்பார்த்து தரப்படுவது.
நியாயமாக கணக்குப்பார்த்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு 5 பெரிய வேட்பாளர்கள் போட்டியிட்டால் மொத்த தேர்தலுக்கும் செலவளிக்கப்படும் தொகை ரூ 176 கோடி மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ரூ5000 கோடி இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் செலவு ஆவதாக ஒரு கணக்கு கூறுகிறது. இது வேட்பாளர் செலவு மட்டுமே.. அரசாங்க செலவு தனி.
இவ்வளவு செலவு செய்து நடைபெறும் தேர்தலில் நாம் நமது ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றி ஒரு சிறப்பான அரசாங்கம் உருவாவதற்கு உறுதுணையாக இருப்போம்.
ஓம் நம சிவாய!! சதுரகிரியாரே போற்றி!!!! நீங்கதான் கருணை செய்து ஒரு நல்ல அரசாங்கம் அமைய ஏற்பாடு செய்யணும்.
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!
7 comments:
நீங்க ஒரே கடவுள கூப்பிடுரிங்கள ஏன், உங்களுக்கு கடவுள் பக்தி இருக்குன்னு காமிக்கவா ? இல்ல நீங்க ஒரு இந்துன்னு காமிக்கவா !!!
அன்புள்ள சங்கர்,
கணக்கு வழக்குகளை தாங்கள் சரியாக கணித்து வைத்து உள்ளீர்கள்.
தங்களின் வலைப்பூவை பார்த்தாலே போதும் நாட்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அன்புள்ள நண்பர் அனானிமஸ்க்கு, நான் இந்துதான். நானறிந்த கடவுளை கூப்பிடுகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். அதுபோல் நீங்களும் உங்களுக்குப் பிடித்த, அறிந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
இதை வெளிக்காட்டிக் கொள்வதில் சிலர் போல் எனக்கு வெட்கமில்லை. பெருமைப்படுகிறேன்...
அன்புள்ள பாலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இதுபோன்று பணம் சிக்குகிற செய்திகள் அதிகமாய் வருவது, தேர்தல் ஆணையம் முனைப்பாக இருப்பதையும் காட்டுகிறது. இதை ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதி, அவர்களது பணியினைச் செம்மையாகச் செய்ய நம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பு அளிப்பது, தேர்தலில் வாக்களிப்பதைப் போன்றதோர் ஜனநாயகக்கடமை என்பது எனது தாழ்மையான கருத்து.
சேட்டைக்காரன், தேர்தல் ஆணையம் முனைப்பாக இருந்தாலும் நம் அதிகாரிகளும், கட்சிகளும் அவர்களுக்கு தண்ணி காட்டுவதில் வல்லவர்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. இருந்தாலும் இவ்வளவாவது பிடிபட்டதே என்று மனதை தேற்றிக் கொள்வதைத் தவிர இதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Start to post Here ------ > www.classiindia.com
Post a Comment