Monday, March 14, 2011

வலைப்பதிவுகளுக்கு அரசாங்கம் விதிக்கும் புதிய சட்டம்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை யில் வந்த ஒரு செய்தி பற்றியதே இன்றய பதிவு.

வலைப்பதிவுகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ இருக்கும் ஒரு ச‌ட்ட‌த் திருத்த‌ம் ப‌ற்றிய‌ செய்தியே அது.


அது ப‌ற்றி மேலும் விள‌க்க‌மாக‌ப் ப‌டிக்க‌ கீழ்க் க‌ண்ட‌ சுட்டிக‌ளை சொடுக்க‌வும்.



இவ‌ற்றிலிருந்து நான் புரிந்து கொண்ட‌வை :

1) அர‌சாங்க‌ம் ந‌ம‌து நாட்டில் செய‌ல்ப‌டும் இண்ட‌ர்னெட் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சேவைக‌ள் த‌ரும் இடைத்த‌ர‌க‌ர்க‌ள்/ ம‌த்திய‌ஸ்த‌ர்க‌ள் என‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை முறைப்ப‌டுத்த‌ ஒரு ச‌ட்ட‌ திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ ஏற்பாடு செய்கிற‌து.

2) இதில் அக‌ஸ்மாத்தாக‌ ப்ளாக்க‌ர் என‌ப்ப‌டும் வ‌லைப்ப‌திவர்க‌ளையும்  சேர்த்துவிட்ட‌து.

3) அதாக‌ப்ப‌ட்ட‌து, பதிவர்களாகிய‌ நாம் செய்ய‌க்கூடாத‌வ‌ற்றை கீழ்க்க‌ண்டவாறு ப‌ட்டிய‌லிட்டுள்ளார்க‌ள்.

 
Article 2) The intermediary shall notify users of computer resource not to use, display, upload, modify, publish, transmit, update, share or store any information that : —

(a) belongs to another person;

(b) is harmful, threatening, abusive, harassing,  blasphemous, objectionable, defamatory, vulgar, obscene, pornographic, paedophilic, libellous, invasive of another’s privacy, hateful, or racially, ethnically or otherwise objectionable, disparaging, relating or encouraging money laundering or gambling, or otherwise unlawful in any manner whatever;

(c) harm minors in any way;

(d) infringes any patent, trademark, copyright or other proprietary rights;

(e) violates any law for the time being in force;

(f) discloses sensitive personal information of other person or to which the user does not have any right to;

(g) causes annoyance or inconvenience or deceives or misleads the addressee about the origin of such messages or communicates any information which is grossly offensive or menacing in nature;

(h) impersonate another person;

(i) contains software viruses or any other computer code, files or programs designed to interrupt, destroy or limit the functionality of any computer resource;

(j) threatens the unity, integrity, defence, security or sovereignty of India, friendly relations with foreign states, or or public order or  causes incitement to the commission of any cognizable offence or prevents investigation of any offence or is insulting any other nation.

ஒரு விஷ‌ய‌த்தை முறைப்ப‌டுத்துவ‌து என்ப‌து வ‌ர‌வேற்க‌த்த‌குந்த‌து என்றாலும், இப்போத‌ய‌ அர‌சிய‌ல் சூழ‌லில், எந்த‌ வித‌மான‌ பொருளாதார ஆதாய‌த்துக்கும் ஆசைப்ப‌டாம‌ல் உள்ள‌தை உள்ள‌ப‌டி கூறிக்கொண்டு இருக்கும் ப‌திவுல‌கிற்கு இந்த‌க் க‌ட்டுப்பாடுக‌ள் ஒரு க‌டிவாள‌மாக‌வே இருக்கும் என்று தோன்றுகிற‌து.

மேலும் ந‌ம் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் இதைத் த‌வ‌றாக‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சாத்திய‌க்கூறுக‌ள் அதிகமாக‌வே தோன்றுகிற‌து. இதைப் ப‌ய‌ன்ப‌டுத்தி அர‌சாள்ப‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதுப‌வ‌ர்க்ளை முட‌க்க‌ முய‌ற்சிக‌ள் அதிக‌ம் மேற்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.

இனிமேல் வ‌லைப்ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ள் ஒரு வ‌ழ‌க்குரைஞ‌ரை அம‌ர்த்திக் கொண்டு எழுதுவ‌து ந‌ல்ல‌து என்றே தோன்றுகிற‌து.

 
ம‌ஹாலிங்க‌ம்!!! நீங்க‌தான் இத‌னால் எந்த‌ பிர‌ச்சினையும் ந‌ம் சக வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டாம‌ல் பாதுகாக்க‌ணும்!!!

ஓம் ந‌ம‌சிவாய‌!!! ச‌துர‌கிரி சுந்த‌ர‌ ம‌ஹாலிங்க‌த்துக்கு அரோக‌ரா!!!

நன்றி : Times of India News paper, http://www.cis-india.org/

8 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

Sankar Gurusamy said...

விக்கி உலகம் , தங்கள் வருகைக்கு நன்றி..

settaikkaran said...

இந்த சட்டத்தின்படி வலைப்பதிவர்கள் பத்திரிகையாளர்கள் என்று கருதப்படுவார்களா என்பதே கேள்வி. அப்படிக் கருதப்பட்டால், இன்றைய ஊடங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை உபயோகிப்பது போல வலைப்பதிவர்களும் உபயோகிக்கலாம். ஒரே வித்தியாசம் இணைய இணைப்பு தருகிற நிறுவனங்களின் கெடுபிடி அதிகரிக்கலாம். இது குறித்து இன்னும் தகவல்களை நானும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.நன்று..

Sankar Gurusamy said...

சேட்டைக்காரன், இதன்படி, வலைப்பதிவு ஒரு பத்திரிக்கைபோலவே கருதப்படும். வலைப்பதிவர்கள் பத்திரிக்கையாளர்கள் போலவே கருதப்படுவர்.. ஆனால் பத்திரிக்கைகளுக்கு உடைய ஒரு அமைப்பு ரீதியான பாதுகாப்பு இருக்காது...இதுவே வருந்தத்தக்க செய்தி...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

arasan said...

நன்றிங்க ..
பகிர்வுக்கு

shanmugavel said...

சிந்தனைக்குரிய பதிவு.நன்றி

பாலா said...

Hi Sankar,

Very good information. before publish any message, we should review and then publish.

endrum-sivanadimai-bala-chennai.

Sankar Gurusamy said...

Shanmugavel, Bala, Thanks for your visit and comments.