நமது நாட்டில் இப்போதெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், கோடிகளில் ஊழலும் மிகவும் சகஜமாக ஆகிவிட்டது.
1) எந்த அரசாங்க போஸ்டிங்குக்கும் ஒரு வசூல் வேட்டை நடத்தப்படுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. அதற்கு போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள்(ஒரே போஸ்டிங்குக்கு 2 / 3 பேர் வரை வசூல் செய்கிற கொடுமையும் நடக்கிறது).
2) பெரும்பாலான அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் தம் கடமையை செய்வதற்கே கையூட்டுப் பெறுவதும், அது சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதும் மிகவும் கேவலமான ஒன்று.
3) ஓட்டுப் போடுவதற்கும், ஓட்டு வாங்குவதற்கும் பணம் தரவேண்டும் என்ற ஒரு மோசமான முன்னுதாரணத்தை நம் தாய்த் தமிழகம் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.. இப்போதே இந்த தேர்தல் அறிக்கையில் இலவசம் மிக்சியா கிரைண்டரா என்ற வாக்குவாதம் நடக்கிறதாம்... தூ... வெட்கக்கேடு.
4) நீதிபதிகளும் லஞ்சம் கொடுத்து நியமிக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேரள அமைச்சர் கொழுத்திப் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். இன்னும், நம் உச்ச நீதிமன்ற ஒரு முன்னாள் நீதிபதியின் உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை கேஸ் நடத்துகிறது.
5) ஒரு கவர்னர் விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதுபோல வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள்.
6) ஒரு துறவி ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருப்பதுபோல வீடியோ வெளியாகிறது.
7) போலீசைப் பற்றிக் கேட்கவேண்டாம். அவர்கள் மானம் ஒவ்வொரு நெடுஞ்சாலை ஓரமும் ஒவ்வொரு சிக்னலின் முன்பும் காற்றில் பறக்கிறது. ஒரு கம்ப்ளைய்ண்ட் கொடுக்க தைரியமாக போலீஸ் ஸ்டேசன் போக முடியவில்லை.
8) ராணுவத்திலும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை கொள்ளை அடித்ததிலும் அவர்களின் லட்சணம் சந்தி சிரிக்கிறது.
9) ஒவ்வொரு தொழிலதிபரும் ஏதேனும் ஒரு விதத்தில் லஞ்சம் கொடுப்பது வாடிக்கையாகப் போகிவிட்டது. அரசியல் கட்சிகளுக்காகட்டும், அமைச்சர்களுக்காகட்டும் அவர்கள்தான் இதை முக்கியமாக ஊக்குவிக்கிறார்கள்.
இன்னும் ஏராளமாக நம் சமூக, அரசியல் அமைப்பில் லஞ்சமும் ஊழலும் ஒழுக்கமின்மையும் பூரணமாக ஒரு ரத்தப் புற்றுநோயைப் போல ஊடுறுவி விட்டது.
இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மக்களையும் இவர்கள் விடவில்லை. நமது தேசத்தைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படும்போது கூட உதவிசெய்ய மனமில்லாத அரசாங்கம்தான் இங்கு நடைபெறுகிறது. உதாரணம் இலங்கை, எகிப்து, லிபியா, ஆஸ்திரேலியா, வளைகுடாநாடுகள், மற்றும் பல. தூதரகங்கள் பெயருக்கு, பொம்மை அலுவலகங்களாக இயங்குகின்றனவோ என்ற சந்தேகமும் வருகிறது.
நமது வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு கருப்புப்பணமாக வெளிநாடுகளில் யார்யார் பெயரிலோ பதுக்கப்படுவதைப் பார்க்கும்போது ஒரு சமூகப் பிரக்ஞை உள்ள குடிமகனாக என்னால் மனமுவந்து வரிகட்ட முடியவில்லை. நான் ஏன் வரிகட்டவேண்டும் என்ற சிந்தனை இயற்கையாக எழுகிறது.(என்ன செய்வது? வேற வழி இல்லை)
எவ்வளவோ இல்லைகள் இருந்தாலும் நம் தேசம் என்ற பற்று மட்டும் குறையவே இல்லை.
இதற்கு தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்று யோசித்தபோது என்னால் கீழ்க்கண்ட கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.
1)நாம் உண்மையிலேயே ஜனநாயகத்துக்குத் தகுதியுடயவர்கள் தானா?
2)இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நமக்குத் தேவையா?
3)சில / பல ஆண்டுகள் (இந்த நோயைக் குணப்படுத்த) சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன??
இப்போது நமக்குத் தேவை ஒரு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு வீரமும் விவேகமும் துணிவும் உள்ள ஒரு இரும்புத் தலைமை. அது எங்கிருந்து வரும் என்றும் புரியவில்லை.
ஒரு தன்னலமில்லாத தலைவனின் ராணுவ ஆட்சி நமக்கு இப்போதய உடனடித் தேவை... யார் கொடுப்பார்கள் என்றுதான் தெரியவில்லை...
ஆண்டவா.. மஹாலிங்கம்!!! என் சிந்தனை சரியான்னு தெரியல... ஆனா இதுதான் சரின்னு எனக்குப் படுது...
உங்க கடாட்சம் பூரணமாக வெளிப்பட்டு, இந்த ரத்தப் புற்றுநோயை உடனடியாக் குணப்படுத்தி என் பாரதத் தாய் மீண்டும் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க வழிசெய்ய ஆவன செய்யுங்கள்...
சதுரகிரிவாழ் சுந்தரனே போற்றி!!!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா........
1 comments:
Dear Anonymous, Thanks for your visit and comment.
Post a Comment