நேற்று (09-03-2011) இரவு Headlines Today நியூஸ் சேனலில் கருப்புப்பணம் எவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது என்று சற்று விரிவாக காண்பித்தார்கள். அது பற்றி, அதிலிருந்து, நான் புரிந்து கொண்ட வரையிலான ஒரு பதிவு :
இப்போது ஒருவரிடம் பணம் / கருப்புப்பணம் அதிகமாக இருக்கிறது அல்லது அதிகமாக சம்பாதிக்க முடியுமாக இருப்பவர்கள் (இங்கு ஊழல் அரசியல்வாதிகள், முறையற்ற வழியில் வருமானம் ஈட்டுபவர்கள், ஈட்ட முற்படுபவர்கள், ஊழல் அரசு அதிகாரிகள், சர்வதேச தீவிரவாதிகள் என்று போட்டுக் கொள்ளலாம்) என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரி Tax Heavens என்று சொல்லக்கூடிய நாடுகளில் இருக்கக் கூடிய பாங்குகளின் அதிகாரிகள் இவர்களை அணுகுவார்கள். அல்லது இவர்களே ஏற்கனேவே இந்த மாதிரி நாடுகளில் அக்கவுண்ட் இருக்கும் ஆசாமிகளிடம் சொல்லி எனக்கும் ஒரு அக்கவுண்ட் வேண்டும் என்று ஏற்பாடு செய்யச் சொல்வார்கள்.
இந்த மாதிரி மீட்டிங்குகள் பெரும்பாலும் GULF Countries என்று சொல்லக்கூடிய வளைகுடா நாடுகளில் நடக்கும் ஏதாவது ஒரு விழாவில் (கலை விழா, ஷாப்பிங் திருவிழா,கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பல) மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கும்.
இப்போது அந்த வங்கிகளின் ஏஜெண்ட் அவர்களிடம் உள்ள அமௌண்ட்க்குத் தகுந்தாற்போல ஏதாவது ஒரு நம்பிக்கையான நபரையோ அல்லது அந்த நாட்டில் உள்ள ஒரு வக்கீலையோ அல்லது அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏதாவது ஒரு ட்ரஸ்டையோ அல்லது அந்த நாட்டில் உள்ள ஏதாவது ஒரு கம்பனியையோ அவர்களின் Nominee நாமினியாக இருக்கச்செய்வார்கள்.
அவர்களிடம் இருக்கும் பணத்துக்குத் தகுந்தாறபோல் அவர்களே ஒரு புது கம்பனியையோ அல்லது ஒரு புது ட்ரஸ்டையோ புதிதாகவும் தொடங்கிக் கொள்ளலாம்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் :
1) இந்த அக்கவுண்ட்க்காக அவர்க்ள் நேரடியாக போகவேண்டியதில்லை.
2) அவர்கள் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டியதில்லை பெயர் உட்பட...(????)
2) அவர்கள் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டியதில்லை பெயர் உட்பட...(????)
இப்போது இந்தியாவில் இருந்து பணம் எவ்வாறு இந்த அக்கவுண்ட் களுக்கு அனுப்பப் படுகிறது என்று பார்போம்.
1) Over Invoicing : அந்த நாடுகளில் இருக்கும் ஏதாவது ஒரு கம்பெனியில் இருந்து ஏதாவது ஒரு பொருள் அல்லது சர்வீஸ் செய்ததாக இந்தியாவுக்கு அனுப்புவார்கள். அதன் உண்மையான விலை ரூ 100 என்றால் அதற்கு ரூ 10,00,000 க்கு பில் அனுப்புவார்கள். அந்த பில்லுக்கு பணம் செலுத்துவதுபோல இந்தியாவிலிருந்து பணம் அந்த நாட்டிற்கு பத்திரமாகப் போய் சேர்ந்துவிடும். அங்கு இருக்கும் இந்த வங்கி அதிகாரிகளும் இவர்களின் நாமினி களும் இந்தப் பணத்தை பத்திரமாக இவர்களின் அக்கவுண்ட் களில் செலுத்தி விடுவார்கள்.
2) ஒரு முறை இந்தியாவிலிருந்து தனி விமானத்தில் பணமாக எடுத்து வந்து செலுத்தி இருக்கிறார்களாம்.
3) ஹவாலா முறை : பணத்தை இங்கு இருக்கும் ஹவாலா ஏஜெண்ட் களிடம் கொடுத்தால் அவர்கள் அந்த நாட்டில் கொடுத்துவிடுவார்கள்.
இந்த மாதிரி நிறைய நாடுகளிலிருந்து (180 என்று கூறினார்கள்) பணம் இவ்வாறு அந்த Tax Heavens களுக்கு கடத்தப்பட்டு பதுக்கப் படுவதாகக் கூறினார்கள்.
இந்த நாடுகளிலிருந்து இவ்வாறு பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மிரட்டி வாங்கிக் கொண்டதாகவும் செய்தி கசிகிறது. (இப்போது புரிகிறது ஏன் இந்த அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க விரும்புகிறார்கள் என்று)
இந்த வகைமுறைகளைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது எல்லாம் பொறிவைத்து எலிப் பிடிக்கும் உபாயம் தான்.
1) முதலில் இந்தமாதிரியான் Tax Heavens களை ஏற்படுத்துவது (பொறி)
2) அதில் வளரும் நாடுகளில் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளையும் தொழில் அதிபர்களையும் அரசு அதிகாரிகளையும் தீவிரவாதிகளையும் முதலீடு செய்யத் தூண்டுவது (வடை)
3) அந்த விவரங்களை அந்த நாடுகளிருந்து வாங்கி அவர்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்துவது. (பொறியில் எலி சிக்கிக் கொண்டது)
இதையெல்லாம் பார்க்கும்போது நமது ஊழல் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நமது பாரத மாதாவின் மானத்தை விலைக்கு விற்றுவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கேவலம்.
என்ன செய்யலாம்???
கடவுள் தான் இவர்களுக்குத் தண்டனை தரணும். ஏன்னா மனிதன் தண்டனை தருகின்ற இடத்தில் இப்போது இருப்பவர்கள்தான், தவறு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.
மஹாலிங்கம்!! இவர்களுக்கெல்லாம் தகுந்த தண்டனையை நீங்கதான் வழங்கணும்.
சதுரகிரியாருக்கு சரணம்!!! மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!
4 comments:
மிக மிக அருமையான பதிவு .. ஆராய்ந்து எழுதியிருகீங்க ..வாழ்த்துக்கள் :)
Mr. Sudharshan, In this post, I have given only my understanding about a Program telecast on the News Channel "Headlines Today". Only a few points are my additions.
You can view the same programe now also. They are telecasting this program every one hour once.
Thanks for your visit and comments.
அன்புள்ள சங்கர் குருசாமி ,
தங்களின் இந்த பதிவு மூலம் தான் கருப்பு பண பட்டுவாடா பற்றி தெரிந்துகொண்டேன் . அருமையான பதிவு.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Bala, Thanks for your visit and comments..
Post a Comment