Friday, September 30, 2011

ஆன்மீகம் - யாருக்கு ???

ஆன்மீகம் - பக்தி, கோவில், குளம், யோகா,  தியானம்,  இதெல்லாம் வயசானவங்களுக்குதான் என்று ஒரு தவறான கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் யோசித்தால் ஒரு மனிதன் முழுமையாக வாழும் இளமை, நடுத்தர வயது காலத்தில் அவன் பண்பட்டு முழுமையாக இருத்தல் அவசியம். அப்படி மனிதனை முழுமையாக்குவது ஆன்மீகமே. எனவே இது எல்லா வயதினருக்கும் தேவை.
 
ஆன்மீகம் என்பது பாலினம், உயிரினம் கடந்த ஒரு புனிதத் தொடர்பு. இதை கடைபிடிக்க எதுவுமே தடையில்லை. யாரும் எப்போதும் எந்த சூழலிலும் கடைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது.
”ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்” என்று கூறுவார்கள். அதுபோல ஆன்மீகம் இல்லா மனிதனும் அரை மனிதன்தான்.(நாத்திகமும் ஒரு ஆன்மீகமே.. முழுமையாக கடைபிடிக்கும் பட்சத்தில்).

மனித மனங்களை பக்குவப்படுத்தி அவனை முழுமையாக  வாழ தயார் படுத்தும் ஒரு விஞ்ஞானம் தான் ஆன்மீகம் என்கின்ற மெய்ஞானம். ஒரு மனிதனின் அடிப்படை பண்புகளை செம்மைப்படுத்துகின்ற ஒரு துடைப்பம் தான் நம் ஆன்மீகம்.

நம்மை பாதிக்கும் புறக்காரணிகளை இனம் காணவும் அவற்றை சமாளிக்கும் வலிமை தரவும் வல்லது ஆன்மீகம். உறவுகளை வளர்ப்பதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் அவசியம் ஆன்மீகம்.

ஆன்மீக நட்புகள் என்றுமே நிலையானவை. அது ஆத்மாவில் நிலை கொள்ளும். நம் வாழ்நாள் முழுதும் நமக்கு வெளிச்சம் தரும்.

ஆன்மீகம் - தீமை என்னும் இருட்டை அகற்றும் விளக்கு... பகைமை என்னும் குப்பையை எரிக்கும் நெருப்பு..

இப்படிப்பட்ட ஆன்மீகத்தை அனைவரும் கைகொள்வோம் சுபிட்சமாக வாழ்வோம்..


கடவுளே மஹாலிங்கம்... ஆன்மீகம் தளைத்து மக்கள் செம்மையாகி நாடு சுபிட்சமாக அருள் செய்யுங்க...

சதுரகிரி நாதனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்த்க்கு அரோஹரா.. ஹரஹர மஹாதேவா சரணம்.. சரணம்...


10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மனித மனங்களை பக்குவப்படுத்தி அவனை முழுமையாக வாழ தயார் படுத்தும் ஒரு விஞ்ஞானம் தான் ஆன்மீகம் என்கின்ற மெய்ஞானம்

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

இதைப் புரிந்துகொண்டோர் சிலரே..

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பா..

விருந்துக்கு வாங்க..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html

Sankar Gurusamy said...

முனைவர்.இரா.குணசீலன், தன்க்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

நிச்சயம் தங்கள் விருந்தில் கலந்து கொள்கிறேன்...

shanmugavel said...

ஆன்மீகம் எல்லா வயதினருக்கும் தேவை என்பதே நிஜம்.பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

S.Muruganandam said...

அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் சங்கர் ஐயா.

Sankar Gurusamy said...

திரு கைலாஷி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

தக்குடு said...

சுருக்கமாக சொல்லப்பட்ட அழகான பகிர்வு!

அன்புடன்,
தக்குடு
www.ummachikappathu.blogspot.com

Sankar Gurusamy said...

திரு தக்குடு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Sankar Gurusamy said...

திரு சிவம்ஜோதி28, அந்த வீடியோக்களைப் பார்த்தேன். சிறந்த கருத்துக்களை கூறுகிறார்கள்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..