Thursday, January 27, 2011

நேர்மையின் மரணம்....

கடந்த 25ம் தேதியில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியை சமூக விரோதிகள் பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து நெருப்பிட்டுக் கொளுத்திக் கொன்றிருக்கிறார்கள்.  நமது சமூகத்தில் நேர்மையாக நடப்பதனால் சந்திக்க விழையும் சில பரிதாபமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது. இது தவிர, பணியில் தேவையற்ற அலைக்களிப்பு, தேவை இல்லாத பணிமாற்றம், பணி இடைநீக்கம்,  ஆசிட் வீச்சு, குடும்பத்தினருக்குத் தொல்லை, தாக்குதல் இப்படி பலவும் அடக்கம்.  

நேர்மையாகப் பணி செய்வது அவ்வளவு பெரிய குற்றமா?? ஏன் இப்படி ஆகிவிட்டது? என்ன செய்யலாம்? இதுபற்றிய எனது சிந்தனைகள்....

ஏன் இப்படி ஆனது ?

இதற்கு முதல் காரணம் குற்றச்செயல்கள் நடைபெறும்போது ஆரம்பத்திலேயே தடுக்காதது. முளையிலேயே கிள்ளி எரியாமல் விட்டது.. தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாய்ப் போய்விட்டது. இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை முதலில் சாதாரணமான தவறுகள்   செய்யும்போதே சரியானபடி தண்டிக்காமல், அவர்களை வளரவிட்டுவிட்டு, இப்போது அவர்கள் சமூக, பண, அரசியல் செல்வாக்கோடு திகழும்போது ஒன்றும் செய்யமுடிவதில்லை.

அரசு நிர்வாகத்தில் இருக்கும் அவலமான நிலை

நிர்வாணமானவர்கள் இருக்கும் ஊரில், கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். அரசு எந்திரத்தில் இப்போது அங்கங்கே ஆயில் போட்டால்தான் ஆகவேண்டிய காரியங்களே ஆகும் நிலையிருக்கிறது. அதுவும் காசுக்காக எதுவும் செய்யும் அரசும், ஊழியர்களும் பெருகிவரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பணிகளில் சேர, தேர்தல்களில் போட்டியிட, வெற்றிபெற திறமையைவிட பணமே பிரதானமாக ஆகிவிட்டது. ஆகவே, கிடைக்கும் பதவியை வைத்து, செலவிட்ட பணத்தை எவ்வளவு விரைவில் எடுத்து மேலும் லாபம் பார்க்கவேண்டிய நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேர்மையானவர்கள் இருப்பதே அபூர்வமாகிவிட்டது.அப்படியும் நேர்மையாய் இருப்பவர்களுக்கு இச்சமூகம் "பொழக்கத்தெரியாதவன்(ர்)" என்ற பட்டப் பெயர் கொடுக்கிறது. இந்தச் சமூக சூழலில் நேர்மை என்பது சொல்லப்பட மட்டுமே கூடிய, செயல்படுத்தப்படக் கூடாத ஒன்றாக ஆகிவிட்டது.

தாமதப்படுத்தப்படும் தண்டனைகள்

நமது நாட்டில் எந்தக் குற்றத்திற்கும் தண்டனை கிடைக்க ஏற்படும் காலதாமதம் குற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது.

தேவைகள் பெருகிப் போனது

இன்றய "Consumerism" சூழலில் விளம்பரங்களினாலும், சமூக அழுத்தத்தினாலும், தேவைகள் பெருகிப் போனது. தேவைக்காக பொருள் வாங்கியது போய், விளம்பரங்களுக்காக வாங்கவேண்டிய அழுத்தம் வந்தது.


என்ன செய்யலாம் ?

முதலில் நேர்மையான அதிகாரிகளுக்கு பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும்,  சட்டப் பாதுகாப்பும் தேவைப்படுகிறது.

இவர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது, மீடியாவில் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவிகள் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் இவர்களை ஒதுக்கிவைக்கலாம். (இவர்களுக்குத்தான் யார் தயவும் தேவை இல்லையே... :-(   ). முக்கியமாக பள்ளி கல்லூரிகளில் தவறு செய்பவர்களின் குழந்தைகளிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படச்செய்யவேண்டும். இவர்களாலேயே இவர்களின் பெற்றோரைத் திருத்த முடியும். ஏனெனில் இவர்களுக்காக சொத்து சேர்ப்பதற்காகத்தானே த்வறுகள் செய்கிறார்கள்...

குற்றச்செயல்களுக்கு உடனடியான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.  லஞ்சம் ஊழல் இவற்றுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்படவேண்டும். முக்கியமாக சிலராவது கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.  அப்போதுதான் தண்டனைகளுக்கான பயம் இருக்கும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடுகிறது..



யோசிக்க நல்லாத்தான் இருக்கு... நடக்கணுமே...

மஹாலிங்கமே சரணம்... ஏதாவது செஞ்சு இந்த நிலைய மாத்துங்க.. அரோஹரா...

13 comments:

பாலா said...

Hi Sankar,

Your thoughts is good, but implementing is not easy. very tough to live this world, better we will go to sathuragiri and stay there for long life. dont want to see this world.

Bala

Sankar Gurusamy said...

Dear Bala,

We all are the children of God created by HIM into this world. Let us cry to the extent possible to HIM to do something to cure these Illnesses. That is what I am ding thru my Blogposts. These are a kind of Prayer to Him in Sathuragiri to act... I feel this is our duty...

Thanks for your visit and comments...

Moorthy said...

There is a saying..''law without force is impotent''. That is what happening here.Law makers dont want to change the system..Makers of law makers will suffer. This is the high time for our laws to be revised and to be circulated for public voting, rather than to be passed in the legislations..

Sankar Gurusamy said...

Murthy, True. Let us hope for some Good Change happening in near future.

Thanks for your visit and comments

சக்தி கல்வி மையம் said...

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

சக்தி கல்வி மையம் said...

முதன்முதலில் உங்கள் தளம் வருகிறேன்..
அனைத்து பதிவுகளிலும் சமூகப் பார்வை..
பதிவுலகில் ஒரு புரட்சி மலரட்டும்..
வாழ்த்துக்கள்... தொடருங்கள் நண்பா...

செங்கோவி said...

தொடர்ந்து நல்ல விஷயங்களை மட்டுமே எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது..உங்கள் பதிவுகள் ஆழமான கருத்துக்களை முன்வைக்கின்றன...பாராட்டுக்கள்.

Sankar Gurusamy said...

Dear Sakthistudycentre-Karun, Thanks for your visit. Keep visiting frequently :-)

Everybody have such social sense, I am just expressing that in my Blog...

Sankar Gurusamy said...

Dear Sengovi, I get only limited time to wrte blog. My Every BlogPost is written within maximum of One hours time (on Population)... So I put in only what is disturbing me most... My mental pressure is released in my Blogposts.. :-)

Thanks for your visit.

shanmugavel said...

தங்களைப் போன்றவர்கள் பெருக வேண்டும்

Sankar Gurusamy said...

Dear Shanmugavel, Thanks for your visit and comments.

http://machamuni.blogspot.com/ said...

ஐயா நானும் ஓர் பொதுத்துறை நிறுவனத்தில் அரசு அதிகாரிதான்,
ஆனால் நேர்மையான என்னை லஞ்சம் வாங்கிக் கொடுக்காததற்காக இளநிலை அதிகாரியான நான் பல முறை இடமாறுதலால் பந்தாடப்பட்டு இருக்கிறேன்.மேலும் லஞ்சம் வாங்குபவர்கள் அதன் மூலம் பலரை விலைக்கு வாங்கி(பல தொழிலாளர்களின் தலைவர்களாக இருப்பவர்களை)லஞ்சம் வாங்காத அதிகாரிகளை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்து இவர்களை லஞ்சம் வாங்குபவர்களாக சித்தரிக்கும் போக்கு இப்போது வளர்ந்து வருகிறது.நீ ஒருவன் லஞ்சம் வாங்காவிட்டால் இந்த உலகம் திருந்திவிடுமா என்று சொல்லும் போக்கு வளர்ந்து வருகிறது.லஞ்சம் வாங்காதனை லஞ்சம் வாங்கி தனக்கு கொடுக்க மேலதிகாரிகள் நிர்ப்பந்திக்கும் சூழல் அதிகரித்து வருகிறது.லஞ்சம் வாங்காதவன் தான் லஞ்சம் வாங்கவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.(நான் லஞ்சம் பெறவில்லை என நிரூபிக்க நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது.)இப்படி நேர்மையாக இருக்க போராட வேண்டி இருக்கிறது.இருந்தாலும் பிழைக்க தெரியாமல் போராடிக் கொண்டு இருக்கிறேன்.கவனிக்கவும் பிழைத்தல் என்றால் பிழை செய்தல்.ஆரம்பத்தில் இருந்தே பிழைக்கத் தெரியாதவனாக இருக்கின்றாயே!என்று கூறுவார்கள்.பிழை செய்யத் தெரியாமல் நான் இருந்துவிட்டுப் போகிறேனே!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Sankar Gurusamy said...

Dear Mr.Sami Azhagappan, You are really Great.. Very rare to see such people... I appreciate your guts. But most people cannot afford to live like this. If some body does like that they will face a big struggled battle to survive day today life...

Thanks for your visit and comments..