நம் தேசத்தில் நிலவும் ஆட்சி முறையின் லட்சணம் பற்றியும், லஞ்ச ஊழல்கள் பற்றியும் ஒரு சில மாதங்களாக ஊடகங்களில் பரபரப்பாக இருந்தது. கிரிக்கெட் உலகக் கோப்பை வந்ததும் அது கொஞ்சம் அடங்கி இருந்தது. இப்போது மீண்டும் திரு அன்னா ஹசாரே புண்ணியத்தில் பரபரப்பாகி இருக்கிறது.
தேசிய அளவில் பிரபலமாக உள்ள ஒவ்வொருவரும் இந்த செய்தியை நம் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
திரு அன்னா ஹசாரே ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்தி நம் தேசத்தில் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்த அனைத்து பிரபலங்களும் உதவ வேண்டும்.
அப்போதுதான் ஒரு எகிப்தில், ஒரு டுனீசியாவில் ஏற்பட்டது போன்ற ஒரு மாற்றம் நம் தேசத்துக்கும் வர ஒரு வாய்ப்பு ஏற்படும்.
சில இந்தி சினிமா நட்சத்திரங்கள் முன் வந்து இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இன்னும் பல பகுதிகளிலிருந்து ஆதரவு இல்லை.
முக்கியமாக, நம் தமிழக பிரபலங்களிடையே இதுபற்றிய பெரிய தாக்கம் இல்லாதது மிக வருத்தமாக இருக்கிறது.
தமிழக ஊடகங்களிலும் இது பற்றிய செய்தியை நமது தேர்தல் செய்திகள் அமுக்கிவிட்டன. தேசிய ஊடகங்களில்தான் இதுபற்றிய செய்திகள் பரபரப்பாக இருக்கின்றன.
ஆனால் இந்தப் பரபரப்புகள் எல்லாம், அடுத்து IPL கிரிக்கெட் வரும் வரைதான். அதன்பிறகு நமது ஊடகங்களின் தேசபக்தியும், நாட்டுப் பற்றும், IPL ல் ஏறிவிடும்.
எனக்கு ஒரு விசயம் இன்னும் புரியவில்லை. நமது கிரிக்கெட் ஹீரோக்களுக்கு ஒரு சமூக ஆர்வமும் இல்லையா? இவ்வளவு பெரிய பிரச்சினை நாட்டில் வெடித்துக்கொண்டு இருக்கும்பொழுது இவர்கள் அது பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல், தம் பங்களிப்பை செலுத்தாமல் IPL விளையாடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைக்கூட செய்ய முன்வராத நமது கிரிக்கெட் நட்சத்திரங்களின் நாட்டுப் பற்று சந்தேகத்திற்கு இடமாகிறது. ஒருவேளை நம் கிரிக்கெட் வாரியம் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
நமக்கு இப்போது உடனடித் தேவை ஒரு சமுதாய எழுச்சி. அது ஓரளவுக்கு ஆரம்பிக்கும்பொழுது அதைத் தூக்கி நிறுத்த ஒவ்வொரு பிரபலமும் உதவ வேண்டும்.
செய்வார்களா???
மஹாலிங்கம், நம் நாட்டில் விரைவில் ஒரு சமுதாய எழுச்சி ஏற்பட்டு ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட நீங்கதான் அருள் செய்யணும்.
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்!!!!!
5 comments:
super
வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.
இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்
திரு சுப்பு ரத்னம் பிச்சை, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இதைக்கூட செய்ய முன்வராத நமது கிரிக்கெட் நட்சத்திரங்களின் நாட்டுப் பற்று சந்தேகத்திற்கு இடமாகிறது. //
தோனி ஆதரவு தெரிவிச்சிருக்காரே
திரு சித்தூர் எஸ் முருகேசன், இந்த செய்தியைப் படிக்கவும், முக்கியமாக அதில் உள்ள முதல் பின்னூட்டத்தை.
http://liveindia.tv/india/dhoni-comes-out-to-support-hazare%E2%80%99s-anti-corruption-movement/
உண்மையிலேயே தோனி இதை ஆதரித்திருந்தால் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு அதைப்பற்றி கூவி இருக்கும்.
ஆனால் அப்படி ஏதும் நடக்காததைப் பார்க்கும்போது எனக்கும் சந்தேகமாகவே இருக்கிறது.
அப்படி தோனி உண்மையில் இதை ஆதரித்திருந்தால் அவர் தேசப் பற்றிற்கு நான் தலை வணங்குகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Post a Comment