சுய அகங்காரம் (ஈகோ) அற்ற நிலையில் ஞானம் எளிதில் வெளிப்படும். நம் அகங்காரமும் அதன் விளைவுகளும்தான் ஞானத்தை நம்மிடம் இருந்து மறைக்கும் திரை.
முதலில் எது அகங்காரம் என்று வரையறை செய்வோம்.
1) நான் வேறு / மற்றவர்கள் வேறு என்ற வேறுபடுத்தும் உணர்வே அகங்காரம்.
2) எந்த காரணத்தால் சுகமும், துக்கமும் நம் மனதைப் பாதிக்கிறதோ அதுவே அகங்காரம்.
3) ஒரு செயல் செய்ததால் ஏற்படும் விளைவுகளை எண்ணி ஏற்படும் உணர்வுகளும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தாம்.
4) நான் என்ற அகங்கார நிலையில் செய்யும் செயல்கள் கர்மாவை உண்டு பண்ணும். அதாவது நம் நரம்பு மண்டலங்களில் ஒருவித நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
உண்மையைக் கூறினால் நம் அகங்காரம்தான் நம் அடையாளம். அது இருப்பதால்தான் நம்மால் இந்த உலகில் வாழ முடிகிறது.
நான் வாழ்கிறேன், நான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது, நான் தான் செய்யவேண்டும், என்னால்தான் முடிந்தது, என் மூலம்தான் நடக்க வேண்டும், நான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்ற உணர்வுகள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்.
இந்த உணர்வுகள்தான் நம்மைப்பற்றி நமக்குள் / சமூகத்தில் ஒரு உயர்ந்த அபிப்பிராயம் /அந்தஸ்து / மரியாதை தரும்நிலையில் வைத்திருக்கின்றன.
ஆனால் ஞானம் வேண்டுமெனில் இதை விட்டுத்தான் ஆகவேண்டும். இந்த அகங்காரத்திரை விலகினால்தான் ஞான தரிசனம் கிடைக்கும்.
இதனால் நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும். ஞானம் இதைவிட சிறப்பாக நம்மை வாழ வைக்கும்.
கடவுளே மஹாலிங்கம்.. உடனடியா இந்த அகங்காரம் அகன்று ஞானம் வர அருள் செய்யணும்.
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!
2 comments:
உன்மைதான்.அகங்காரம் மறையும்போது ஞானம் ஏற்படும்.அதற்கு முன் ஏராளமான பரிசோதனைகள் தேவைப்படும்.நல்ல பதிவு.
அன்புள்ள திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment