நம் நாட்டில் இன்றைய சூழலில் ஒருவர் உத்தமராய் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை யோசிக்கும்போது புரிகிறது.
இங்கு பெரும்பாலானோர் ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக : டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, ரேசன் கார்டு வாங்க / மாற்ற, ஒரு பத்திரம் பதிவு செய்ய, ஒரு கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் வாங்க, ஒரு பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க, ஒரு ரயில் பர்த் ரிசர்வேசன் வாங்க, போக்குவரத்து விதி மீறலுக்காக, வீடு கட்ட அனுமதி வாங்க, வேலை வாய்ப்பகத்துல நம்பர் வாங்க, இப்பிடிப் பல..
அதேமாதிரி பெரும்பாலானவர்களுக்கான நேர்மை சில சின்ன விசயங்கள்ல தவறி விடுகிறது. உதாரணமாக வரிசையில் நிக்கும்போது முன்னே போவது, சில தவறான தகவல் தந்து சலுகைகள் வாங்கிக்கறது, பொது இடங்களில் அசிங்கம் பண்ணுவது, பொது இடங்களில் கிடைக்கும் பொருளை தானே வச்சுக்கிறது, இப்பிடி சில...
இந்த வலைல நாம் நம்மை அறியாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்வோம் என்று செய்து கொண்டிருக்கிறோம்.
நிர்வாணிகள் வாழும் ஊரில் உடை அணிந்தவன் பைத்தியக் காரன் என்பது போல இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் இந்த ஜோதியில் ஐக்கியமாகாமல் இருந்தால் அவனை நிச்சயம் பைத்தியம் என்றுதான் சொல்வார்கள்.
எனவே நம் மக்களில் பெரும்பாலோனோர் இங்கு ஏதாவது ஒரு விதத்தில் ஊழல் வாதிகளே.. இன்னும் சுருக்கமாக சொன்னால் நாம் 10 ரூபாய் கொள்ளையில் பங்காளிகள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பல கோடி ரூபாய் ஊழலில் பங்காளிகள். அவ்வளவே.
இது நம் அரசியல்வாதிகளுக்கு ரொம்ப வசதியாக போய் விட்டது. யாராவது அவர்களை எதிர்ப்பதுபோல தோன்றினாலே இதுபோன்ற சில பழய விசயங்களை கிளரி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குவதில் இவர்கள் வல்லவர்கள்.
ஒரு அழுக்கான அரசாங்க அமைப்பை உருவாக்கி திட்ட மிட்டு மக்களை அதனுடன் உறவாட விட்டு அவர்களையும் அழுக்காக்கி, ஒரு சமூகத்தையே கெடுத்த பெருமை நம் அரசியல் தலைவர்களை சேரும்.
நம் நாட்டில் பிக் பாக்கெட் காரனுக்கு அடி உதையும், கோடிகளில் கொள்ளை அடிப்பவனுக்கு சலாமும் கிடைக்கும். இதை பற்றி எதுவும் செய்யாமல் இருக்கும் இந்த அரசாங்கம் எதுக்கு? கூட்டுக் கொள்ளையில் மேலும் பலரை இழுத்துவிடவா??
நம் தேசத்தின் மீது உண்மையான அக்கரை கொண்ட யாருக்கும் இதைப் பற்றி நினைக்கும் போது ரத்தம் கொதிக்கும்.
நம் தேசத்தின் மீது உண்மையான அக்கரை கொண்ட யாருக்கும் இதைப் பற்றி நினைக்கும் போது ரத்தம் கொதிக்கும்.
இதுக்கு என்னதான் வழி??? என்றாவது இது முடியுமா??? நமக்கு விமோசனம் உண்டா??
என்னால கீழ்க் கண்ட வழிகளைத்தான் நினைக்க முடியுது :
1) இருக்கிற அனைத்து ஊழல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்தி தம் சொத்துக்களை நாட்டுடைமையாக்கி உண்மையான் சேவையை, நல்லாட்சியை தருவது. இதுக்கு சாத்தியம் ரொம்ப குறைவு ன்னாலும் இதுதான் மிக சுலபமான தீர்வு.
2) நம் ராணுவம் நாட்டை ஆட்சி செய்வது. ஒரு தேசப்பற்றுள்ள ராணுவ வீரன் இதை சுத்தம் செய்வது. எல்லாருக்கும் கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக பழகீரும். குறைந்தது ஒரு 10 வருடம் இந்த தண்டனை நம் தேசத்துக்கு / ஜனநாயகத்துக்கு தேவை.
3) ஒரு ஊழிப் பிரளயம் மாதிரி வந்து நம் தேசத்தின் / உலகத்தின் வரை படமே மாறிப் போறது. இது ரொம்ப கஷ்டம். இதில் தப்பிச்சவங்களுக்கு அதுக்கப்புறம் ஒவ்வொரு வினாடியும் / நாளும் நரகத்துல இருக்குற மாதிரி இருக்கும். இது நடக்காம இருந்தா நல்லது.
இதன் வரிசை சுலபத்திலிருந்து கடினமானது வரை இருக்கிறது.. ஆனால் இவற்றிற்கான சாத்தியங்கள் வரிசை கீழிருந்து மேலாக இருப்பதுதான் கசப்பான உண்மை.
கடவுளே மஹாலிங்கம் !! இந்த மோசமான நிலையில் இருந்து என் தேசத்தையும் மக்களையும் நீங்கதான் பத்திரமா கரை சேர்க்கணும்.
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!
5 comments:
ஊழலுக்கு எதிரான நல்ல கருத்துக்களுடன் பகிர்ந்துள்ளிர்கள்
http://mahaa-mahan.blogspot.com/
அன்புள்ள மஹான் தமேஷ் , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//இந்த வலைல நாம் நம்மை அறியாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்வோம் என்று செய்து கொண்டிருக்கிறோம்.
நிர்வாணிகள் வாழும் ஊரில் உடை அணிந்தவன் பைத்தியக் காரன் என்பது போல இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் இந்த ஜோதியில் ஐக்கியமாகாமல் இருந்தால் அவனை நிச்சயம் பைத்தியம் என்றுதான் சொல்வார்கள்.//
true. good sankar
why didn't tamilmanam?
அன்புள்ள ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தமிழ் மணம் ஏன் வேலை செய்ய வில்லை என்று தெரியவில்லை... பார்க்கிறேன்.. நன்றி..
Post a Comment